சென்னை: அட்சய திருதியை நெருங்கிக் கொண்டிருப்பதால் பல தங்க நகை வியாபாரிகளும் தங்களுடைய கடைகளில் புதுப்புது சலுகைகளை அறிவித்த வண்ணம் உள்ளனர். அட்சய திருதியை பொதுவாக நகை வாங்கும் நன்னாளாக பார்க்கப்படுகிறது. அதிலும், குறிப்பாக பெண்கள் அட்சய திருதியை அன்று ஒரு கிராம் தங்க நகையாவது வாங்கி விட வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பார்கள். எனவே, உங்களுக்கு உதவும் வகையில் சில கடைகள், அட்சய திருதியை நாளில் வழங்கும் சலுகைகளைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
அட்சய திருதியை அன்று மக்கள் ஏன் தங்கம் வாங்குகிறார்கள்?: 'அட்சய' என்ற சொல்லுக்கு எப்பொழுதும் குறைவில்லாதது என்பது பொருள். இதனால் அட்சய திருதியை அன்று தொடங்கக்கூடிய வணிகம், வாங்கக்கூடிய தங்க நகைகள் எல்லாம் மென்மேலும் வளரும் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் நிலவுகிறது.

அட்சய திருதியை ஒரு புதிய தொடக்கத்தின் நாளாக கருதப்படுகிறது. எனவே, அட்சய திருதியை அன்று புதிய நகைகள் மற்றும் மதிப்புமிக்க சொத்துக்களை வாங்கினால் அதிர்ஷ்டமும் சேர்ந்து கைக்கூடி வரும் என்பது ஐதீகம். இந்த ஆண்டு மே 10ஆம் தேதி அட்சய திருதியை கொண்டாடப்படவுள்ளது.
எனவே ஒவ்வொரு ஆண்டைப் போலவே, இந்த ஆண்டும் அட்சய திருதியை அன்று நகைக்கடைக்காரர்கள் சிறப்பான சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதன் பொருட்டு சில நகைக் கடைக்காரர்கள், தங்களுடைய அதிகாரப்பூர்வ இணையதளங்களில் சிறப்புச் சலுகைகளை அறிவித்துள்ளனர். அவற்றைக் கீழே காண்போம்.
ஜோயாலுக்காஸ் அட்சய திருதியை ஆஃபர்: இந்தியாவின் பிரபலமான நகைக்கடையான ஜோயாலுக்காஸ் அட்சய திருதியையை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. அதன்படி மே 3ஆம் தேதி முதல் மே 12ஆம் தேதி வரை ரூ. 50,000க்கு மேல் தங்க நகைகள் வாங்கினால், ரூ. 1,000 மதிப்புள்ள கிப்ட் வவுச்சரை பரிசாக வழங்குகிறது. மேலும், ரூ. 10,000 ரூபாய்க்கு மேல் வெள்ளி நகைகளை வாங்குவோருக்கு ரூ. 500 மதிப்புள்ள கிப்ட் வவுச்சர் பரிசாக வழங்கப்பட உள்ளது.
ஏப்ரல் 26ஆம் தேதி முதல் மே 12ஆம் தேதி வரை ரூ. 50,000க்கு மேற்பட்ட வைரங்கள் மற்றும் விலை உயர்ந்த நகைகளை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 2000 மதிப்புள்ள கிப்ட் வவுச்சர் பரிசாக வழங்கப்பட உள்ளது. இந்த சலுகைகள் ஜோயாலுக்காஸ் இந்தியா இணையதளத்தில் நகைகளை வாங்கும் போது மட்டுமே செல்லுபடியாகும்.
மலபார் கோல்ட்ஸ் அட்சய திருதியை ஆஃபர்: பிரபல ஜுவல்லரி பிராண்டான மலபார் கோல்ட் & டைமண்ட்ஸ் அட்சய திருதியை முன்னிட்டு தங்க நகைகளுக்கான செய்கூலியில் 25 சதவீதம் வரை தள்ளுபடி வழங்குகிறது. இந்த சலுகை ஏப்ரல் 27ஆம் தேதி முதல் மே 12ஆம் தேதி வரை செல்லுபடி ஆகும். அதேபோல் வைர நகைகளை வாங்கினால் 25 சதவீதம் வரை தள்ளுபடி வழங்குகிறது. இந்த சலுகைகள் ஆன்லைனில் மலபார் கோல்ட் & டைமண்ட்ஸ் இணையதளத்தில் நகைகளை வாங்கினால் மட்டுமே செல்லுபடி ஆகும்.
இணையதளத் தகவலின் படி இந்த சலுகையை வேறு எந்த கூப்பன்களுடனும் இணைக்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகை தங்க காயின்கள் மற்றும் கிப்ட் கார்டுகள் போன்றவற்றை வாங்கும் போது செல்லுபடியாகாது என்றும் கூறப்பட்டுள்ளது.
எஸ்பிஐ கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களுக்கு ரூ. 25,000 ரூபாய் மதிப்பிலான பரிவர்த்தனைக்கு 5% கேஷ்பேக் கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கார்டுக்கு அதிகபட்ச தொகையாக ரூ. 2500 மட்டுமே வழங்கப்பட உள்ளது. மே 1ஆம் தேதி முதல் மே 10ஆம் தேதி வரை வாடிக்கையாளர்கள், இந்த சலுகையைப் பெற முடியும். மலபார் கோல்ட் & டைமண்ட்ஸ் இணையதளத்தில் நகைகளை வாங்கினால் மட்டுமே இந்த சலுகை செல்லுபடி ஆகும்.
தனிஷ்க் அட்சய திருதியை ஆஃபர்: டாட்டா நிறுவனத்தின் நகை பிராண்டான தனிஷ்க், தங்க நகைகள் மற்றும் வைர நகைகளின் செய்கூலியில் 20 சதவிகித தள்ளுபடி வழங்குகிறது. இந்த சலுகை மே 2ஆம் தேதி முதல் மே 12ஆம் தேதி வரை செல்லுபடி ஆகும்.
More From GoodReturns

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

மதுரையில் இன்று தங்கம் விலை சரிவு: இனி வரும் நாட்களிலும் விலை குறையுமா?

சட்டென சரிந்த தங்கம் விலை!! வெள்ளி விலையும் குறைந்தது!! டிரம்புக்கு தான் நன்றி சொல்லனும்!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

தங்கம், வெள்ளி நகைகளின் இறக்குமதிக்கு செக் வைத்த மத்திய அரசு!! வியாபாரிகளின் நூதன மோசடி அம்பலம்!!

தங்கம், வெள்ளி விலை தடாலடியாக உயர காரணம் என்ன? இனி வரும் நாட்கள் எப்படி இருக்கும்?

மதுரையில் தங்கம் விலை திடீர் உயர்வு..!! இன்று தங்கம் வாங்கலாமா? காத்திருக்கலாமா?

கோயம்புத்தூர் மக்களே உங்க ஊரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு.. வாரத்தின் முதல் நாளே சர்ப்ரைஸ்.. நல்ல சான்ஸ்..!

சென்னை அசோக் நகர்.. ஒரே காரில்.. ரூ.77 கோடி தங்கம் - வெள்ளி.. பறக்கும் படை 'கப்'பென பிடித்தது..!!



Click it and Unblock the Notifications