இந்து மக்களால் மிகுந்த ஆர்வத்துடன் கொண்டாடப்படும் விழாக்களில் ஒன்று அக்ஷய திருதியை. "அக்ஷய" என்றால் என்றும் நிலைத்திருப்பது என்று பொருள்படும். இந்த மங்களகரமான நாளில், தங்கம், வெள்ளி போன்ற உலோகங்களையும், பிற விலை உயர்ந்த பொருட்களையும் வாங்குவது வழக்கம்.
இந்நாளில் வாங்கும் பொருட்கள் என்றும் நிலைத்திருக்கும் செல்வச் செழிப்பைக் கொடுக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மக்கள் மத்தியில் இருக்கும் இந்த நம்பிக்கையை பயன்படுத்தி அக்ஷய திருதியை தினத்தன்று தங்கம் மற்றும் வெள்ளி மட்டுமே வாங்கப்பட்ட நிலையில், இப்போது வீடு, நிலம், வீட்டு உபயோக பொருட்கள், எலகட்ரானிக்ஸ் பொருட்கள் வரையில் இந்த நாளில் தள்ளுபடி அறிவிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவது வழக்கமாகிவிட்டது.

அக்ஷய திருதியை பண்டிகை இந்த ஆண்டு வைகாசி மாதம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு மே 10 ஆம் தேதி காலை 4:17 மணிக்குத் திருதியை திதி தொடங்கி, மே 11 ஆம் தேதி அதிகாலை 2:50 மணிக்கு முடிவடையும். இந்த இடைப்பட்ட நேரத்தில் தங்கம், வெள்ளி, வீடு, நிலம், வீட்டு உபயோக பொருட்கள், எலகட்ரானிக்ஸ் பொருட்களை வாங்கலாம்.
அக்ஷய திருதியை பண்டிகை எதற்காக?: புராண கதைகளின்படி, மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றான பரசுராமரின் பிறந்தநாளாகவும் அக்ஷய திருதியை கொண்டாடப்படுகிறது. இந்நாளில், பக்தர்கள் அதிகாலை எழுந்து, புனித நீராடி மஞ்சள் ஆடை அணிவார்கள். மஞ்சள் நிறம் இந்து மதத்தில் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது.
செல்வச் செழிப்பு: அக்ஷய திருதியை நாளில், பணத்திற்கும், செல்வத்திற்கும் அதிபதியான குபேர கடவுள், சிவபெருமான் மற்றும் பிரம்ம தேவன்களின் ஆசிர்வாதத்தால், அலகாபுரி என்ற புதிய ராஜ்ஜியத்தைப் பெற்றதாகக் கதைகள் சொல்லப்படுகின்றன.
எனவே, இந்நாளில் குபேர கடவுளை வழிபட்டு, தங்க ஆபரணங்கள், நிலம் போன்ற சொத்துக்களை வாங்குவது செல்வச் செழிப்பைத் தரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
அக்ஷய திருதியை நாளில் ஏழைகளுக்கு தானம் செய்வதும், புதிய வியாபாரத்தைத் தொடங்குவது, வீடு அல்லது நிலம் வாங்குவது போன்ற மங்களகரமான காரியங்களைத் தொடங்குவதும் சிறப்பான விஷயமாக கருதப்படுகிறது. இந்த ஆண்டு அக்ஷய திருதியை நாளில் நீங்க எதை வாங்கப்போறீங்க..? கடன் வாங்காமல் இருந்தால் போதும் என நீங்கள் புரிகிறது. இருந்தாலும் ஸ்வீட் எடு கொண்டாடு..


Click it and Unblock the Notifications