இன்றைய டிஜிட்டல் உலகில் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருவது கவலை அளிக்கும் விஷயமாக மாறி இருக்கிறது. சமீபத்தில் அகமதாபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரிடம் போதைப் பொருள் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கில் சிக்கப்பட்டுள்ளதாக கூறி சைபர் மோசடியாளர்கள் லட்சக்கணக்கான ரூபாயை ஏமாற்றியுள்ளனர். இந்தச் சம்பவம் மோசடிகள் அதிகரிப்பதை மீண்டும் ஒருமுறை நமக்கு உணர்த்துகிறது. இது போன்ற விஷயங்களில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்து கொள்வது அவசியம்.
தற்போது யாருக்கு அழைப்பு விடுத்தாலும் டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி குறித்து ஒரு முன்னெச்சரிக்கை அறிவிப்பு வெளியாகிறது. அப்படி இருந்தும் இன்னும் ஏமாறும் மக்களின் எண்ணிக்கை குறையவே இல்லை. அப்படித்தான் இந்த சம்பவத்திலும் நடந்துள்ளது.

அகமதாபாத்தில் சாப்ட்வேர் டெவலப்மெண்ட் பிசினஸ் செய்து வருபவர் தான் கமலேஷ் துதாரா. இவருக்கு சமீபத்தில் ஆள் பேர் தெரியாத நபரிடமிருந்து அழைப்பு வந்துள்ளது. அந்த அழைப்பில் போதைப் பொருள் மற்றும் பணம் அடங்கிய பார்சல் அனுப்பப்பட்டதாக அழைப்பு விடுத்த நபர் கூறியுள்ளார்.
அந்த பார்சலில் 5 பாஸ்போர்ட்டுகள், 35,000 பணம், 200 கிராம் போதைப் பொருள் மீட்கப்பட்டதாகவும் கூறியுள்ளார். இப்படி கூறியது மட்டுமல்லாமல் சொல்வதற்கெல்லாம் இணங்கவில்லை என்றால் டிஜிட்டல் அரெஸ்ட் செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளனர்.
இதைக் கேட்ட கமலேஷ் பயந்து போனார். பதட்டமடைந்து மோசடிக்காரர்கள் சொன்ன விஷயத்தை எல்லாம் செய்ய தொடங்கியுள்ளார். அப்போது வீடியோ காலில் மும்பை போலீஸ் அதிகாரி என கூறிக்கொண்டு ஒருவர் தோன்றியுள்ளார். இந்த விஷயம் குறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என்றும், ஒரு ஹோட்டலில் தங்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
தாங்கள் சொல்லும் நிபந்தனைகளுக்கு இணங்கவில்லை என்றால் கைது நடவடிக்கை எடுத்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார். உடனே கபிலேஷ் தனது குடும்பத்தினரிடம் இரண்டு முதல் மூன்று நாட்கள் வெளியூர் செல்ல உள்ளதாக தெரிவித்துவிட்டு அகமதாபாத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் ரூம் முன்பதிவு செய்தார். போதை பொருள் வழக்கில் இருந்து தப்பிக்க பணத்தை டெபாசிட் செய்ய வேண்டும் என்று மோசடிக்காரர்கள் கூறியுள்ளனர்.
உடனே கமலேஷும் மோசடிக்காரர்களின் கணக்கிற்கு 56.52 லட்சத்தை அனுப்பியுள்ளார். ஒருவேளை குற்றமற்றவர் என்ற நிரூபிக்கப்பட்டால் அந்த தொகையை திருப்பித் தருவதாகவும் மோசடிக்காரர்கள் கூறியுள்ளனர். இதனால் அதன் பிறகும் இரண்டு நாட்கள் ஹோட்டல் அறையில் தங்கி இருந்த கமலேஷ், மீண்டும் அவர்களை தொடர்பு கொண்டபோது இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து அப்போதுதான் போலீசில் புகார் அளித்தார். ஆனந்த நகர் போலீசார் சைபர் மோசடிக்காரர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.
டிஜிட்டல் அரெஸ்ட் என்பது இல்லாத ஒன்றாகும். ஒரு வேலை யாரேனும் தவறு செய்தால் அவர்களை நேரடியாக வந்து போலீசார் கைது செய்வார்களே தவிர, இதுபோன்ற டிஜிட்டல் அரஸ்ட் என்பது கிடையவே கிடையாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஒருவேளை உங்களுக்கும் இதுபோன்ற அழைப்புகள் வந்தால் அது மோசடியாக இருக்கலாம். நீங்கள் செய்யாத குற்றத்திற்காக பணத்தை அனுப்பி ஏமாறாமல் அருகில் உள்ள காவல் நிலையங்களுக்கு செல்லலாம்.


Click it and Unblock the Notifications