தங்கம் விலை ரூ.2 லட்சமாக உயரும்!! அட்சய திருதியை நாளில் குண்டை தூக்கி போடும் நிபுணர்கள்!!

அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கும் போக்கு ஏராளமான இந்தியர்கள் மத்தியில் இருக்கிறது. தங்களால் இயன்ற அளவு குறைந்தபட்ச தங்கத்தையாவது இந்த நாளில் வாங்கி விட்டால் இந்த ஆண்டு முழுவதும் செல்வம் பெருகும் என மக்கள் நம்புகின்றனர். இதன் காரணமாக தான் அட்சயதிருதியை தினத்தில் ஒரு குண்டு மணி தங்கமாவது வாங்க முடியுமா என முயற்சி செய்கின்றனர்.

ஒவ்வொரு ஆண்டு, அட்சய திருதியை நாளில் தங்கத்தின் விலைகளை ஒப்பிடும்போது மக்களின் நம்பிக்கை வீண் போகவில்லை என்பதையே உணர்த்துகிறது. ஒவ்வொரு ஆண்டுமே முந்தைய ஆண்ட அட்சய திருதியை உடன் ஒப்பிடும்போது தங்கத்தின் விலை உயர்வில் தான் இருக்கிறது. கடந்த ஆண்டு அதாவது 2025 ஆம் ஆண்டு அட்சய திருதியை பண்டிகையோடு ஒப்பிடும்போது இந்த ஆண்டு இந்தியாவில் தங்கத்தின் விலை 63 சதவீதம் உயர்வு கண்டிருக்கிறது.

தங்கம் விலை ரூ.2 லட்சமாக உயரும்!! அட்சய திருதியை நாளில் குண்டை தூக்கி போடும் நிபுணர்கள்!!

கேடியா அட்வைஸரி வெளியிட்டுள்ள தகவலின் படி பார்த்தால் இந்தியாவில் 2025 ஆம் ஆண்டில் எம்சிஎக்ஸ் வர்த்தகத்தில் 24 கேரட் தங்கம் 10 கிராமின் விலை 94,611 ரூபாய் அதுவே இந்த ஆண்டு தற்போது 1,54,609 ரூபாய் என விலை உயர்ந்துள்ளது. இந்த ஓராண்டு காலத்தில் 10 கிராம் தங்கத்தின் விலை சுமார் 60 ஆயிரம் ரூபாய் உயர்ந்து இருக்கிறது சதவீத அடிப்படையில் பார்த்தால் 63.4% அதிகரித்து இருக்கிறது.

Also Read

ஆக்சிஸ் செக்யூரிட்டிஸ் வெளியிடும் தகவலின் படி பார்க்கும்போது ஒவ்வொரு ஆண்டும் அட்சய திருதியை தங்கம் விலையுடன் ஒப்பிட்டால் 2016 இருந்து 2026 வரையிலான பத்து ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் 18 சதவீத வளர்ச்சி தந்திருக்கிறது. அதாவது இரட்டை இலக்க வளர்ச்சி என்பது மட்டுமில்லாமல் மற்ற அனைத்து முதலீடுகளுடனும் ஒப்பிடும்போது ஒரு நீடித்த நிலையான வளர்ச்சியை தங்கம் தந்திருக்கிறது. இதனால் தான் அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்குவது ஒரு நம்பிக்கையாக மட்டுமில்லாமல் தரவுகளால் நிரூபிக்கப்பட்ட ஒரு விஷயமாகவும் மாறி இருக்கிறது.

தங்கம் விலை ரூ.2 லட்சமாக உயரும்!! அட்சய திருதியை நாளில் குண்டை தூக்கி போடும் நிபுணர்கள்!!

அந்த வகையில் இந்த ஆண்டு அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குபவர்கள் கட்டாயம் அடுத்த ஆண்டில் பெரிய அளவிலான லாபத்தை ஈட்டி இருப்பார்கள் என முதலீட்டு நிபுணர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். வென்சுரா செக்யூரிட்டி நிறுவனத்தின் தலைவர் என்.ராமசாமி தற்போது இந்தியாவில் எம்சிஎக்ஸ் வர்த்தகத்தில் 10 கிராம் தங்கத்தின் விலை 1.5 லட்சம் ரூபாய் என இருக்கிறது அடுத்த ஆண்டு அட்சய திருதியைக்குள் இது 2 லட்சம் ரூபாயாக நிச்சயம் உயரும் அதற்கான அடிப்படை மிக வலுவாக இருக்கிறது என தெரிவித்திருக்கிறார்.

Recommended For You

இந்த டிசம்பர் மாதத்திற்குள்ளேயே 24 கேரட் தங்கம் 10 கிராமின் விலை 1.75 லட்சம் ரூபாய் என்ற அளவை எட்டும் அதாவது சதவீத அடிப்படையில் 15 சதவீதம் உயரும் என குறிப்பிடுகிறார். மோஹித் குலாட்டி என்ற முதலீட்டு நிபுணரும் மிண்ட் தளத்திற்கு அளித்துள்ள பேட்டியில் தங்கம் விலை 2 லட்சத்தை தொடும் என்பதை மறுப்பதற்கில்லை என்கிறார். தங்கம் தன்னை குறைத்து மதிப்பிடுபவர்களுக்கு எப்போதுமே பெரிய சர்ப்பிரைஸ் கொடுக்கும் என அவர் கூறுகிறார்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+