பெரும் கடன் பிரச்சனைகளால் தத்தளித்து வந்த ஏர் இந்தியாவினை அவ்வளவு எளிதில் யாரும் மறந்து விட முடியாது. ஒரு காலகட்டத்தில் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்தது.
ஓரு கட்டத்தில் ஏர் இந்தியாவின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யாவிடில், ஏர் இந்தியாவுக்கு பெரிய பூட்டாக போடுவதை தவிர வேறு வழியில்லை. இதனால் ஏர் இந்தியா ஊழியர்களின் வேலை தான் பறிபோகும் என அரசு கூறியது குறிப்பிடத்தக்கது.
இப்படி பற்பல சவால்களுக்கும் நெருக்கடிக்கும் மத்தியில் தான் ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை விற்க அரசு முடிவு செய்தது.
டாடா குழுமம் கையகப்படுத்தல்
இதனை இன்னும் மோசமாகும் விதமாக கொரோனா இன்னும் இந்த பிரச்சனையை ஊக்கப்படுத்தியது. இந்த நிலையில் தான் ஏர் இந்தியா நிறுவனத்தினை 18,000 கோடி ரூபாய்க்கு டாடா குழும நிறுவனம் கையகப்படுத்தியது. இதன் மூலம் 68 ஆண்டுகளுக்கு பிறகு ஏர் இந்தியா நிறுவனம் மீண்டும் டாடா வசமாகியது குறிப்பிடத்தக்கது.
கிராஜ்விட்டி, வருங்கால வைப்பு நிதி
இதற்கு ஆரம்பத்தில் பலதரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பினாலும், பின்னர் வேறு வழியில்லாமல் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
தற்போது ஏர் இந்தியா நிறுவனத்தினை டாடா குழுமம் வாங்கியுள்ள நிலையிலும் கூட, பொருந்தக்கூடிய சட்டங்களின் கீழ், ஏர் இந்தியாவின் ஊழியர்கள் கிராஜ்விட்டி, வருங்கால வைப்பு நிதியை தொடர்ந்து ஊழியர்கள் பெறுவார்கள் என அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
ஒப்பந்தத்தில் கையெப்பம்
இது குறித்து ராஜ்யசபாவில் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில், சிவில் விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி கே சிங், ஊழியர்களின் நலன்களை அரசாங்கம் கவனித்து கொள்ளும் என ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
ஆக அதன் படி ஊழியர்களுக்கு கிராஜ்விட்டி, பிஎஃப் சலுகைகள் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
எப்போது டாடா வசம் செல்லும்?
மேலும் ஓய்வுபெற்ற மற்றும் தகுதியுடைய ஓய்வுபெறும் ஏர் இந்தியா பயனாளிகளுக்கு கிடைக்க வேண்டிய மருத்துவ பலன்களையும் அரசாங்கம் கவனித்து கொள்ளும் என்று சிங் கூறியுள்ளார்.
இதே சமீபத்தில் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, ஏர் இந்தியாவை டாடா சன்ஸ் நிறுவனத்திற்கு மாற்றுவது அடுத்து 1 முதல் 1.5 மாதத்தில் நிறைவுபெறும் என்றும் கூறியிருந்தது நினைவுகூறத்தக்கது.


Click it and Unblock the Notifications