இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டின் நிதியியல் முடிவுகளை இன்று வெளியிட்டு உள்ளது. இக்காலாண்டு ஜியோவுக்கு மிகவும் ஸ்பெஷல் காரணம் கட்டண உயர்வுக்குப் பின்பு லாபத்தில் பெரும் வளர்ச்சியை இக்காலாண்டில் பதிவு செய்துள்ளது.
கடந்த ஆண்டின் இதே டிசம்பர் காலாண்டை ஒப்பிடுகையில் ஜியோ நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 26% அதிகரித்து ரூ. 6,861 கோடியாக உயர்ந்துள்ளது. இது முதலீட்டாளர்களைக் கவரும் முக்கிய காரணியாக இருந்தாலும், ஜியோ தனியாகப் பங்குச்சந்தையில் பட்டியலிடப்படவில்லை, ரிலையன்ஸ் கீழ் இருக்கும் காரணத்தால் இதன் தனிப்பட்ட தாக்கம் இன்று பங்குச்சந்தையில் எதிரொலிக்கவில்லை.

லாபத்தைத் தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோவின் ஆப்ரேட்டிங் வருவாய் கடந்த ஆண்டின் இதே காலாண்டில் ரூ.27,697 கோடியாக இருந்த நிலையில் இந்த டிசம்பர் 2024ஆம் காலாண்டில் 19.4% அதிகரித்து ரூ. 33,074 கோடியாக உயர்ந்துள்ளது.
மேலும் டெலிகாம் நிறுவனங்களின் வளர்ச்சியை கணிக்கும் முக்கிய காரணியாக இருக்கும் ஒரு பயனருக்கான சராசரி வருவாய் (ARPU) அளவு இந்த டிசம்பர் காலாண்டில் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் ARPU 12% அதிகரித்து ரூ. 203.3 ஆக உயர்ந்துள்ளது.
சமீபத்திய கட்டண உயர்வுகள் மற்றும் அதிக லாபம் தரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததே 12 சதவீத உயர்வுக்கு முக்கிய காரணம். ஆனால் கட்டண உயர்வின் முழு தாக்கம் இன்னும் வெளிப்படவில்லை என்ற ஜியோ நிறுவனத்தின் தரப்பில் கூறப்படுகிறது. இதன் மூலம் வரும் காலாண்டுகளில் வருவாய் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல் ரிலையன்ஸ் ஜியோ தனியாகப் பிரிக்கப்பட்டு பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும் என பேச்சு அடிப்படுவதால் ARPU அளவு தொடர்ந்து உயரும் என இந்நிறுவனம் கூறுவது முதலீட்டாளர்கள் கவனிக்கும் முக்கிய காரணமாக உள்ளது. இதேபோல் இந்த கட்டண உயர்வுக்குப் பின்பு ஏர்டெல் மற்றும் பிஎஸ்என்எல் நிறுவனங்களின் வாடிக்கையாளர் எண்ணிக்கை அதிகரித்திருப்பதும் கவனிக்க வேண்டியதாக உள்ளது.
ஜியோ 482 மில்லியன் வாடிக்கையாளர்களுடன் தனது அடித்தளத்தை வலுப்படுத்தியுள்ளது. மேலும் இக்காலாண்டில் ஜியோவின் மொத்த டேட்டா பயன்பாடு வருடாந்திர அடிப்படையில் 22% அதிகரித்துள்ளது, ஒரு வாடிக்கையாளர் மாதந்தோறும் சராசரியாக 32.3 ஜிபி டேட்டாவை பயன்படுத்துகிறார்.
கட்டண உயர்வுக்குப் பிறகு வாடிக்கையாளர் சேர்க்கை மீண்டும் முந்தைய நிலைக்குத் திரும்பியுள்ளது, மேலும் மாதாந்திர வாடிக்கையாளர் இழப்பு விகிதம் 2.0% ஆகக் குறைந்துள்ளது என்றும் காலாண்டு முடிவில் ஆகாஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ தெரிவித்துள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ 5ஜி சேவை பிரிவில் மட்டும் சுமார் 170 மில்லியன் வாடிக்கையாளர்களைக் கொண்டு உள்ளது. சீனா டெலிகாம் நிறுவனங்களுக்கு அடுத்தபடியாக உலகிலேயே அதிகப்படியான 5ஜி வாடிக்கையாளர்களை வைத்திருக்கும் நிறுவனமாக ரிலையன்ஸ் ஜியோ திகழ்கிறது.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications