கோயம்புத்தூர்: இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியமாக இருக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி-யின் மூத்த மகனும், ரிலையன்ஸ் ஜியோ தலைவருமான ஆகாஷ் அம்பானி அவரது மனைவி ஷ்லோகா மேத்தா உடன் எவ்விதமான முன்னறிவிப்பும் இல்லாமல் கோயம்புத்தூருக்கு வந்துள்ளனர்.
ஆகாஷ் அம்பானி மற்றும் ஷ்லோகா மேத்தா இருவரும் அஃபீஷியல் வேலையாக வரவில்லை, பர்சனல் வேலையாக வந்துள்ள காரணத்தால் எவ்விதமான முன்அறிவிப்பும் இல்லை. கோயம்புத்தூருக்கு தனது நண்பனின் திருமணத்தில் கலந்துகொள்ளுவதற்காக வந்துள்ளனர்.

மும்பையில் இருந்து கோயம்புத்தூருக்கு வந்த இவர்கள் 4 தனியார் விமானம், 40 கார்கள் உடன் வந்துள்ளதாகத் தகவல் வெளியானது தான் தற்போது பெரும் பேசு பொருளாக உள்ளது. ஆனால் உண்மையில் இவர்கள் 4 தனியார் விமானம், 40 கார்கள் உடன் வந்தார்களா என்பது குறித்து எவ்விதமான அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை.
தொண்டாமுத்தூர் அருகே இருக்கும் ஒரு ஆடம்பர ரெசார்ட்டில் இந்த திருமணம் செப்டம்பர் 7 அன்று நடந்ததது. கர்நாடகாவைச் சேர்ந்த தொழிலதிபர் புரந்தர் தாஸின் மகன் கோகுல் தாஸ் மற்றும் கோவை தொண்டாமுத்தூரைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் தற்போது அமெரிக்காவில் வசிக்கும் மருத்துவர்கள் ரவி மற்றும் சித்ராவின் மகள் நிக்கி-க்கு திருமணம் நடந்துள்ளது.
கோகுல் தாஸும் ஆகாஷ் அம்பானியும் நெருங்கிய நண்பர்கள் என்பதாலும், அம்பானி குடும்பத்துடன் இக்குடும்பத்திற்கு நீண்ட கால நட்பு இருக்கும் காரணத்தால் ஆகாஷ் அம்பானி ஸ்லோக மேத்தா உடன் வந்துள்ளனர். இதில் கவனிக்கப்படும் விஷயம் என்னவென்றால் விநாயகர் சதுர்த்தி தினத்தில் இந்த திருமணம் நடைபெற்றுள்ளது, மும்பை அம்பானி வீட்டில் இந்த பண்டிகை பெரிய அளவில் கொண்டாடப்படும் வேளையிலும் ஆகாஷ் அம்பானி வந்துள்ளார்.

ஆகாஷ் அம்பானி திருமணத்திற்கு ஒரு நாள் முன்பு கோயம்புத்தூருக்கு வந்துள்ளார், மும்பையில் இருந்து பயணித்து முத்தி பாளையம் பகுதியில் இருக்கும் ரிசார்ட்டில் ஆகாஷ் அம்பானி, ஸ்லோக மேத்தா தங்கினார். இந்த ரெசார்ட்டில் தங்குவதற்காக வந்த ஆகாஷ் அம்பானி வந்த போது தான் சிஎஸ்ஆர் லேண்ட்மார்க் ரிசார்ட்டு அவர்களை வரவேற்கும் வீடியோ எடுக்கப்பட்டு உள்ளது.
ரிசார்ட் உரிமையாளர் ஸ்ரவணி ரெட்டி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த ஒரு வீடியோ மூலமாக ஆகாஷ் அம்பானி கோயம்புத்தூர்-க்கு வந்த விஷயம் இணையத்தில் வைரலானது. ஸ்ரவணி ரெட்டி பதிவு செய்த வீடியோ மற்றும் புகைப்படம் தான் தற்போது இண்டர்நெட் மொத்தமும் சுற்றுகிறது.
திருமணத்தில் கலந்துகொண்ட ஆகாஷ் அம்பானி - ஷ்லோகா மேத்தா செப்டம்பர் 8 அன்று மாலை கோயம்புத்தூரின் முக்கிய அடையாளமாக மாறியுள்ள ஈஷா யோகா மையத்திற்கு சென்று ஆதியோகி சிலை, தியானலிங்கம், லிங்கா பைரவி மற்றும் சந்திரகுண்டம் மற்றும் சூரியகுண்டம் ஆகியவற்றை பார்த்தனர்.
ஈஷா யோகா மையத்தில் இருந்து நேரடியாக ஆகாஷ் அம்பானி - ஷ்லோகா மேத்தா இந்த ஜோடி கோயம்புத்தூர் விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டரில் மும்பைக்கு அன்று இரவே புறப்பட்டனர்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications