சென்னை: சமீப காலமாக, இந்தியாவில் சமையல் பற்றிய திகில் செய்திகள் வந்து கொண்டே தான் உள்ளது. அந்த வரிசையில் அகமதாபாத்தில் உள்ள தேவி தோசா எனும் ஒரு பிரபலமான உணவகத்தில் சமைக்கப்பட்ட சாம்பாரில் ஒரு இறந்த எலி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மக்களிடையே பெரிய அதிர்ச்சியையும் கவலையையும் உண்டாக்கி உள்ளது.
தேவி தோசா உணவகத்தின் வாடிக்கையாளரில் ஒருவர், இந்த நிகழ்வைப் பற்றி அம்தாவத் முனிசிபல் கார்ப்பரேஷனிடம் (AMC) புகார் அளித்துள்ளார். அவர் அளித்த அந்த புகாரின் மூலம் இந்த சம்பவம் மக்களிடையே தெரிய வந்துள்ளது. இந்த நிகழ்வை கேள்விப்பட்ட AMC, சுகாதார மீறல் காரணமாக அந்த உணவகத்தின் உரிமையாளருக்கு நோட்டீசை அனுப்பி உள்ளது.

"அஹமதாபாத் கார்ப்பரேஷனின் அனைத்து வணிக தொழிலாளர்களும் உங்களை நம்பி வரும் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் உணவில் மிகவும் கவனமாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன், நீங்கள் கவனமாக இருந்தால் இதுபோன்ற சம்பவங்களைத் தவிர்க்க முடியும்" என்று AMC-இன் உணவு பாதுகாப்பு அதிகாரி பவின் ஜோஷி ANI செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறினார்.
சாம்பாரில் இறந்த நிலையில் உள்ள எலியின் வீடியோ சமூக வலைதளங்களில் பலரின் கவனத்தையும் விமர்சனத்தையும் ஈர்த்து வருகிறது. இந்த வீடியோவை கண்ட மக்கள் அவர்களின் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.
எப்போதும் விலை உயர்ந்த கடைகளுக்கு செல்வதனால் மட்டும், அவர்கள் தரமான உணவுகளை தருவார்கள் என்று நம்புவதை நிறுத்துங்கள். இப்போது அவர்களின் சுயரூபம் தெரிந்து விட்டது" என்று ஒரு இன்ஸ்டாகிராம் பயனர் கமெண்ட் செய்துள்ளார்.
நாம் என்ன செய்தோம்..மழை பிரச்சனை,வெப்ப பிரச்சனை, இப்போது உணவு பிரச்சனை என்று மற்றொருவர் எழுதியுள்ளார்.
இது போன்ற ஒரு சம்பவம் குஜராத் ஜாம் நகரில் நடந்துள்ளது. அங்கே உருளைக்கிழங்கு சிப்ஸ் பாக்கெட்டில் தவளையை கண்டறிந்துள்ளனர். ஒரு நான்கு வயது சிறுமி கடைக்கு சென்று ஒரு உருளைக்கிழங்கு சிப்ஸ் பாக்கெட்டை வாங்கி உள்ளார். அந்த சிப்ஸ் பாக்கெட்டில் இறந்த நிலையில் ஒரு தவளையை கண்டுபிடித்துள்ளனர். அந்த தவளையை கண்டறிவதற்கு முன்பு அவர் ஒரு சில சிப்ஸ்களை உண்டதாகவும் கூறப்படுகிறது.
நாம் சாப்பிடும் இன்னும் பல பொருட்களில் இது போன்ற நிகழ்வுகள் நடந்திருக்கலாம். ஆனால் அது நமக்குத் தெரிய வாய்ப்பில்லை. அதனால் முடிந்தவரை வெளியில் சென்று உணவு அருந்துவதையும், junk food-களை வாங்கி சாப்பிடுவதையும் குறைத்துக் கொள்ளுங்கள். அவை நமது உடலுக்கு தீங்கிழைப்பவை மேலும் அவற்றில் சுவைக்காக அஜினோமோட்டோ போன்ற பொருட்களை சேர்த்து விற்பனை செய்கின்றனர்.
அதேபோல மற்றொரு குடும்பம் ஹெர்சிஸ் சாக்லேட் சிரப்பில் இறந்த எலியை கண்டுபிடித்தது. தொடர்ந்து கடைகளில் இருந்து வாங்கப்படும் பொருட்களில், இது போன்ற விஷயங்கள் கண்டறியப்படுவது வாடிக்கையாளர்களிடையே பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications