முத்தா முத்தா 5 முதலீடு.. காஞ்சிபுரம், ராணிப்பேட்டை முதல் தூத்துக்குடி வரை.. மெகா ஜாக்பாட்..!!

முதல்வர் விஜய் மற்றும் தொழிற்துறை அமைச்சரான கீர்த்தனா தலைமையில் இன்று சென்னையில் கோவளத்தில் இருக்கும் தாஜ் ஃபிஷர்மேன்'ஸ் கோவ் ஹோட்டலில் 2வது வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர் மாநாடு நடைபெற்று வருகிறது.

இந்த மாநாட்டில் சுமார் 78 புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்படும் வேளையில் ராயல் என்பீல்ட், டைட்டன் என பல முன்னணி நிறுவனங்கள் தங்களுடைய வர்த்தகத்தை மேம்படுத்தவும், விரிவாக்கவும் தமிழ்நாடு அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளனர்.

முத்தா முத்தா 5 முதலீடு.. காஞ்சிபுரம், ராணிப்பேட்டை முதல் தூத்துக்குடி வரை.. மெகா ஜாக்பாட்..!!

தமிழ்நாட்டின் தொழில்துறை வளர்ச்சியை வேகப்படுத்தும் வகையில் 5 முக்கிய நிறுவனங்கள் மொத்தம் ரூ.7,050 கோடி முதலீடு செய்யத் திட்டமிட்டு இதற்கான ஒப்பந்தத்தைக் கையெழுத்திட்டு உள்ளன.

தூத்துக்குடி மாவட்டத்தில் துறைமுக வர்த்தகம் அதிகரித்து வரும் இதேவேளையில் பல நிறுவனங்கள் கப்பல் கட்டுமானத்திற்காகவும், பழுதுபார்ப்பு திட்டத்தை செயல்படுத்த தூத்துக்குடியை தேர்வு செய்து வருகின்றனர்.

Also Read

இந்த வரிசையில் சன்மார் குழுமம் தூத்துக்குடியில் கப்பல் பழுதுபார்ப்பு மற்றும் சிறிய கப்பல்கள் கட்டும் தொழிற்சாலை அமைக்க 1950 கோடி முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்து தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டு உள்ளது.

இதை தொடர்ந்து டாடா குழுமத்தின் டைட்டன் நிறுவனம் ஏற்கனவே ஓசூரில் மாபெரும் தொழிற்சாலை மற்றும் டிசைன் சென்டர் வைத்திருக்கும் வேளையில் அடுத்தக்கட்டமாக கிருஷ்ணகிரியில் 1500 கோடி ரூபாய் முதலீட்டில் விமானங்கள் தயாரிப்பு, செமிகண்டக்டர் மற்றும் பாதுகாப்புத் துறைகளுக்கான பிரிஷன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை அமைக்க உள்ளது.

அடுத்ததாக ராணிப்பேட்டையில் 1100 கோடி ரூபாய் முதலீட்டில் புதிய ரேடியல் டயர் உற்பத்தித் தொழிற்சாலை அமைக்க அப்பல்லோ டயர்ஸ் முடிவு செய்து இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை தமிழ்நாடு அரசுடன் கையெழுத்திட உள்ளது.

Recommended For You

காஞ்சிபுரத்தில் இருக்கும் இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ராயல் என்பீல்டு-ன் உற்பத்தி ஆலைகளை விரிவாக்கம் செய்ய 1000 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை செய்ய திட்டமிட்டு உள்ளது. இந்த முதலீட்டின் மூலம் ராயல் என்பீல்டு நிறுவனம் தனது எலக்ட்ரிக் வாகன உற்பத்தி கட்டமைப்பை மேம்படுத்த உள்ளது.

சென்னையை சுற்றி அடுத்தடுத்து பல தொழிற்சாலைகள் வர துவங்கியிருக்கும் வேளையில் தொழிற்சாலைக்கான இட தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதை முக்கிய வர்த்தக வாய்ப்பாக பார்க்கும் சிங்கப்பூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ESR இன்டஸ்ட்ரியல் பார்க்ஸ் நிறுவனம் காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் கிரேட் ஏ ரக தொழிற்சாலை, சரக்கு சேமிப்பு, போக்குவரத்து வசதிகளை கொண்ட லாஜிஸ்டிக்ஸ் பூங்கா அமைக்கத் திட்டமிட்டுள்ளது.

இதற்காக 1500 கோடி ரூபாய் அளவிலான மெகா முதலீட்டுக்கு இன்று 2வது வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர் மாநாட்டில் முதல்வர் விஜய் மற்றும் தொழிற்துறை அமைச்சரான கீர்த்தனா முன்னிலையில் கையெழுத்தானது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+