இனி பாஸ் இல்ல.. AI தான் லே-ஆப் செய்யப் போகுது! அதிர்ச்சி கணிப்பை வெளியிட்ட அமெரிக்க நிறுவனர்!

ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பம் அலுவலகங்களில் அன்றாடப் பணிகளைச் செய்து வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் உயர்மட்ட நிர்வாகப் பொறுப்புகளிலும் AI தொழில்நுட்பம் மெல்ல மெல்ல நுழையத் தொடங்கியுள்ளது. எதிர்காலத்தில் நிறுவனங்களில் இருக்கும் சிஇஓ அதிகாரிகள் பணி நீக்கம் தொடங்கி முக்கிய வணிக முடிவுகளை எடுப்பது வரை அனைத்திற்கும் AI ஏஜெண்டுகளை பயன்படுத்துவார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இதைத்தான் ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனரும் கூறியுள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்த AI ஸ்டார்ட்அப் நிறுவனமான "அரிஸ்ட்" என்னும் நிறுவனத்தின் இணை நிறுவனரான இருக்கும் மைக்கேல் ஐயோஃப்.. ஃபார்ச்சூன் 500 இன்னவேஷன் ஃபோரமில் பேசியபோது, அடுத்த சில ஆண்டுகளில் நிறுவனங்கள் எடுக்கும் முக்கியமான மாற்றங்கள், பணி நீக்கங்கள், பணியமர்த்தல் போன்றவற்றை ஏஐ ஏஜெண்டுகள் தான் தீர்மானிக்கும் என்று கூறினார்.

இனி பாஸ் இல்ல.. AI தான் லே-ஆப் செய்யப் போகுது! அதிர்ச்சி கணிப்பை வெளியிட்ட அமெரிக்க நிறுவனர்!

உலகளவில் மிகப்பெரிய 500 நிறுவனங்களில் 15 சதவீதத்திற்கும் அதிகமான நிறுவனங்கள் அரிஸ்ட் நிறுவனத்தின் ஏஐ சேவையை பயன்படுத்தி வருகின்றன. ஒரு நிறுவனத்திற்கு என்னென்ன தடைகள் ஏற்படுகிறது? எதனால் வளர்ச்சி பாதிக்கிறது? என்பதை கண்டுபிடிக்க அரிஸ்ட் நிறுவனத்தின் AI தொழில்நுட்பம் உதவி வருகிறது.

Also Read

ஏஐ எல்லா ஊழியர்களிடமும் பேசி.. அவர்களிடம் இருந்து விஷயங்களைப் புரிந்து கொள்கிறது. அதாவது எல்லோரிடமும் ஒரே மாதிரியான கேள்விகளை கேட்பதில்லை. ஊழியர்களை தேர்ந்தெடுத்து அவர்களிடம் என்ன பேச வேண்டும்? ஊழியர்கள் சொல்லும் பதிலுக்கு ஏற்ப அடுத்து என்ன கேள்வி கேட்க வேண்டும்? என்பதை தீர்மானிக்கிறது. இதனால் ஊழியர்களுக்கு என்ன பிரச்சனை இருக்கிறது? எதனால் நிறுவனத்தின் வளர்ச்சி பாதிக்கிறது? என்பது எளிதில் தெரிந்துவிடுகிறது.

ஊழியர்கள் சொல்லும் கருத்து என்ன?, அவர்களுக்கு அனுபவம் இருக்கிறதா? முந்தைய வேலை திறன் எப்படி இருக்கிறது? வேலையில் இருக்க அவர்களுக்கு ஆர்வம் இருக்கிறதா? என்ற எல்லா தகவல்களையும் AI தொழில்நுட்பம் சேகரித்து விடுகிறது. இதை சாதாரண கன்சல்டிங் நிறுவனங்கள் தெரிந்து கொள்வதற்கு பல மாதங்கள் வரை எடுக்கும். ஆனால் AI சிஸ்டம் வெறும் 3 நாட்களில் முழுமையாக முடித்து விடும். இதனால் நிறுவன CEO-க்களின் பிரச்சனையை எளிதில் கண்டுபிடித்து தேவையான மாற்றங்களை செய்ய முடியும். இது மட்டுமல்ல இன்னும் சில காரணங்களால் மனிதர்களை விட AI இன்னும் சிறப்பாக முடிவெடுக்கும் என்று மைக்கேல் கூறியுள்ளார்.

மைக்கேல் ஐயோஃப் மனிதர்களை விட AI சிறப்பாக செயல்படும் என நம்புவதற்கு காரணம் என்ன?: நிறுவனத்திற்குள் இருக்கும் பிரச்சினைகளை கண்டுபிடித்து தீர்க்க AI உதவிகரமானதாக இருக்கும். ஊழியர்களின் பிரச்சினைகளை கேட்டு எந்த விருப்பு வெறுப்பும் இல்லாமல் புரிந்து கொள்வதில் மனிதர்களுக்குள் சில பிரச்சனைகள் அவ்வப்போது ஏற்படும். ஆனால் சிஸ்டம் இதை சரியாக கையாளும். மற்றவர்கள் உண்மையிலேயே என்ன சொல்ல வருகிறார்கள் என்பதை கவனமாக புரிந்து கொண்டு முடிவெடுக்கும் திறன் மனிதர்களுக்கு குறைவாகவே இருக்கிறது.

இதற்காக சில நிறுவனங்கள் கன்சல்டிங் நிறுவனங்களை அணுகி நிறைய பணத்தையும் நேரத்தையும் செலவிடுகிறது. ஆனால் அப்படி செலவு செய்தாலும் சரியான காரணத்தை நிறுவனங்கள் கண்டுபிடிப்பதில்லை. கன்சல்டிங் நிறுவனங்கள் தவறான கணிப்புகளையே தருகிறது. எனவே AI வேகமாக தரவுகளை ஆய்வு செய்து தகவல்களை தருவதால் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வேலை செய்யும் பெரு நிறுவனங்களும் சுறுசுறுப்பாகவும் வேகமாகவும் செயல்பட முடியும் என்று மைக்கேல் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+