அட்சய திருதியை: தங்கம் வாங்க இது தான் நல்ல நேரம்!! மக்களே நோட் பண்ணுங்க!!

அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால் செல்வ வளம் பெருகும் என்ற நம்பிக்கை இந்தியர்கள் மத்தியில் இருக்கிறது. இதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டுமே அட்சய திருதியை அன்று ஏராளமான மக்கள் தங்களால் இயன்ற அளவு ஒரு கிராம் தங்கத்தையாவது வாங்கி வைத்துவிட வேண்டும் என்பதற்காக நகை கடைகளுக்கு செல்வார்கள்.

இந்த ஆண்டு ஞாயிற்றுக்கிழமை அட்சய திருதியை பண்டிகை வருகிறது. இந்த நாளில் தங்க நகை வாங்க திட்டமிட்டு இருப்பவர்கள் குறிப்பிட்ட நல்ல நேரத்தில் தங்கம் வாங்கினால் வீட்டில் செல்வ வளம் பெருகும் என சொல்லப்படுகிறது. அந்த வகையில் தங்கம் வாங்குவதற்கு எது சிறந்த நேரம் என்பது குறித்து நாம் தெரிந்து கொள்ளலாம்.

அட்சய திருதியை: தங்கம் வாங்க இது தான் நல்ல நேரம்!! மக்களே நோட் பண்ணுங்க!!

அட்சய என்றால் குறையாதது என அர்த்தம். தமிழில் அட்சய பாத்திரம் என சொல்வார்கள். அள்ள அள்ள குறையாத உணவினை வழங்க கூடியது தான் அட்சய பாத்திரம். அந்த வகையில் தான் அட்சய திருதியை அன்று நாம் தொடங்கக்கூடிய எந்த ஒரு விஷயமும் பெரிய அளவில் பெருகும் என்ற நம்பிக்கை மக்களிடையே இருக்கிறது. இதனால் தான் அட்சயதிருதியை நாளில் செய்யக்கூடிய ஒரு சின்ன முதலீடு கூட வரும் நாட்களில் பல மடங்கு பெருகும் என மக்கள் நம்புகின்றனர்.

இந்து நாட்காட்டியில் புனிதமான நாட்களில் ஒன்றாக அட்சய திருதியை கருதப்படுகிறது. ஆண்டுதோறும் சித்திரை மாதம் தொடங்கிய பிறகு அமாவாசைக்கு அடுத்து வரக்கூடிய மூன்றாவது நாள் அட்சய திருதியை என அழைக்கப்படுகிறது. அட்சய திருதியை என்றால் குறையாத செல்வம் என அர்த்தம் எனவேதான் இந்த நாளில் தங்கம் வாங்கினால் வீட்டில் தங்கம் பெருகும் என மக்கள் நம்புகின்றனர்.

Also Read

இந்த ஆண்டு அட்சய திருதியை ஏப்ரல் 19ஆம் தேதி அதாவது ஞாயிற்றுக்கிழமை காலை 10:40 மணிக்கு தொடங்கி திங்கட்கிழமை காலை அதாவது ஏப்ரல் 20 ஆம் தேதி காலை 7.27 மணிக்கு முடிகிறது. இதில உதய திதி ஏப்ரல் 19ஆம் தேதி வருவதால் தான் அன்றைய தினமே அட்சய திருதியை ஆக கருதப்படுகிறது. இந்த நாள் முழுவதுமே தங்கம் வாங்குவது சிறந்தது தான். ஆனால் குறிப்பிட்ட சில நேரத்தில் தங்கம் வாங்கினால் இன்னும் செல்வ வளம் பெருகும் என்பது மக்களின் நம்பிக்கை.

Recommended For You

அந்த வகையில் திரிக் பஞ்சாங்கத்தின் அடிப்படையில் பார்க்கும்போது பின்வரக்கூடிய நேரங்கள் அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குவதற்கு உகந்த முகூரத் நேரங்களாக கருதப்படுகின்றன. சென்னையில் காலை 10.49 மணி முதல் பகல் 12.08 மணி வரை முகூரத் நேரமாக சொல்லப்படுகிறது. டெல்லியில் காலை 10.49 மணி முதல் 12.20 மணி வரையும், பெங்களூருவில் காலை 10.49 மணி முதல் 12.19 மணி வரையும் தங்கம் வாங்க உகந்த நேரமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான மக்கள் இந்த நாளில் தங்க நகைகளை விட தங்க நாணயங்களை அதிகமாக வாங்குவார்கள். கடைகளில் ½ கிராம், 1 கிராம், 2 கிராம் என தனித்தனியாக தங்க நாணயங்களை விற்பனை செய்யவே தனி தனி ஸ்டால்களே போடப்பட்டிருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+