அட்சய திருதியை நெருங்கி வருகிறது. உலகெங்கிலும் உள்ள இந்துக்கள் கொண்டாடும் மிகவும் புனிதமான நாட்களில் அட்சய திருதியையும் ஒன்று. அட்சய திருதியை அன்று தங்கம் வாங்குவது அதிர்ஷ்டம், செல்வ செழிப்பு போன்றவற்றை கொண்டு வரும் என்பது நீண்ட காலமாக இருந்து வரும் நம்பிக்கை. அட்சயம் என்ற வார்த்தைக்கு "ஒருபோதும் குறையாதது" என்பது பொருள்.
இந்த நாளில் எந்த செயலை துவங்கினாலும் அது என்றென்றும் நன்மை தரும் என்ற காரணத்தினால் புது தொழில் தொடங்குவது, வீடு கட்டுவது என அனைத்துக்கும் ஏற்ற நாளாகவும், அதோடு அன்றைய தினம் தொடங்கப்படும் அனைத்தும் முடிவில்லாமல் தொடர்ந்து நிலைக்கும் என்றும் நம்பப்படுகிறது. அதனால்தான் அட்சய திருதியைப் போன்ற மங்களகரமான நாட்களில் மக்கள் தங்கம் அல்லது வெள்ளி நகைகளை வாங்குகின்றனர்.

2025-ஆம் ஆண்டில் அட்சய திருதியை எப்போது கொண்டாடப்படுகிறது?: 2025-ஆம் ஆண்டில் ஏப்ரல் 30-ஆம் தேதி அட்சய திருதியை கொண்டாடப்படுகிறது. பொதுவாக ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கு இடையில் தான் இந்த நன்னாள் வரும். திரிக் பஞ்சாங்கத்தின் படி அட்சய திருதியை புதன்கிழமை அன்று வருகிறது. அட்சய திருதியை பூஜை செய்வதற்கான நல்ல நேரம் ஏப்ரல் 29-ஆம் தேதி மாலை 5:31 மணி அளவில் தொடங்கி ஏப்ரல் 30-ஆம் தேதி மதியம் 2.12 மணி வரை இருக்கிறது.
அட்சய திருதியை தினத்தன்று அதிகம் வாங்கப்படும் பொருட்களில் ஒன்று தங்கம். தங்க நாணயமாக இருந்தாலும் சரி அல்லது சிறிய ஆபரணமாக இருந்தாலும் சரி இந்த நன்னாளில் தங்கத்தை வீட்டிற்கு கொண்டு வருவது புனிதமானதாக கருதப்படுகிறது. ஆனால் எல்லோராலும் அன்றைய தினம் தங்கம் வாங்க முடியாது. இதனால் நீங்கள் வேறு சில பொருட்கள் வாங்குவது குறித்தும் பரிசீலிக்கலாம். அட்சய திருதியை அன்று கீழ்காணும் பொருட்களை வாங்குவதும் செல்வ செழிப்பை உண்டாக்கும்.
வெள்ளி: தங்கத்தை போலவே மக்கள் அட்சய திருதியை அன்று வெள்ளி நகையை வாங்கலாம். சில குடும்பங்களில் தங்கத்திற்கு பதிலாக வெள்ளியை வாங்குவார்கள். ஏனெனில் அது மகா லட்சுமிக்கு நெருக்கமான ஒன்றாக கருதப்படுகிறது. அட்சய திருதியை அன்று வெள்ளி வாங்குவது வாழ்க்கையில் சமநிலையைக் கொண்டு வரும் என்று கருதப்படுகிறது.
மண்பானைகள்: அட்சய திருதியை அன்று மக்கள் வாங்கக்கூடிய மற்றொரு பொருள் மண் பானைகள். தங்கம், வெள்ளி அல்லது விலை உயர்ந்த பொருட்களை வாங்க முடியாதவர்கள் கோடை மாதங்களில் பயன்படுத்தும் விதமாக மண்பானையை வாங்கலாம். மண்பானை மண்ணை கொண்டு தயாரிக்கப்படுகிறது. இது பூமாதேவியின் மற்றொரு வடிவமாக கருதப்படுகிறது. இதனால் அவருடைய ஆசிர்வாதம் பூரணமாக கிட்டும் என்பது நம்பிக்கை.
துளசி செடி: உலகம் முழுவதும் உள்ள இந்துக்கள் துளசி செடியை தெய்வமாக வழிபடுகின்றனர். இது மகாலட்சுமியின் மற்றொரு வடிவம் என்றும், வீட்டில் துளசி செடி இருந்தால் வீட்டில் உள்ளவர்கள் ஆரோக்கியத்துடன் இருப்பார்கள் என்றும் நம்பப்படுகிறது. எனவே அட்சய திருதியை நாளில் வீட்டிற்கு துளசி செடியை கொண்டு வர மகாலட்சுமியின் ஆசிர்வாதம் ஏற்படும்.
பருத்தி: அட்சய திருதியை அன்று மக்கள் வாங்கும் மற்றொரு பொருள் பருத்தி. பருத்தி வாங்குவது செல்வ செழிப்பை கொண்டு வருமா? என்று உங்களுக்கு தோன்றலாம். ஆனால் இந்த நாளில் பருத்தியை வாங்குவதற்கு சில காரணங்கள் உள்ளன. தினசரி பிரார்த்தனையை கவனித்து பாருங்கள். அதில் பயன்படுத்தப்படும் விளக்குகள் போன்றவற்றில் திரி பயன்படுத்தப்படும். விளக்குகளுக்கு திரி தயாரிக்க பருத்தி தான் பயன்படுகிறது. எனவே இந்துக்களின் வழிபாட்டில் மிக முக்கியமான பொருட்களில் பருத்தியும் ஒன்று. எப்படி விளக்குகள் இருளை நீக்கி ஒளிரச் செய்கிறதோ அதேபோல நம் வாழ்க்கையில் ஒளி பிறக்கவும் பருத்தி வாங்குவது நல்லது என்பது நம்பிக்கை.
கல் உப்பு: அட்சய திருதியை அன்று கல் உப்பு வாங்கலாம். கல் உப்பு ஒரு கிளீனிங் ஏஜென்ட்-ஆக பயன்படுத்தப்படுகிறது. கல் உப்பு எதிர்மறையான எண்ணங்களை நீக்கி நன்மையை கொண்டு வரும். வாஸ்து மற்றும் ஆயுர்வேதத்தில் கல் உப்பு தீயவற்றை எடுத்துக்கொண்டு நன்மையை வழங்கும் என்று கூறப்பட்டுள்ளது. அட்சய திருதியை அன்று மக்கள் தங்கள் வாழ்க்கையில் தீயவற்றை நீக்க கல் உப்பை வாங்கலாம்.
More From GoodReturns

தங்கம் விலை அதிரடி உயர்வு!! அட்சய திருதியைக்கு 5 நாட்களே இருக்கும் நிலையில் திடீர் விலை ஏற்றம்!!

தங்கம், வெள்ளி விலை சரிவு: ஈரான் போர் தீவிரமடைந்தால் இன்னும் தங்கம் விலை குறையுமா?

குறையும் தங்கம் விலை ; உயரும் கச்சா எண்ணெய் விலை - ஈரான் பேச்சுவார்த்தை தோல்வியால் எல்லாமே மாறுது!!

வாரத்தின் முதல் நாளே குட் நியூஸ்: குறைந்தது தங்கம் விலை!! நகைப்பிரியர்கள் ஹேப்பி!!

தங்கம், வெள்ளி விலையில் நடந்த திடீர் மாற்றம்: நகை வாங்க இது நல்ல நேரமா?

தங்கம் விலை: 11 நாட்களில் 5 நாட்கள் விலை ஏறி இருக்கு!! அப்போ அடுத்த வாரம் என்ன ஆகும்?

தங்கம் விலையில் அதிரடி திருப்பம்! டிரம்ப் கொடுத்த போர் நிறுத்த ட்விஸ்ட்! அடுத்து என்ன நடக்கும்?

மதுரையில் தங்கம் விலை அதிரடி சரிவு: சாமானிய மக்கள் மகிழ்ச்சி!!

அட்சய திருதியை தங்கம் விற்பனை: மக்களே இத கவனிக்கலனா உங்க தலையில துண்டு!!

கோவையில் இன்று தங்கம் விலை அதிரடி சரிவு; இந்த நிலை அப்படியே நீடிக்குமா?

மதுரை மக்களே இன்று தங்க நகை வாங்கலாமா? உங்க ஊரில் ஒரு சவரன் விலை என்ன?



Click it and Unblock the Notifications