2022 ஜனவரி மாதம் ஏர் இந்தியாவை மத்திய அரசிடம் இருந்து டாடா குழுமம் வாங்கியது. தனியார் நிறுவனமாக ஏர் இந்தியா மாறிய பிறகு வேகமாக வளர்ச்சி கண்டு வருகிறது. தற்போது இந்நிறுவனம் தனது பல்வேறு அலுவலக இடங்களை ஒரே இடத்தில் கொண்டு வரும் பணிகளை மேற்கொண்டுள்ளது.
இதற்காக குருகிராமில் உள்ள வர்த்தக மையமான வாடிகா ஒன் ஆன் ஒன் (Vatika One on One ) வளாகத்தில், ரூ.24 கோடி ஆண்டு வாடகைக்கு 7 தளங்களை லீசுக்கு ஏர் இந்தியா எடுத்துள்ளது.

தேசிய நெடுஞ்சாலை 48ல், குருகிராம் செக்டார் 18ல் 12 ஏக்கர் பரப்பில் வாடிகா ஒன் ஆன் ஒன் வளாகம் அமைந்துள்ளது. இதில் 6 தனித்தனி டவர்கள் உள்ளன. இந்த வளாகம் ஆறு கி.மீ. தொலைவில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து சிக்னல் ப்ரீ இணைப்பை வழங்குகிறது.
ஏர் இந்தியா நிறுவனம் தற்போது வாடிகா ஒன் ஆன் ஒன் வளாகத்தில் பிளாக் 5-ல் தரை தளம் முதல் 6வது தளம் வரையிலான மொத்தம் 7 தளங்களை ஐந்தாண்டுகளுக்கு ரூ.24 கோடி ஆண்டு வாடகையில் லீசுக்கு எடுத்துள்ளது.

இது தொடர்பாக வாடிகா ஒன் ஆன் ஒன் பிரைவைட் லிமிடெட் மற்றும் ஏர் இந்தியா லிமிடெட் இடையிலான குத்தகை பத்திரம் கடந்த செப்டம்பர் மாதம் பதிவானது. பதிவு ஆவணங்களின்படி, ஏர் இந்தியா நிறுவனம் வாடிகா ஒன் ஆன் ஒன் வளாகத்தில் பிளாக் 5-ல் தரை தளம் முதல் 6வது தளம் வரையிலான 1.80 லட்சம் சதுர அடி அலுவலக இடத்தை ரூ.1.89 கோடி மாத வாடகைக்கு ஐந்து ஆண்டுகளுக்கு எடுக்கிறது. ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக ரூ.11.34 கோடியை வட்டியில்லா திரும்பபெறக்கூடிய செக்யூரிட்டி டெபாசிட்டை வாடிகாவுக்கு ஏர் இந்தியா வழங்கியுள்ளது.
இது ஏர் இந்தியா நிறுவனத்தை வளாகத்தின் பிளாக் 5ல் 180 கார் பார்க்கிங் இடம் மற்றும் 18 கூடுதல் கார் பார்க்கிங் இடங்களை பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கிறது. 3 ஆண்டுகளுக்கு பிறகு ஆண்டு வாடகை 15 சதவீதம் அதிகரிக்கும் என தகவல்.


Click it and Unblock the Notifications