இந்த ஆண்டு அட்சய திருதியை பண்டிகை ஏப்ரல் 30-ஆம் தேதியன்று கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் தங்கம் மற்றும் பிற மதிப்புமிக்க பொருட்களை வாங்குவது வீட்டில் செல்வ செழிப்பை உண்டாக்கும் என்பது நம்பிக்கை. இதன் காரணமாக தங்கம் வாங்கி பூஜை செய்து அன்றைய தினம் மக்கள் வழிபடுவர். இதனால் நகை கடைகளில் வருடா வருடம் அட்சய திருதியை தினத்தன்று கூட்டம் அலைமோதும்.
மக்கள் தங்க நகைகள், தங்க நாணயங்கள், தங்க பார்கள் என தங்களின் தேவைக்கு ஏற்ப தங்கத்தில் முதலீடு செய்வர். பண்டிகைக் காலங்களில் தங்கத்தின் தேவை அதிகமாக இருப்பதால் போலியான தங்கம் அல்லது கலப்படம் செய்யப்பட்ட தங்க நகைகளும் விற்பனை செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே நீங்கள் நகை கடைக்கு சென்று நகை வாங்குவதற்கு முன்பு தங்கம் உண்மையானதா அல்லது போலியானதா என்பதை எப்படி கண்டறிவது என்று தெரிந்து கொள்வது முக்கியம். கீழ்காணும் வழிகளைப் பின்பற்றி நீங்கள் அதை தெரிந்து கொள்ளலாம்.

பிஐஎஸ் ஹால்மார்க்கைச் சரிபார்க்கவும்: இந்திய தர நிர்ணய ஆணையம் தங்கத்தின் தூய்மையை பார்த்து அதற்கு சான்றளிக்கிறது. அதில் தங்கத்தின் கேரட் அளவு, பிஐஎஸ் லோகோ, நகைக் கடைக்காரரின் குறியீடு போன்றவை இருக்கும். உதாரணமாக 22 கேரட் தங்கம் என்பது 916 தங்கமாகும். இதில் 91.6 சதவீதம் தூய தங்கம் இருக்கும்.
ஹெச்யூஐடி எண்ணை (HUID Number) கவனியுங்கள்: ஒவ்வொரு ஹால்மார்க் முத்திரை பொறிக்கப்பட்ட தங்கத்திலும் தனித்துவமான HUID நம்பர் இருக்கும். இது அந்தந்த தங்கத்தின் நம்பகத்தன்மையைச் சரி பார்ப்பதற்கான குறியீடாகும். இது ஆறு இலக்க ஆல்ஃபாநியூமரிக் நம்பரைக் கொண்டிருக்கும். ஆல்ஃபாநியூமரிக் என்பது நம்பர் மற்றும் ஆல்பபெட்ஸ்களை கொண்ட நம்பர் ஆகும்.
கேரட் அளவைப் புரிந்து கொள்ளுதல்: தங்கம் கேரட்டில் தான் அளவிடப்படுகிறது. 24 கேரட், 22 கேரட், 18 கேரட் மற்றும் 14 கேரட் போன்றவற்றில் தங்கம் விற்பனையாகிறது. 24 கேரட் என்பது 99.9 சதவீதம் தூய தங்கத்தை கொண்டு ஆனது. இதை வைத்து நகைகள் செய்ய முடியாது. இதில் நாணயங்கள் அல்லது கோல்டு பார்கள் செய்யலாம்.
22 கேரட் என்பது 91.6% தூய தங்கத்தைக் கொண்டது. இதுதான் "916 தங்கம்" என்று அழைக்கப்படுகிறது. இதில் காப்பர் அல்லது பிற உலோகங்களான சில்வர் கலந்து நகைகள் செய்யப்படும். 18 கேரட் தங்கம் குறைந்த தூய்மை கொண்ட தங்கமாகும். அன்றாடம் அணிவதற்கு ஏற்ற வகையில் 18 கேரட் நகைகளும் சந்தையில் விற்பனையாகிறது.
காந்த சோதனை: உண்மையான தங்கம் காந்த சக்தி இல்லாதது. எந்த ஒரு பொருள் காந்தத்தால் ஈர்க்கப்பட்டாலும், அது மற்ற உலோகங்களுடன் கலக்கப்பட்டு இருக்கலாம் அல்லது போலியாக இருக்கலாம். தங்கத்தின் எடை, தூய்மை, நீங்கள் செலுத்த வேண்டிய கட்டணம் குறித்த தகவல்கள் போன்றவற்றை அடங்கிய விரிவான பில்லை கேளுங்கள். இதுவும் உண்மையான தங்கத்தை கண்டறிய உதவியாக இருக்கும்.
More From GoodReturns

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை உயர்வு.. ஈரான் போருக்கு மத்தியில் மாட்டிக்கொண்ட தங்க நகை சந்தை..!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

பட்டென சரிந்த தங்கம் விலை.. சட்டென நகை கடைக்கு கிளம்புங்க.. ஆனா ஒரு விஷயம்..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே நகை வாங்க இன்று தான் நல்ல நாள்!!

தங்கம் விலை அதிரடி சரிவால் கோயம்புத்தூர் மக்கள் செம குஷி.. நகை வாங்குவோருக்கு பொன்னான வாய்ப்பு..!

மதுரை மக்களே இன்று தங்கம் வாங்கலாமா? உங்க ஊரில் ஒரு சவரன் விலை என்ன?

கோவையில் இன்று தங்கம் விலை நிலவரம் என்ன? மக்கள் இன்று தங்கம் வாங்கலாமா?

வீட்டில் 100 கிராமுக்கு மேல் தங்கமா? உஷார்! வருமான வரித்துறை நோட்டீஸ் வரலாம்!

தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. எல்லாம் கச்சா எண்ணெய் விலையில் நடந்த டிவிஸ்ட் தான் காரணம்..!



Click it and Unblock the Notifications