இந்து சமயத்தில் அக்ஷய திருதியை பண்டிகை மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது, இந்த தினத்தில் செய்யப்படும் பூஜை, விரதம் ஆகியவை வீட்டில் செல்வச் செழிப்பையும் வெற்றியையும் கொடுக்கும் என்பது நம்பிக்கை. இதேபோல் இந்த அக்ஷய திருதியை தினத்தில் தங்கம், வெள்ளி, பிளாட்டினம் ஆகியவற்றை வாங்குவது முக்கியமான ஒரு நிகழ்வு.
2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 30, புதன்கிழமையன்று கொண்டாடப்படும் அக்ஷய திருதியை நன்னாளில் தங்கம் வாங்குவதற்குக் காலை 5:41 மணி முதல் பிற்பகல் 12:18 மணி வரை முகூர்த்த நேரமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்திற்குள் தங்கத்தை வாங்கினால் உங்கள் வீட்டில் செல்வம் செழிக்கும் என்பது மரபு. எனவே நீங்கள் இன்று தங்கம் வாங்க ஆசைப்பட்டால் நேரத்தை வீணடிக்காமல் டக்குன்னு வாங்கிடுங்க.

இந்த அக்ஷய திருதியை தினத்தில் தங்கம் மட்டும் தான் வாங்க வேண்டும் என்பது இல்லை, புதிய தொடக்கங்கள் அதாவது தொழில் துவங்குவது, புதிய முதலீடுகளைச் செய்வது, புதிய வாகனம் வாங்குவது, என நம் வீட்டையும், தொழிலையும் விரிவாக்கம் செய்யும் அனைத்தையும் செய்யலாம்.
ஆனால் அதிகப்படியான மக்கள் அக்ஷய திருதியை தினத்தில் தங்கம் மற்றும் வெள்ளி போன்ற விலைமதிப்பு உலோகங்களில் முதலீடு செய்வதற்கும் உகந்ததாகவும், எளிமையான விஷயமாகவும் கருதுகின்றனர்.
இந்த ஆண்டு, தங்கம் விலையில் குறிப்பிடத்தக்க உயர்வு ஏற்பட்டுள்ளது. தற்போது, தங்கத்தின் விலை 10 கிராமிற்கு 1 லட்சமாக உயர்ந்துள்ளது, இது 2023 அக்ஷய திருதியையில் ரூ.73,500 ஆக இருந்ததை விடக் மிகப்பெரிய உயர்வு. இதேபோல், வெள்ளி விலை கிலோவிற்கு ரூ.1,00,000 ஆக உயர்ந்துள்ளது, இது 2023 இல் ரூ.86,000 ஆக இருந்தது.
தங்கம் மற்றும் வெள்ளி விலை மிகப்பெரிய அளவில் உயர்ந்த போதிலும், அக்ஷய திருதியை நாளில் தங்கம் வாங்க வேண்டும் என்பது மக்களின் விருப்பமாக இருக்கும் காரணத்தால் சிறிய அளவிலாவது தங்கத்தை வாங்குவார்கள். அனைத்தையும் தாண்டி தங்கம் மற்றும் வெள்ளி ஒரு பாதுகாப்பான முதலீடாக இருக்கும் வேளையில், நம்பிக்கையும் கலந்த இந்த அக்ஷய திருதியை நாளில் தங்கம் வாங்குவது இயல்பாகவே அதிகரிக்கும்.
அகில இந்திய நகை வியாபாரிகள் மற்றும் தங்க நகைத் தயாரிப்பாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் பங்கஜ் அரோரா அக்ஷய திருதியை விற்பனை குறித்துக் கூறுகையில், இந்த ஆண்டு பண்டிகை தோராயமாக 12 டன் தங்க அளவிலான விற்பனையை பதிவு செய்யும் என்றும் இதன் மதிப்பு கிட்டத்தட்ட ரூ.12,000 கோடி எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், இன்று தங்கத்தை தாண்டி வெள்ளி சுமார் 400 டன் விற்பனையை பதிவு செய்யும், சந்தையில் இந்த 400 டன் வெள்ளியின் மதிப்பு ரூ.4,000 கோடி எனவும் தெரிவித்துள்ளார். மொத்தத்தில், இந்த அக்ஷய திருதியை தினத்தில் ரூ.16,000 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி விற்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அக்ஷய திருதியையில் ஆன்மீகமும் வணிகமும் இணையும் ஒரு பண்டிகையாக இருக்கிறது.
More From GoodReturns

தங்கம் விலையில் நடந்த திடீர் டிவிஸ்ட்!! 6 மணி நேரத்தில் நடந்த அதிரடி மாற்றம்!!

போர் பதற்றத்திலும் தங்கம் வீழ்வது ஏன்? டாலரின் ஆதிக்கம் மீண்டும் தொடங்குமா? உங்கள் முதலீடு எங்கே?

தங்கம் விலை: 100 என்ற நம்பர் செய்யும் மேஜிக்..!! இப்போது நகை வாங்கலாமா?

சர்ரென சரிந்த தங்கம் விலை: முதலீட்டாளர்கள் இப்போது என்ன செய்யலாம்?

17 ஆண்டுகளுக்குபிறகு கடும் வீழ்ச்சி கண்ட தங்கம்! திடீர் யூ டர்ன் அடித்த காரணம்? அடுத்த இலக்கு?

சட்டென சரிந்த தங்கம் விலை!! வெள்ளி விலையும் குறைந்தது!! டிரம்புக்கு தான் நன்றி சொல்லனும்!!

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

தங்கம், வெள்ளி நகைகளின் இறக்குமதிக்கு செக் வைத்த மத்திய அரசு!! வியாபாரிகளின் நூதன மோசடி அம்பலம்!!

தங்கம், வெள்ளி விலை தடாலடியாக உயர காரணம் என்ன? இனி வரும் நாட்கள் எப்படி இருக்கும்?

மதுரையில் தங்கம் விலை திடீர் உயர்வு..!! இன்று தங்கம் வாங்கலாமா? காத்திருக்கலாமா?



Click it and Unblock the Notifications