சனிக்கிழமை அட்சய திருதியை பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்படும் வேளையில் நகை கடைகள் அனைத்தும் பெரும் கூட்டத்தை சமாளிக்க தயாராகி வருகிறது. ஆனால் இதேவேளையில் தங்கம் விலை 60000 ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் காரணத்தால் இந்த வருடம் Akshaya Tritiya நாளில் தங்கம் விற்பனை 20 சதவீதம் வரையில் குறையலாம் என கணிக்கப்படுகிறது.
ஆனாலும் பிரபலமான நகை கடைகள் அனைத்தும் Akshaya Tritiya பண்டிகை விற்பனைக்கு முழுவீச்சில் தயாராகி வருகிறது. உங்களுக்கு இந்த பண்டிகை கூட்டத்தில் தங்கம் வாங்க பிடிக்கவில்லை எனில் வீட்டில் இருந்த படியே தங்கம் வாங்கவும், தங்கம் சார்ந்த முதலீட்டையும் செய்ய சிறப்பான 4 வழிகள் உள்ளது.

டிஜிட்டல் கோல்டு: இந்தியாவில் MMTC-PAMP, Augmont மற்றும் SafeGold ஆகிய 3 அமைப்புகள் டிஜிட்டல் முறையில் தங்கம் வாங்கவும் விற்கவும் சேவை அளிக்கிறது. இதன் சேவையை பயன்படுத்தி பல டிஜிட்டல் பேமெண்ட் ஆப், ப்ரோகரேஜ் நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் தங்கத்தை விற்கிறது. இந்த தங்கத்தை கையில் பெற முடியாது, டிஜிட்டல் வேலெட்-ல் சேமிக்கப்படும்.
கோல்டு ஈடிஎப்: தங்கத்தின் உள்நாட்டு அடிப்படையில் இயக்கப்படும் மியூச்சுவல் பண்டு தான் கோல்டு ஈடிஎப், இதில் செய்யப்படும் முதலீடுகளை பண்ட் மேனேஜர்கள் லாபம் வருவேளையில் தங்கத்தை வாங்குவார்கள். ஒரு கோல்டு ஈடிஎப் ஒரு கிராம் தங்கத்தின் விலையை கொனண்டது.
Gold Mutual Fund: கோல்டு ஈடிஎப் என்பது தங்கத்தை வாங்கும் ஒரு மியூச்சவல் பண்ட். ஆனாஸ் Gold Mutual Fund என்பது தங்கம் விலை அடிப்படையில் இயங்கினாலும் இது பிற மியூச்சவல் பண்டுகளை பேலவே இயங்கும்.
சவ்ரின் கோல்டு பாண்ட் : ரிஸ்க் இல்லா முதலீடு, அரசு நேரடியாக விற்கும் காரணத்தால் உலோக தங்கதை காட்டிலும் சவ்ரின் கோல்டு பாண்ட் மிகவும் லாபகரமானது. சவ்ரின் கோல்டு பாண்ட்-ல் முதலீடு செய்யப்படும் தொகைக்கு வருடத்திற்கு 2.5 சதவீத வட்டி வருமானம் கிடைக்கும் என்பது கூடுதல் சிறப்பு.
22 கேரட் தங்கம் விலை (10 கிராம்): சென்னை - 56,650 ரூபாய், மும்பை - 56,050 ரூபாய், டெல்லி - 56,200 ரூபாய், கொல்கத்தா - 56,050 ரூபாய், பெங்களூர் - 56,100 ரூபாய், ஹைதெராபாத் - 56,050 ரூபாய், கேரளா - 56,050 ரூபாய், புனே - 56,050 ரூபாய், பரோடா - 56,100 ரூபாய், அகமதாபாத் - 56,100 ரூபாய், ஜெய்ப்பூர் - 56,200 ரூபாய், லக்னோ - 56,200 ரூபாய், கோயம்புத்தூர் - 56,650 ரூபாய், மதுரை - 56,650 ரூபாய்.
1 சவரன் தங்கம் விலை : சென்னை - 45320 ரூபாய், மும்பை - 44840 ரூபாய், டெல்லி - 44960 ரூபாய், கொல்கத்தா - 44840 ரூபாய், பெங்களூர் - 44880 ரூபாய், ஹைதெராபாத் - 44840 ரூபாய், கேரளா - 44840 ரூபாய், புனே - 44840 ரூபாய், பரோடா - 44880 ரூபாய், அகமதாபாத் - 44880 ரூபாய், ஜெய்ப்பூர் - 44960 ரூபாய், லக்னோ - 44960 ரூபாய், கோயம்புத்தூர் - 45320 ரூபாய், மதுரை - 45320 ரூபாய்.

24 கேரட் தங்கம் விலை (10 கிராம்): சென்னை - 61,800 ரூபாய், மும்பை - 61,150 ரூபாய், டெல்லி - 61,280 ரூபாய், கொல்கத்தா - 61,150 ரூபாய், பெங்களூர் - 61,180 ரூபாய், ஹைதெராபாத் - 61,150 ரூபாய், கேரளா - 61,150 ரூபாய், புனே - 61,150 ரூபாய், பரோடா - 61,180 ரூபாய், அகமதாபாத் - 61,180 ரூபாய், ஜெய்ப்பூர் - 61,280 ரூபாய், லக்னோ - 61,280 ரூபாய், கோயம்புத்தூர் - 61,800 ரூபாய், மதுரை - 61,800 ரூபாய்.
1 கிலோ வெள்ளி விலை : சென்னை - 81300 ரூபாய், மும்பை - 77600 ரூபாய், டெல்லி - 77600 ரூபாய், கொல்கத்தா - 77600 ரூபாய், பெங்களூர் - 81300 ரூபாய், ஹைதெராபாத் - 81300 ரூபாய், கேரளா - 81300 ரூபாய், புனே - 77600 ரூபாய், பரோடா - 77600 ரூபாய், அகமதாபாத் - 77600 ரூபாய், ஜெய்ப்பூர் - 77600 ரூபாய், லக்னோ - 77600 ரூபாய், கோயம்புத்தூர் - 81300 ரூபாய், மதுரை - 81300 ரூபாய்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications