2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நஷ்டத்தில் இயங்கி வந்த இந்திய அரசின் விமான நிறுவனமான ஏர் இந்தியா-வை டாடா குழுமம் கைப்பற்றி தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த பின்னர் டாடா குழும நிர்வாகம் ஏர்இந்தியாவில் பல முக்கியமான மாற்றங்களை கொண்டு வந்தது.
இந்த நிலையில் டாடா நிர்வாகம் ஏர் இந்தியாவில் இரண்டாவது முறையாக VRS சலுகையை அறிவித்துள்ளது. இந்த முறை விமானத்தில் பறந்து பணியாற்றாத ஊழியர்களுக்கு ஏர் இந்தியா வெள்ளிக்கிழமை விருப்ப ஓய்வு திட்டத்தை அளித்துள்ளது.
இது ஏர் இந்தியா ஊழியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏர் இந்தியா
ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் தொடர்ச்சியான பனியாற்றி முடித்து 40 வயதுக்கு மேற்பட்ட நிரந்தர பணியாளர்களுக்கு மட்டுமே இந்த புதிய VRS சலுகை கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
விஆர்எஸ் திட்டம்
மேலும், குறைந்தபட்சம் ஐந்தாண்டுகள் தொடர்ச்சியான பணியாற்றிய கிளார்க் மற்றும் அன்ஸ்கில்டு பணியாளர்களும் இத்திட்டத்திற்கு தகுதியுடையவர்கள். இந்நிலையில் விஆர்எஸ் திட்டத்தை தேர்வு செய்வோர் இந்த சலுகையை ஏப்ரல் 30 வரையில் பெறலாம்.
2,100 ஊழியர்கள்
ஏர் இந்தியா முன்வைத்துள்ள விதிமுறைகள்படியே தற்போது இருக்கும் ஒட்டுமொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் சுமார் 2,100 ஊழியர்கள் இந்த புதிய VRS சலுகையைப் பெற தகுதியுடையவர்கள் என அறியப்படுகிறது.
11,000 ஊழியர்கள்
ஏர் இந்தியாவில் தற்போது, விமானத்தில் பறக்கும் மற்றும் பறக்காத ஊழியர்கள் உட்பட சுமார் 11,000 பணியாளர்கள் உள்ளனர். ஜூன் 2022 இல், ஏர் இந்தியா தன்னார்வ ஓய்வு சலுகையின் முதல் முறையாக அறிமுகப்படுத்தியது.
470 விமானங்கள்
ஏர் இந்தியாவைக் கைப்பற்றி ஒரு வருடத்திலேயே ஏவியேஷன் துறையில் யாரும் செய்திடாத வகையில் மிகப்பெரிய தொகைக்குச் சுமார் 470 விமானங்களைப் போயிங் மற்றும் ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து வாங்க ஒப்பந்தம் செய்தது டாடா குழுமம். இந்த ஒப்பந்தம் பலருக்கும் வியப்பு அளித்தது.
900 விமானிகள் மற்றும் 4,200 கேபின் க்ரூ
ஏர் இந்தியா 2023 ஆம் ஆண்டு மட்டும் 900 விமானிகள் மற்றும் 4,200 கேபின் க்ரூ துவக்க ஊழியர்களைப் பணியமர்த்த திட்டமிட்டுள்ளது. ஏர் இந்தியா நிறுவனத்தில் தற்போது 140 விமானங்களை இயக்கும் அளவிற்குத் தான் ஊழியர்கள் உள்ளனர். இந்த நிலையில் விமானம் மற்றும் பயண எண்ணிக்கை அதிகரித்தால் ஊழியர்கள் தட்டுப்பாடு உருவாகும்.


Click it and Unblock the Notifications