டாடா குழுமத்திற்கு சொந்தமான விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியா பெரும் நஷ்டத்தில் இயங்கி வரும் வேளையில், இந்நிறுவனத்தை லாபகரமானதாக மாற்ற சமீபத்தில் புதிய சீஇஓவாக டெவோல்டே கெப்ரெமரியம் நியமிக்கப்பட்டார்.
இவரது தலைமையில் தற்போது ஏர் இந்தியா நிறுவனத்தில் அதிரடியான நிர்வாக மற்றும் வர்த்தக மாற்றங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

செலவுகளை குறைக்கும் வண்ணம் ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனங்கள் தனித்தனியாக இயக்காமல் ஓரே நிறுவனமாக இணைந்து செயல்பட புதிய திட்டத்தை உருவாக்கியுள்ளார் டெவோல்டே கெப்ரெமரியம். இதற்கு One Air India Group என்றும் பெயரிடப்பட்டுள்ளது.
அதாவது இரு நிறுவனங்களுக்கும் மத்தியில் சேவைகள் வித்தியாகப்பட்டாலும், செயல்பாடுகள், இயக்கங்கள், ஊழியர்கள் பயன்பாடு என அனைத்தையும் பகிர்ந்து வர்த்தக தேவைக்கு ஏற்ப இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்த ஒரு மாற்றத்தின் வாயிலாக மட்டுமே விமான சேவை இயக்கத்தில் மொத்தமாக 3500 கோடி ரூபாய் வரையிலான செலவுகளை சேமிக்க முடியும் என கணக்கிடப்பட்டு உள்ளது. One Air India Group திட்டம் மூலம் 6000 கோடி ரூபாய் அளவிலான செலவுகளை சேமிக்க முடியும் என ஏர் இந்தியா குழுமத்தின் புதிய CEO டெவோல்டே கெப்ரெமரியம் தெரிவித்துள்ளார்.
ஏர் இந்தியா தற்போது பயணிகள் விமான சேவை மட்டுமே அளித்து வரும் வேளையில் மிகப்பெரிய அளவிலான சேவை விரிவாக்கத்தையும் செயல்படுத்தி வருகிறது.
இதற்கிடையில் Tewolde Gebremariam புதிய வருவாய் ஈட்டும் வழிகளை ஆய்வு செய்யும் பொருட்டு இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ஏர் கார்கோ வர்த்தகத்தில் (2026ஆம் நிதியாண்டில் 24 சதவீத வளர்ச்சி) ஏர் இந்தியா தீவிரமாக இறங்க முடிவு செய்துள்ளது, இதற்கான திட்டத்தையும் உருவாக்கத் துவங்கியுள்ளது.
இத்திட்டம் வெற்றி அடையும் பட்சத்தில் ஏர் இந்தியாவுக்கு இது முக்கிய 2ஆம் தரப்பு வர்த்தகமாக அமையும். இதோடு விமானங்களை இயக்க பயிற்சி அளிக்கும் aviation training மற்றும் சுற்றுலாத் துறை வர்த்தகத்தையும் செயல்படுத்த Tewolde Gebremariam திட்டமிட்டு உள்ளார்.
ஏர் இந்தியா நிறுவனம் 2026ஆம் நிதியாண்டில் சுமார் 22,238.23 கோடி ரூபாய் நஷ்டத்தை பதிவு செய்துள்ளது, இது முந்தைய நிதியாண்டில் 10.858.83 கோடி ரூபாய் நஷ்டமாக இருந்த நிலையில் அதிரடியாக உயர்ந்தது.
டாடா சன்ஸ் நிறுவனத்தின் சேர்மனாக என்.சந்திரசேகரனுக்கு 3வது முறையாக பதிவி நீட்டிப்பு கொடுப்பது குறித்து ஆலோசனை கூட்டத்தில் டாடா டிர்ஸ்ட் சார்பாக நோயல் டாடா மறுப்பு தெரிவித்து எல்லோருக்கும் தெரியும்.
நோயல் டாடா இதற்கு மறுப்பு தெரிவிக்க முக்கிய காரணமாக கூறியது டாடா குழுமத்தில் ஏர் இந்தியா போன்ற சில முக்கிய பிரிவுகள் நஷ்டத்தில் இயக்குகிறது என்பதாக தான் இருந்தது.
தற்போது புதிய சிஇஓ தலைமையில் ஏர் இந்தியா செலவுகளை குறைக்கும் அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது, இதேவேளையில் புதிய வருவாய் ஈட்டும் வழிகளையும் தீவிரமாக ஆராய்ந்து வருவது ஏர் இந்தியாவின் எதிர்காலம் சிறப்பாக இருப்பதை காட்டுகிறது.


Click it and Unblock the Notifications
