கடன் பிரச்சனையில் தத்தளித்து வந்த ஏர் இந்தியாவை யாரும் வாங்கிவிட மாட்டார்களா? இப்பிரச்சனை இதனுடன் முடிவுக்கு வந்துவிடாதா? என்று பல்வேறு முயற்சிகளுக்கு மத்தியில் தான் 18,000 கோடி ரூபாய்க்கு டாடாவின் வசமானது ஏர் இந்தியா.
ஏற்கனவே ஏர் ஏஷியா, விஸ்தாரா உள்ளிட்ட விமான நிறுவனங்களை நிர்வகித்து வரும் டாடாவின் வசம், ஏர் இந்தியா மூன்றாவது நிறுவனமாக செல்ல உள்ளது.
டாடா குழுமம் 18,000 கோடி ரூபாய்க்கு கைபற்றப்பட்டுள்ளதாக கூறப்பட்டாலும், இன்னும் டாடாவின் வசம் ஒப்படைக்கப்படவில்லை. இதற்காக சில செயல்பாடுகள் இருப்பதாகவும், இதனால் இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருவதாகவும் கூறப்பட்டது.
எப்போது ஒப்படைப்பு?
இந்த நிலையில் ஜனவரி 27 அன்று டாடா குழுமத்திடம் ஏர் இந்தியா நிறுவனம் ஒப்படைக்கப்படலாம் என செய்திகள் வெளியாகியுள்ளது. ஆக ஜனவரி 27 முதல் முழுமையாக ஏர் இந்தியா டாடாவின் வசமாகலாம்.
கடந்த அக்டோபர் 11 அன்று மத்திய அரசு டாடா குழுமத்திற்கு லெட்டர் ஆஃப் இன்டெண்டினை (letter of intent )வழங்கியது. இதன் மூலம் ஏர் இந்தியாவின் 100% பங்கினை டாடாவுக்கு விற்பனை செய்வதை அரசு தரப்பு உறுதி செய்தது. எனினும் பேலன்ஸ் ஷீட்டினை இறுதி செய்வதற்கு காலக்கெடு நீட்டிக்கப்பட்டது. இதற்கான கடைசி தேதி ஜனவரி 20 என்று அறிவிக்கபப்ட்டிருந்த நிலையில், ஜனவரி 27 அன்று ஒப்படைக்கப்படலாம் என தெரிகின்றது.
புதிய மாற்றங்கள் வரலாம்
இதற்கிடையில் ஏர் இந்தியாவின் நிதி இயக்குனர் வினோத் அதன் ஊழியர்களுக்கு சில தினங்களுக்கு முன்பு ஏர் இந்தியா ஜனவரி 27 அன்று டாடா வசம் ஒப்படைக்கப்படுகின்றது. இறுதி செய்யப்பட்ட பேலஸ் ஷீட் ஜனவரி 24 அன்று நிறுவனத்திடன் ஒப்படைக்கப்படவுள்ளது. ஆக டாடா குழுமம் அதனை மதிப்பாய்வு செய்து, புதிய நடவடிக்கைகளை எடுக்கலாம். புதிய மாற்றங்கள் வரலாம் என கூறியிருந்தது இதனை இறுதி செய்யும் விதமாக இருந்தது.
கடினமாக உழையுங்கள்
3ஏர் இந்தியா பரிமாற்ற நடவடிக்கைகளுக்கு நாம் கடுமையான பணியினை செய்துள்ளோம். அடுத்த 3 நாட்களுக்கு கடினமான பணிகள் இருக்கலாம். ஆக நாம் விலகுவதற்கு முன்பு உங்களால் முடிந்ததை சிறப்பாக செய்யுங்கள் என அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன் என கூறியிருந்தார். மேலும் கொடுக்கப்பட்ட பணியினை முடிக்க இரவு வெகு நேரம் உழைக்க வேண்டியிருக்கலாம். ஆக இதற்கு ஊழியர்களின் ஒத்துழைப்பு அவசியம் எனவும் கூறியிருந்தார்.
அதிரடி திட்டம்
டாடா குழுமம் 18,000 கோடிக்கு கையகப்படுத்தியிருந்தாலும், இதில் 15,300 கோடி ரூபாயினை கடன் பாகமாகவும், 2700 கோடி ரூபாயினை ரொக்க பணமாகவும் அரசுக்கு செலுத்தும் என அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அதோடு டாடா குழுமம், ஏர் இந்தியா நிறுவனத்தின் செயல்பாடுகள் மற்றும் சேவையின் தரத்தினை மேம்படுத்த 100 நாள் திட்டமொன்றை ஏற்கனவே திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. எது எப்படியோ மூன்று விமான நிறுவனங்களை கட்டியாள போகும் டாடாவின் போர்ட்போலியோவில், 69 வருடங்கள் கழித்து தாயகம் திரும்பும் ஏர் இந்தியாவுக்கு தனி இடம் இருக்கலாம். இதன் தரம், சேவை என அனைத்தும் விரைவில் மேம்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications