ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனம் 2024 ஜூன் 30 உடன் முடிவடைந்த காலாண்டில் நிகர லாபமாக 5,445 கோடி ரூபாய் பதிவு செய்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலாண்டில் பெற்ற ரூ.4,863 கோடியுடன் ஒப்பிடும் போது 12% அதிகமாகும். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் டெலிகாம் சேவை பிரிவு தான் இந்த ரிலையன்ஸ் ஜியோ, இந்நிறுவனத்தை முகேஷ் அம்பானியின் மூத்த மகனான ஆகாஷ் அம்பானி நிர்வாகம் செய்து வருகிறார்.
ஜூன் காலாண்டில் முடிவில் ரிலையன்ஸ் ஜியோ தனது கட்டணத்தை பெரிய அளவில் அதிகரிக்க உள்ளதாக அறிவித்த நிலையில் ஜூலை 3 ஆம் தேதி இது அமலாக்கம் செய்யப்பட்டது. இந்த கட்டண உயர்வின் மூலம் கூடுதல் வருவாய், கூடுதல் லாபத்தை பெறுவதை தாண்டி கூடுதலாக வாடிக்கையாளர்களை பிஎஸ்என்எல்-க்கு இழந்து வருகிறது. இதன் தாக்கம் எடுத்த காலாண்டில் எதிரொலிக்கும்.

இந்த நிலையில் ரிலையன்ஸ் ஜியோ ஜூன் காலாண்டில் செயல்பாட்டு வருவாயாக ரூ.26,478 கோடி பதிவு செய்துள்ளது. இது கடந்த நிதி ஆண்டின் இதே காலகட்டத்தில் பதிவு செய்யப்பட்ட ரூ.24,042 கோடியுடன் ஒப்பிடும் போது 10% அதிகமாகும்.
இதேவேளையில் காலாண்டு அடிப்படையில் பார்க்கும்போது, சென்ற காலாண்டில் (ஜனவரி-மார்ச் 2024) பதிவு செய்யப்பட்ட ரூ.5,337 கோடியுடன் ஒப்பிடும் போது, வரிக்குப் பின்னர் லாபம் (PAT) 2% அதிகரித்துள்ளது முதலீட்டாளர்களை கவரும் விஷயமாக உள்ளது. மேலும் கடந்த காலாண்டில் (ஜனவரி-மார்ச் 2024) பதிவு செய்யப்பட்ட ரூ. 25,959 கோடி வருவாய் உடன் ஒப்பிடும் போது தற்போது 2% அதிகரித்துள்ளது.
இந்தியத் தொலைத்தொடர்புத் துறையில் முன்னணி நிறுவனமான ஜியோ, டிஜிட்டல் சேவைகளில் தனது ஆதிக்கத்தைத் தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது என்பதில் எவ்விதமான சந்தேகமும் இல்லை, இதை கடந்த மாத இறுதியில் நடந்த டெலிகாம் நிறுவனங்களின் கட்டண உயர்வின் போதே தெரிந்தது. ஆனாலும் ஜூன் காலாண்டில் ஜியோ-வின் சந்தாதாரர் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு காணப்படுகிறது. ஆனால், சராசரி வருவாய் (ARPU) முந்தைய காலாண்டை ஒப்பிடும்போது மாற்றமின்றி இருப்பது கவனிக்கத்தக்கது.
2024-25 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 80 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது. இதன் மூலம், தொலைத்தொடர்புத் துறையில் சந்தாதாரர் எண்ணிக்கையில் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது. இதேவேளையில் மாதாந்திர வாடிக்கையாளரிடம் இழப்பு விகிதம் (Churn Rate) 1.7% ஆக உள்ளது. ஆகாஷ் அம்பானி-யின் ரிலையன்ஸ் ஜியோ மாஸ்காட்டியது.. லாபத்தை 12% ஜம்ப்..!!
இதை தொடர்ந்து ஒரு வாடிக்கையாளரிடமிருந்து பெறப்படும் சராசரி வருவாய் (ARPU) முந்தைய காலாண்டை ஒப்பிடும்போது ரூ.181.7 என மாற்றமின்றி இருப்பது குறிப்பிடத்தக்கது. சிறந்த சந்தாதாரர் கலவை (subscriber mix) இருந்தபோதிலும், சராசரி வருமான அளவு உயரவில்லை.
இதற்கு காரணம், ஜியோ நிறுவனம் வழங்கும் 5G சேவைகளில் இலவச டிராஃபிக் அதிகரித்து வருவதே. தற்போது வழங்கப்படும் 5G டிராஃபிக் வரம்பற்றது (unlimited) என்றாலும், அதற்கு தனி கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. இதுவே வருவாய் மந்தநிலைக்குக் காரணம்.
இதை சரி செய்யவே ஜூலை 3 ஆம் தேதி முதல் ரிலையன்ஸ் ஜியோ புதிய கட்டணத்தை அறிமுகம் செய்தது குறிப்பித்தக்கது.


Click it and Unblock the Notifications