அட்சய திருதியை 2025: சலுகைகளை அள்ளி வழங்கும் தனிஷ்க்.. இது வேற லெவல் ஆஃபர்!

வருகின்ற ஏப்ரல் 30-ஆம் தேதி அன்று அட்சய திருதியை பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இதனால் முன்னணி நகை பிராண்டுகள் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளன. குறிப்பாக தங்கம் மற்றும் வைர நகை வாங்குவதற்கு தள்ளுபடிகள் மற்றும் சிறப்பு சலுகைகளும் வழங்கப்படவுள்ளன. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி விரும்பிய நகைகளை சிறந்த விலையில் பெற்றுக் கொள்ள முடியும்.

முன்னணி நகை கடைகளான தனிஷ்க், கேரட்லேன், மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ், ரிலையன்ஸ் ஜுவல்ஸ் மற்றும் பிற முன்னணி பிராண்டுகளும் இந்த சிறப்பு அட்சய திருதியை விற்பனையில் ஈடுபட்டுள்ளன. சில கடைகள் ஆன்லைன் மூலமாகவும் சலுகைகளை வழங்குகின்றன.

அட்சய திருதியை 2025: சலுகைகளை அள்ளி வழங்கும் தனிஷ்க்.. இது வேற லெவல் ஆஃபர்!

தனிஷ்க் பிராண்ட்: தனிஷ்க் பிராண்டின் இணையதள தகவல் படி ஏப்ரல் 19-ஆம் தேதி முதல் ஏப்ரல் 30 வரை தங்க நகைகளுக்கு சலுகைகள் வழங்கப்படவுள்ளன. இந்த சலுகையின் கீழ் தங்கம் அல்லது வைர நகைகளுக்கான மேக்கிங் சார்ஜ் கட்டணங்களில் 20 சதவீதம் வரை தள்ளுபடி பெற முடியும்.

கல் பதிக்கப்பட்ட தங்க நகைகள், கல் பதிக்கப்படாத தங்க நகைகள், பிளாட்டினம் நகைகள், டைமண்ட் நகைகள் என பலவற்றுக்கும் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. ரூ. 50,000 வரையிலான தங்கம் வாங்கினால் 5% தள்ளுபடி பெறலாம். ரூ.50,000 முதல் ரூ. 2.99 லட்சம் மதிப்பிலான தங்கம் அல்லது டைமண்ட் நகைகள் வாங்கினால் 10 சதவீதம் வரை தள்ளுபடி, ரூ.3 லட்சம் முதல் ரூ.7.99 லட்சம் வரையிலான தங்கம் வாங்கினால் 15 சதவீதம் தள்ளுபடி, ரூ.8 லட்சத்திற்கு அதிகமாக தங்கம் வாங்கினால் 20% வரை தள்ளுபடி பெறலாம்.

ரிலையன்ஸ் ஜுவல்ஸ்: ஏப்ரல் 24-ஆம் தேதி முதல் ரிலையன்ஸ் ஜுவல்ஸ் சலுகைகளை அறிவித்துள்ளது. இந்த சலுகைகள் மே 5-ஆம் தேதி வரை கிடைக்கும். தங்க நகைக்கான மேக்கிங் சார்ஜ் கட்டணங்களில் 25 சதவீதம் வரை தள்ளுபடியும், வைர நகைகளுக்கு 30% வரை தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. அதோடு தங்கத்திற்கு சிறந்த எக்ஸ்சேஞ்ச் ஆஃபரும் வழங்கப்படுகிறது.

மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ்: ஏப்ரல் 15-ஆம் தேதி மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் வெளியிட்ட செய்தி குறிப்பின்படி தங்க நகைகளின் மேக்கிங் சார்ஜ் கட்டணத்தில் 25 சதவீதம் வரை தள்ளுபடி பெறலாம். விலைமதிப்பற்ற கற்களை கொண்டு தயாரிக்கப்பட்ட நகைகளின் மேக்கிங் சார்ஜ் கட்டணத்தில் 25 சதவீதம் வரையும் தள்ளுபடி வழங்குகிறது. அதோடு வைர நகைகளுக்கு 25 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+