அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்க முடியலனா என்ன? இதெல்லாம் கூட வாங்கலாம் தெரியுமா?

அட்சய திருதியை என்றாலே தங்கம் தான் அனைவரின் நினைவுக்கும் வருகிறது. இந்த நாளில் தங்கம் வாங்கினால் செல்வ வளம் பெருகும் என்பது உண்மை தான். ஆனால் இன்று தங்கம் விற்கும் விலைக்கு எத்தனை பேரால் அதனை வாங்க முடியும். ஒரு சவரன் தங்கம் வாங்க வேண்டும் என்றாலே 1.30 லட்சம் தேவை, ஒரு கிராம் நாணயம் வேண்டும் என்றாலே கூட 15,000 ரூபாய் தேவை.

அட்சயதிருதியை நாளில் தங்கம் மட்டும் தான் வாங்க வேண்டும் என கிடையாது, வேறு சில பொருட்களும் கூட வாங்கலாம். அட்சய திருதியை இந்து நாட்காட்டியில் மிகவும் மங்களகரமான நாட்களில் ஒன்றாக கருதப்படுகிறது. அட்சய என்ற சொல்லுக்கு ஒரு போதும் குறையாதது என்று பொருள். அதனால் தான் இந்த நாளில் வாங்கப்படும் எந்த ஒரு பொருளும் நீண்டகால வளர்ச்சிக்கும் செழிப்புக்கும் வழிவகுக்கும் என்பது மக்களின் நம்பிக்கை.

அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்க முடியலனா என்ன? இதெல்லாம் கூட வாங்கலாம் தெரியுமா?

இதன் காரணமாக தான் மக்கள் ஒவ்வொரு ஆண்டும் அட்சய திருதியை ஒரு திருவிழா போல கொண்டாடி தங்கம் வாங்குகிறார்கள். பாரம்பரியமாக ஏராளமான மக்கள் அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குகிறார்கள்.அட்சய திருதியைக்கு தங்கம் மட்டும் தான் வாங்க வேண்டும் என கிடையாது. வேறு சில முயற்சிகளையும் கூட மேற்கொள்ளலாம்.

நிலம், வீடு: பல்வேறு மக்களும் அட்சய திருதியை நாளில் தங்களுக்கான புது வீட்டை அல்லது ஒரு நிலத்தை வாங்குவது பெரிய அளவில் வளர்ச்சிக்கு வித்திடும் என நம்புகிறார்கள். அந்த வகையில் தங்கம் மட்டுமல்ல அன்று தினத்தில் ஏராளமானவர்கள் தங்களுக்கான புது வீட்டினை முன் பதிவு செய்வார்கள் அல்லது புதிதாக நிலம் வாங்குவது சொத்து வாங்குவதற்கான நடவடிக்கைகளை தொடங்குவார்கள்.

வாகனம்: புதிதாக இருசக்கர வாகனம் அல்லது கார் அல்லது வணிக ரீதியிலான வாகனத்தை வாங்க வேண்டும் என்றால் அட்சய திருதியை நாளில் வாங்கினால் அந்த தொழில் இன்னும் செழிக்கும் என்பது நம்பிக்கை. எனவே ஏராளமான மக்கள் அன்றைய நாளில் புதிதாக தங்களுக்கான வாகனத்தை வாங்கி புதிய தொழில்களை தொடங்குவார்கள்.

Also Read

வீட்டு உபயோக பொருட்கள்: பல்வேறு வீடுகளிலும் அட்சய திருதியை நாளில் வீட்டு உபயோகப் பொருட்களை வாங்குவதும் ஒரு வாடிக்கையாக இருக்கிறது. வீட்டிற்கு தேவையான மர சாமான்கள், வீட்டை அலங்கரிக்க கூடிய பொருட்கள் அல்லது அன்றாடம் வீட்டுக்கு அத்தியாவசியமாக தேவைப்படக்கூடிய பொருட்களை வாங்குகிறார்கள்.

பூஜை பொருட்கள்: சிலர் புதிதாக சாமி சிலைகள் மற்றும் படங்களை வாங்கி வைத்து பூஜை செய்வார்கள். புதிதாக விளக்கு மற்றும் பூஜை பொருட்களை வாங்குகிறார்கள்.

Recommended For You

திறன் மேம்பாடு: இந்த அட்சய திருதியை நாளில் உங்கள் மீது நீங்கள் முதலீடு செய்யலாம். நீங்கள் ஒரு வேலையில் இருக்கிறீர்கள் அதில் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும் எனும் போது அடுத்தடுத்து உங்களுடைய தொழிலில் என்ன புதிய தொழில்நுட்பங்கள் வந்திருக்கிறதோ அதனை கற்றுக் கொள்வதற்கு இந்த நாளில் முயற்சிக்கலாம். இது உங்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வுக்கு வழி வகுக்கும். எனவே உங்களுக்கு வளர்ச்சி கொடுக்கும் சான்றிதழ் படிப்பில் சேர்வது புதிதாக ஒரு விஷயத்தை கற்றுக் கொள்வது ஒரு புத்தகத்தை வாங்கி படிப்பது உள்ளிட்டவற்றையும் தொடங்கலாம்.

புது தொழில்கள்: பலரும் இந்த நாளில் புதிய தொழில்களை தொடங்குவார்கள். அது மட்டுமில்லாமல் தொழிலுக்கு தேவையான உபகரணங்கள் , இயந்திரங்கள், கருவிகள் உள்ளிட்டவற்றை வாங்குவார்கள்.

அட்சய திருதியை நாளில் அதிக பணம் கொடுத்து தங்கத்தை தான் வாங்கி வைக்க வேண்டும் என கிடையாது. உங்கள் கையில் இருக்கும் பொருளை வைத்து உங்களுடைய வாழ்க்கையில் நிம்மதியையும் வளத்தையும் கொடுக்கக் கூடிய பொருளை வாங்கலாம் அல்லது புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதற்கான தொடக்கமாகவும் இதனை மாற்றலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+