தங்கம் வாங்கினால் நம்முடைய செல்வம் பெரும் என்பது அனுபவ ரீதியாக நாம் கற்றுக்கொண்டாலும், ஒவ்வொரு வருடமும் தங்கம் மீதான முதலீட்டில் எவ்வளவு லாபம் கிடைக்கிறது என்பதைக் கணக்கிட்டுத் தொடர்ந்து முதலீடு செய்து அனுபவம் பெற்றாலும், தங்கம் வாங்குவது ஒரு பண்டிகையாகவே கொண்டாடப்படுகிறது.
அக்ஷய திருதியை பண்டிகை ஆண்டுதோறும் வைகாசி மாதம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு மே 10 ஆம் தேதி காலை 4:17 மணிக்குத் திருதியை திதி தொடங்கி, மே 11 ஆம் தேதி அதிகாலை 2:50 மணிக்கு முடிவடையும்.

இந்த நேரத்தில் தங்கம், வெள்ளி போன்ற பளபளக்கும் பொருட்களை வாங்குவது மூலம் நம்முடைய வாழ்க்கையும் பளபளப்பாக ஜொலிக்கும் என்பது நம்பப்படுகிறது. ஆனால் செல்வம் பெருகும் அனைத்து பொருட்களையும் இதுகுறித்த நேரத்தில் வாங்கலாம்.
முன்பெல்லாம் இப்பண்டிகையின் போது தங்கம், வெள்ளி மட்டுமே வாங்கப்பட்ட நிலையில் தற்போது வீடு, ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் என அனைத்து பொருட்களும் சிறப்பு தள்ளுபடி அறிவிக்கப்பட்டு விற்கப்படுகிறது.
அக்ஷய திருதியை பண்டிகை தினத்தில் நகைக்கடைகளில் கூட்டம் அதிகமாக இருக்கும் காரணத்தால் பல வங்கிகள், நிதி நிறுவனங்கள் தங்க காயின்கள், தங்க பார்கள், வெள்ளி காயின்கள், வெள்ளி பார்களை விற்பனை செய்கிறது. இதையும் மக்கள் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
இதைவிடச் சிறப்பான விஷயம் என்னவென்றால் அக்ஷய திருதியை பண்டிகை தினத்தில் தங்கம் விலை தடாலடியாகக் குறையும் வாய்ப்புகளைக் கொண்டு இருப்பது தான்.
இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 150 ரூபாய் குறைந்து 66,150 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 170 ரூபாய் குறைந்து 72,160 ரூபாயாக உள்ளது.
இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 120 ரூபாய் குறைந்து 52,920 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை ஒரு கிலோவுக்கு 300 ரூபாய் உயர்ந்து 88,700 ரூபாயாக உள்ளது. பிளாட்டினம் விலை 10 கிராம் 120 ரூபாய் உயர்ந்து 26,260 ரூபாயாக உள்ளது.
More From GoodReturns

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு: நகைப்பிரியர்களுக்கு நல்ல செய்தி..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு.. வாரத்தின் முதல் நாளே சர்ப்ரைஸ்.. நல்ல சான்ஸ்..!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

தங்கம் விலை அதிரடி உயர்வு.. மதுரையில் ஒரு கிராம் தங்கம் விலை என்ன தெரியுமா..?

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை உயர்வு.. ஈரான் போருக்கு மத்தியில் மாட்டிக்கொண்ட தங்க நகை சந்தை..!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

ஈரான் போருக்கு மத்தியில் தங்க சந்தையில் புயலை கிளப்பிய புதின்!! வெளிவந்தது ரஷ்யாவின் தங்க புதையல்!!



Click it and Unblock the Notifications