இந்து மற்றும் ஜெயின் மதத்தை பின்பற்றுபவர்கள் ஒவ்வொரு வருடமும் அட்சய திருதியை பண்டிகையை வெகு விமர்சியாக கொண்டப்படுகிறது.
இந்த ஆண்டு சித்திரை மாதம் அமாவாசைக்கு பின் வரும் வளர்பிறை காலத்தின் 3வது நாள் 'அட்சய திருதியை' பண்டிகை கொண்டப்படுகிறது. இந்த நாளில் முதலீடு செய்யவும், புதிய விஷயங்களை துவங்கவும், புதிய பொருட்களை வாங்கவும் உகந்த நாளாக பார்க்கப்படுகிறது.

15 - 20 வருடத்திற்கு முன்பு இப்படியொரு பண்டிக்கை பெரிய அளவில் யாரும் கொண்டாடவில்லை, ஆனால் தற்போது நிலைமை மாறியுள்ளது. இதேபோல் முன்பெல்லாம் நகைகள் மட்டும் தான் இந்த அட்சய திருதியை நாளுக்கு சிறப்பு விற்பனையை அறிவிக்கும். ஆனால் தற்போது எலட்க்ரானிக்ஸ் முதல் ரியல் எஸ்டேட் வரையில் சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டு வருகிறது.
இதனால் மக்களும் அட்சய திருதியை போன்ற நல்ல நாளில் வாழ்க்கை மேம்படும் வகையில் சிறப்பான முதலீடுகளை செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நாளில் தங்கம், வெள்ளி, வைரம் என எந்தொரு மினுமினுக்கும் பொருட்களையும் வாங்கலாம். இதில் நாட்டம் இல்லாதவர்கள் கட்டாயம் லாபம் தரும் என கணிக்கப்படும் இடத்தில் முதலீடு செய்யலாம். அது ரியல் எஸ்டேட், பங்குகளாகவும் இருக்கலாம்.
இந்த வருடம் அட்சய திருதியை பண்டிகை ஏப்ரல் 22 மற்றும் ஏப்ரல் 23 ஆம் தேதி கொண்டப்படுகிறது. அட்சய திருதியை-யின் பெரும் பகுதி நேரம் ஏப்ரல் 22 ஆம் தேதி வரும் காரணத்தால் அது ஞாயிற்றுகிழமை என்பதால் ரியல் எஸ்டேட் பதிவுகளை செய்ய முடியாது. இதனால் உங்கள் முதலீட்டை சரியாக திட்டமிட்டுக்கொள்ளுங்கள்.
இந்த நாளில்ரியல் எஸ்டேட், தங்கம், பங்குகளை வாங்குவதை தாண்டி. பலர் புதிய வணிகங்கள், புதிய வலைத்தளங்கள், புதிய உறவுகள் மற்றும் பிற முயற்சிகளையும் தொடங்குகிறார்கள். இந்த நாளில் துவங்கும் விஷயம் காலம் முழுக்க நிலைத்திருக்கும், லாபத்தையும், மகிழ்ச்சியை அளிக்கும் என்பது தான் இப்பண்டிகையின் நம்பிக்கை.
முக்கிய நேரம் : அட்சய திருதியை பூஜை முகூர்த்தம் ஏப்ரல் 22, 2023 காலை 07:49 முதல் மதியம் 12:20 வரை. அட்சய திருதியை திதி ஏப்ரல் 22, 2023 அன்று காலை 07:49 மணிக்கு தொடங்குகிறது. அட்சய திருதியை திதி ஏப்ரல் 23, 2023 அன்று காலை 07:47 மணிக்கு முடிவடைகிறது.
முக்கிய நகரங்கள் : ஏப்ரல் 22 ஆம் தேதி 07:49 AM to 12:20 PM - டெல்லி, 07:49 AM to 12:19 PM - நொய்டா, 07:49 AM to 12:21 PM - குர்கான், 07:49 AM to 12:22 PM - சண்டிகர், 07:49 AM to 12:26 PM - ஜெய்ப்பூர், 07:49 AM to 12:38 PM - அகமதாபாத், 07:49 AM to 12:37 PM - மும்பை, 07:49 AM to 12:33 PM - புனே, 07:49 AM to 12:18 PM - பெங்களூரு, 07:49 AM to 12:15 PM - ஹைதராபாத், 07:49 AM to 12:08 PM - சென்னை, 05:10 AM to 07:47 AM, ஏப்ரல் 23 - கொல்கத்தா.
மேலே குறிப்பிட்ட நகரங்களில் இருக்கும் மக்கள் இந்த குறிப்பிட்ட காலக்கட்டத்தில் தங்கத்தையோ அல்லது லாபம் தரும் முதலீட்டையோ செய்வது சிறந்ததாக இருக்கும்.
More From GoodReturns

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

தங்கம் விலை தடாலடி சரிவு! மீண்டும் சரிய வாய்ப்பா? இப்போதே வாங்கலாமா?

தங்கம், வெள்ளி விலை சரிந்தது: இப்போதே முதலீடு செய்யலாமா? இன்னும் விலை குறையுமா?

தங்கம், வெள்ளி நகைகளின் இறக்குமதிக்கு செக் வைத்த மத்திய அரசு!! வியாபாரிகளின் நூதன மோசடி அம்பலம்!!

கோயம்புத்தூர் மக்களே உங்க ஊரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன?

வங்கி லாக்கரில் உள்ள உங்க நகை சேஃபா? லாக்கர் ரகசியமும் அபராதமும்?

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

மதுரை தங்கம் விலையில் இன்று அதிரடி சரிவு..! தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!



Click it and Unblock the Notifications