ஏப்ரல் 19ஆம் தேதி அன்று இந்தியாவில் அட்சய திருதியை கொண்டாடப்படுகிறது. அட்சய திருதியை நாளில் தங்க நகை வாங்கினால் செல்வ வளம் பெருகும் என்பது பெரும்பாலான இந்திய மக்களின் நம்பிக்கை. அந்த வகையில் அட்சய திருதி அன்று ஏராளமானவர்கள் தங்க நகைகளை வாங்குவதற்காக நகைக்கடைகளில் குவிவார்கள்.
நகை கடைகளை பொருத்தவரை அவர்களுக்கு அதிகளவில் வியாபாரம் நடக்கக்கூடிய ஒரு நாள் இது. அட்சய திருதியை நாளுக்கு என்றே நகைக்கடைகள் பிரத்தியேகமாக தயாராகும், தனித்தனியாக ஸ்டால்கள் உள்ளிட்டவையும் அமைக்கப்படும். தற்போது ஈரான் போர் நிலவரத்தால் தங்கம் விலை ஒவ்வொரு நாளும் விலை ஏறுவதும் இறங்குவதுமாக இருந்து வருகிறது. இந்த சூழலில் அட்சய திருதியை பண்டிகை நாளில் இந்தியாவில் தங்கத்தின் விலை எவ்வளவு இருக்கும் என்பது குறித்து நாம் தற்போது தெரிந்து கொள்ளலாம்.

ஏப்ரல் மாத தொடக்கத்தில் இருந்து தங்கத்தின் விலை சரிவது ஏறுவத என்ற அளவிலேயே நீடிக்கிறது. ஆனால் பெரிய அளவில் உயரவில்லை. இந்த மாதத்திலேயே அதிகபட்சமாக இன்று தான் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் 14,220 ரூபாயாக ஆக இருக்கிறது. ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து தற்போது வரையிலான வர்த்தக நாட்களில் பார்க்கும்போது சென்னையில் தங்கத்தின் விலை ஐந்து நாள் சரிவடைந்து இருக்கிறது 6 நாட்கள் உயர்வை கண்டிருக்கிறது.
அட்சய திருதியை ஞாயிற்றுக்கிழமையில் வருகிறது. வழக்கமான நகை விற்பனையாளர்கள் ஞாயிற்றுக்கிழமையில் தங்கம் விலையை மாற்ற மாட்டார்கள். ஆனால் அட்சய திருதியை என்பதால் அன்றைய தினம் காலை, மாலை என இரு வேளையும் தங்கம் விலை மாறும். குறிப்பாக காலை 6 மணி அளவிலேயே தங்கம் விலை மாற்றப்படும்.

ஈரான் போர் , அமெரிக்கா ஈரான் அமைதி பேச்சுவார்த்தை ஆகியவை தான் தங்கம் விலையை தீர்மானிக்க போகின்றன. அட்சய திருதியை அன்று தங்கம் விலை உயருமா என்றால் ஈரான் போர் தொடர்பான அறிவிப்புகளும் , போர் நிறுத்த அறிவிப்புகளும் கச்சா எண்ணெய் விலைகளும் தான் காரணமாக இருக்கும். ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டு விட்டால் தங்கம் விலை நிச்சயமாக உயரும், தங்க விற்பனையாளர்களும் டிமாண்ட் அதிகரிப்பதாக கூறி அதற்கு ஏற்ப தங்கத்தின் விலை இன்னும் கொஞ்சம் உயர்த்துவதற்கு வாய்ப்பு உள்ளது.
போர் முடிவுக்கு வரவில்லை எனும் போது தங்கம் விலை குறைவதற்கு வாய்ப்பு உள்ளது. ஈரான் பேச்சுவார்த்தை ஒருவித இழுபறியுடனேயே நீடிக்கிறது எனும்போது தங்கம் விலை உயர லேசாக உயரலாம் அல்லது லேசாக சரியலாம். இன்னும் 4 நாட்களில் பெரிய மாற்றம் வர போவது இல்லை என்கின்றனர் நிபுணர்கள். ஏறினாலும் இறங்கினாலும் அது பெரிய வீழ்ச்சியாகவோ அல்லது பெரிய சரிவாகவோ இருக்காது என்கின்றனர். 1,10,000 ரூபாய் முதல் 1,20,000 ரூபாய் என்ற விலைக்குள் ஒரு சவரன் தங்கம் விலை இருப்பதற்கு வாய்ப்புள்ளது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications