டிரம்ப்-ன் ஆட்டம் ஆரம்பம்.. இந்திய மீது 25% வரி.. ஈரான் பிரச்சனை முடிந்த கையோடு அடுத்த மிரட்டல்!

அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையிலான அரசு தொடர்ந்து முதலீட்டுச் சந்தையையும், வர்த்தக சந்தையையும் பதற்றத்திலேயே வைத்திருக்கும் போக்கைக் கடைப்பிடித்து வருகிறது. ஈரான் போர் தாக்குதலில் அடுத்தகட்ட முடிவுகளை எடுக்க முடியாமல் முடங்கிய டிரம்ப் அரசு தற்போது வர்த்தக போரை கையில் எடுத்துள்ளது.

டிரம்ப் அரசு ஏற்கனவே விதித்த ரெசிப்ரோக்கல் வரியை அமெரிக்க நீதிமன்றம் தடை விதித்த நிலையில், அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்யும் டாப் 16 நாடுகளின் உற்பத்தி முறையை, குறிப்பாக சந்தையின் தேவைக்கு அதிகமாக உற்பத்தி செய்து விலையை திட்டமிட்டு குறைக்கிறதா என்பதை அமெரிக்கவின் வர்த்தக அமைப்பு கடந்த 8 மாதங்களாக ஆய்வு செய்தது.

டிரம்ப்-ன் ஆட்டம் ஆரம்பம்.. இந்திய மீது 25% வரி.. ஈரான் பிரச்சனை முடிந்த கையோடு அடுத்த மிரட்டல்!

இந்த ஆய்வின் முடிவில் 14 நாடுகள் மீது சுமார் 25 சதவீதம் வரையில் வரி விதிக்கலாம் என பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. இதன் அடிப்படையில் இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்லும் பொருட்கள் மீது 25 சதவீதம் வரியை விதிக்கும் முடிவுக்கு அமெரிக்க வர்த்தக அமைப்பு பரிந்துரை செய்துள்ளது.

இந்த வரி விதிப்பு நடைமுறைக்கு வந்தால் டெக்ஸ்டைல், இன்ஜினியரிங், உணவு பொருட்கள் குறிப்பாக கடல் உணவு பொருட்கள் ஏற்றுமதி துறை கடுமையாகப் பாதிக்கும்.

Also Read

இந்தியாவை தொடர்ந்து பங்களாதேஷ், ஐரோப்பிய யூனியன், ஜப்பான், சுவிஸ், சிங்கப்பூர் மீது 20 சதவீதம் வரையிலான வரியை விதிக்க பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

USTR அமைப்பு 16 நாடுகளில் மீது துவங்கப்பட்ட விசாரணையில், 14 நாடுகள் தொடர்பான விசாரணை கடந்த 8 மாதங்களில் முழுமையாக முடிந்த நிலையில், மெக்சிகோ மற்றும் நார்வே மீதான விசாரணை மட்டும் இன்னும் முடியாத காரணத்தால் இவ்விரு நாடுகள் மீது வரி விதிப்பு அளவுகள் முடிவு செய்யப்படவில்லை.

தென்கிழக்கு ஆசியாவில் கம்போடியா, இந்தோனேஷியா, தென்கொரியா, மலேசியா, தைவான், தாய்லாந்து ஆகிய 6 முக்கிய நாடுகளும் உள்ளது.

Recommended For You

அமெரிக்காவில் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும், உலக நாடுகளை நம்பியிருக்கக் கூடாது என்பதை முக்கிய குறிக்கோளாகக் கொண்டு இருக்கும் டிரம்ப் அரசுக்கு உலக நாடுகளில் இருந்து வரும் உற்பத்தி பொருட்களைக் கட்டுப்படுத்த வரி விதிப்பு என்ற ஆயுதத்தைக் கையில் எடுத்துள்ளது.

உலக நாடுகள் தேவைக்கு அதிகமாக பொருட்களை தயாரித்து சர்வதேச சந்தையில் வர்த்தகத்திற்கு கொண்டு வருவதால் அமெரிக்காவுக்கான உற்பத்தி வாய்ப்புகள் தொடர்ந்து குறைந்து வருகிறது.

இந்த நிலையில் தற்போது US Trade Representative's (USTR) வெளியிட்ட பரிந்துரையை அமெரிக்க அரசு விரைவில் அறிவிப்பாக வெளியிடும் என அரசு அதிகாரி தெரிவித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் குறிப்பிட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+