அட்சய திருதியை என்பதால் இன்று ஏராளமான மக்கள் தங்கம் வாங்க நகை கடைகளுக்கு படை எடுத்து வருகிறார்கள். தங்கம் விலையை பொறுத்தவரை வரலாற்று உச்சபட்ச மதிப்பில் இருந்து தற்போது பெருமளவில் சரிந்திருப்பதால் தங்கம் வாங்கும் ஆர்வம் மக்களிடையே அதிகரித்துள்ளது.
தங்கம் வாங்க கடைகளுக்கு செல்லக்கூடிய மக்களுக்கு ஒரு நல்ல செய்தி என்னவென்றால் இன்றைய தினம் தங்கம் விலையில் மாற்றம் இல்லை. பொதுவாக இந்தியாவின் ஒவ்வொரு நகரத்திலும் இருக்கக்கூடிய நகை விற்பனையாளர்கள் கூட்டமைப்பு ஒவ்வொரு நாளும் காலை 9.30 மணி அளவில் உலக சந்தை நிலவரத்திற்கு ஏற்ப தங்கம் மற்றும் வெள்ளி விலைகளை நிர்ணயம் செய்யும். நகரத்துக்கு நகரம் இந்த விலை என்பது மாறுபடும்.

பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் தங்கம் விலையில் மாற்றம் இருக்காது. ஆனால் ஏதேனும் ஒரு சவாலான சூழல் ஏற்படுகிறது எனும்போது ஞாயிற்றுக்கிழமையாக இருந்தாலும் தங்கம் விலையில் மாற்றம் இருக்கும். உதாரணமாக அமெரிக்கா ஈரான் இடையிலான போர் பிப்ரவரி 28ஆம் தேதி தொடங்கியது. மார்ச் ஒன்றாம் தேதி அன்று ஞாயிற்றுக்கிழமையாக இருந்த போதிலும் தங்கம் விலை உயர்த்தப்பட்டது.
இந்த சூழலில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இருந்தாலும் அட்சய திருதியை என்பதால் தங்கத்தின் விலையில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் சில சமயம் அட்சய திருதியை நாளில் காலையிலேயே கூட தங்கம் விலை மாற்றப்பட்டது உண்டு. ஆனால் இந்த ஆண்டு நகை விற்பனையாளர்கள் தங்கத்தின் விலையை மாற்றவில்லை.
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் எந்த விலைமாற்றமும் இல்லாமல் நேற்றைய விலைக்கே விற்கப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் விலை நேற்று கிராமுக்கு 150 ரூபாய் விலை உயர்ந்து 14,360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்றும் அதே விலைக்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கத்தை பொறுத்தவரை 1,14 ,880 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இன்றைய தேதியில் ஒரு கிராம் தங்க நாணயம் வாங்க வேண்டும் என்றால் நீங்கள் குறைந்தது 16,000 ரூபாய் வரை செலவிட வேண்டும். இதுவே ஒரு சவரன் நகையாக வாங்கும்போது நீங்கள் வாங்கக்கூடிய நகையின் செய்கூலி சேதாரத்தை பொறுத்து 1.25 லட்சம் ரூபாய் முதல் செலவிட வேண்டும்.
24 கேரட் சுத்த தங்கத்தை பொறுத்தவரை ஒரு கிராம் 15,666 ரூபாய்க்கும் 10 கிராம் 1,56,660 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. பெரும்பாலான மக்கள் அட்சய திருதிடை நாளில் 24 கேரட் தங்க நாணயம் தான் வாங்குவார்கள். அந்த வகையில் விலை நிலவரத்தை தெரிந்து கொண்டு கடைக்கு செல்வது நல்லது.
தற்போது மக்கள் மத்தியில் 18 கேரட் தங்க நகைகளுக்கும் மவுஸ் அதிகரித்துள்ளது. அப்படி பார்க்கும்போது சென்னையில் இன்றைய தினம் 18 கேரட் தங்கம் ஒரு கிராம் 11,980 ரூபாய்க்கும் ஒரு சவரன் 95,840 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தமிழ்நாட்டின் பிரதான நகரங்களிலும் கிட்டத்தட்ட சென்னையில் விற்கும் இதே விலைக்கு தான் தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவை விற்பனை செய்யப்படுகின்றன.
அந்த வகையில் கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் இதே விலைக்கு தான் தங்கம் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் மாறவில்லை நேற்றைய தினம் ஒரு கிராம் வெள்ளி 5 ரூபாய் விலை கூடி 280 ரூபாய்க்கு விற்பனையானது. இன்றைய தினமும் அதே விலைக்கு தான் விற்பனை செய்யப்படுகிறது.
ஆபரண தங்கம் விலை ஜனவரியில் ஒரு சவரன் 1.34 லட்சத்திற்கு விற்கப்பட்டது, தற்போது அதில் இருந்து 20,000 ரூபாய் விலை சரிவில் தான் கிடைக்கிறது, வெள்ளியும் வரலாற்று உச்சபட்ச விலையில் இருந்து சுமார் 1.5 லட்சம் விலை சரிந்து தான் விற்கப்படுகிறது. அந்த வகையில் இவற்றை வாங்க இது ஒரு நல்ல நேரம் என்கின்றனர் நிபுணர்கள்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications


