சில காலமாக அடிக்கடி மோசடி சம்பவங்களைப் பற்றி பார்த்து வருகிறோம். இதில் விவரம் தெரியாதவர்களை விட நன்கு படித்த நபர்களே அதிகம் ஏமாறுகின்றனர். அப்படித்தான் அகமதாபாதை சேர்ந்த 26 வயதான சாப்ட்வேர் டெவலப்பர் ஒருவர் மோசடிக்கு பலியாகி ரூ. 1 லட்ச ரூபாயை இழந்துள்ளார். இந்தச் சம்பவம் எப்படி நிகழ்ந்தது? என்பது குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
கட்லோடியாவின் சிந்துபவன் சாலையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார் ஏமாற்றப்பட்ட இந்த இளைஞர். ஒரு நாள் பாதிக்கப்பட்ட இளைஞருக்கு தானியங்கி அழைப்பு வந்துள்ளது. அதில் டெலிவரி செய்யப்படாத கொரியர் அந்த இளைஞரின் பெயரில் வந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. சிறிது நேரத்தில் இளைஞரிடம் 1-ஐ பிரஸ் செய்யுமாறு கூறப்பட்டது. இதை நம்பிய அந்த இளைஞரும் 1-ஐ பிரஸ் செய்துள்ளார்.

அதன் பிறகு அழைப்பு ஒரு நபரிடம் மாற்றப்பட்டது. அந்த நபர் பாதிக்கப்பட்ட இளைஞரின் ஆதார் விவரங்களை துல்லியமாக கூறியுள்ளார். இதை கேட்ட அந்த இளைஞருக்கு ஷாக் ஆகியுள்ளது. அப்போதுதான் தனக்கு வந்துள்ள கால் உண்மை என்று பாதிக்கப்பட்ட இளைஞர் நம்பியுள்ளார்.
இப்படியே பேசிக் கொண்டிருந்த மோசடிக்காரர் சுனில் தத் என்ற போலி சைபர் க்ரைம் அதிகாரிக்கு போனை மாற்றியுள்ளார். இளைஞரின் பெயரில் வந்திருக்கும் பார்சலில் 6 வெவ்வேறு பேங்குகளின் கிரெடிட் கார்டுகள் இருப்பதாகத் தெரிவித்தார். அதோடு இது தண்டனைக்குரிய குற்றம் என்று கூறி அந்த இளைஞரை டிஜிட்டல் அரெஸ்ட்டில் வைப்பதாகவும் தெரிவித்தார்.
அனைத்து செயல்முறையும் உண்மையானது என்பது போல காண்பிப்பதற்காக அமலாக்க இயக்குனரகத்தின் மூலம் பெறப்பட்ட அரெஸ்ட் வாரண்டை காண்பித்துள்ளார். இதையெல்லாம் பார்த்த அந்த இளைஞர் பயந்து போய் மோசடிக்காரர்கள் சொன்ன விஷயங்களுக்கெல்லாம் இணங்கியுள்ளார்.
மோசடிக்காரர்களின் அறிவுறுத்தலின்படி அந்த இளைஞர் ரூ.1 லட்சத்தை தனது வங்கி கணக்கில் இருந்து அவர்களுக்கு மாற்றியுள்ளார். பணத்தை மாற்றிய பின்னர் தொடர்பு கொண்ட இருவரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. அதன் பிறகு தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்து கொண்ட அந்த இளைஞர் அருகில் இருக்கும் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார்.
இத்தகைய மோசடிகளில் இருந்து உங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது?:
அழைப்பாளரின் அடையாளத்தைச் சரி பாருங்கள்: உங்கள் தனிப்பட்ட விவரங்கள் சிலவற்றை மோசடிக்காரர்கள் கொண்டிருந்தால் ஒருபோதும் அவற்றை நம்ப வேண்டாம். எந்த ஒரு அரசாங்க அதிகாரியும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உங்களிடம் பணம் கேட்க மாட்டார்கள்
தானியங்கி அழைப்புகளில் பட்டன்களை அழுத்துவதைத் தவிர்க்கவும்: உங்களுக்கு தானியங்கி அழைப்புகள் வந்தால் அவற்றின் வழிமுறைகளை பின்பற்றுவதற்கு முன்பு உண்மையான அதிகாரப்பூர்வ எண்ணில் இருந்து அழைப்பு வந்துள்ளதா? என்பதை சரி பாருங்கள்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications