அட்சய திருதியை பண்டிகை நாளில் இந்தியா முழுவதும் விற்பனை களைக்கட்டியுள்ளது, நேற்று 10 கிராம் தங்கம் விலை 3 முறை ரீடைல் சந்தையில் மாற்றப்பட்டு சராசரியாக 72,633 ரூபாய்க்கு விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த விலை நிலவரம் ஒவ்வொரு மாநிலம், நகரங்களுக்கு மாறப்படலாம் என்பதால் கூடுதலாகப் பணம் கொடுத்துவிட்டோமோ என்ற கவலைப்பட வேண்டாம்.
இந்திய மக்களின் அட்சய திருதியை பண்டிகை நாளில் ஒரு குண்டுமணி தங்கமாவது வாங்க வேண்டும் என்ற சென்டிமென்ட் தான் இந்த அட்சய திருதியை பண்டிகை விற்பனைக்கு முக்கிய டிரிகரிங் பாயின்ட் ஆக இருந்தது. அட்சய திருதியை நாளில் மக்களின் தங்கம் வாங்கும் அளவீடு, அதாவது buying ticket size சராசரியாக 3 கிராமுக்குக் குறைவாக உள்ளது என்பது தான் அதிர்ச்சி அளிக்கும் விஷயம்.

இந்த வருட அட்சய திருதியை பண்டிகை நாளில் தேர்தல் மற்றும் வெயில் காரணமாக, ஆப்லைன் அதாவது நகை கடைகள் தோல்வியை சந்தித்துள்ளன. ஆன்லைனில் தங்கம் விற்பனை செய்த நிறுவனங்கள் அனைத்தும் மாபெரும் வெற்றியையும் வளர்ச்சியையும் பதிவு செய்துள்ளது.
தேர்தல், வெயில்: தனிஷ்க் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அஜய் சாவ்லா அவர்கள் கூறுகையில், "எங்கள் நிறுவனம் 10,000 லேசான நகை வடிவமைப்புகளை இந்த அட்சய திருதியை பண்டிகைக்காக அறிமுகப்படுத்தியுள்ளது. கோடைக் காலத்தின் வெப்பம், (நடைபெற்று வரும்) தேர்தல்கள் மற்றும் அதிகரித்து வரும் தங்க விலை ஆகியவை வாடிக்கையாளர்களின் வாங்கும் ஆர்வத்தைச் சற்று குறைத்துள்ளன.
இருப்பினும், சந்தையில் டிமாண்ட் இருந்தது. அட்சய திருதியை விற்பனை சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் தொடரும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. குறைந்த மதிப்புள்ள தங்க நாணயங்களின் விற்பனை பெரிய அளவில் உயர்ந்துள்ளது" என்று கூறினார்.
கோல்டு சிட்பண்ட்: தேர்தல் தொடர்பான கட்டுப்பாடுகள் காரணமாக வாடிக்கையாளர்கள் பணத்தை எடுத்துச் செல்வதில் கடுமையான சூழ்நிலை இருந்ததால், டாடா குழுமத்தின் தனிஷ்க் நிறுவனம் வீடுகளில் இருந்தே கோல்டு சிட் பண்ட்-க்கு பணம் வசூலிக்கும் சேவையையும் வழங்கியது. இது வாடிக்கையாளர்களுக்குப் பெரிதும் உதவியாக இருந்தது எனவும் அஜய் சாவ்லா கூறினார்.
தேர்தல் காரணமாக அதிகப்படியான பணம் கொண்டு செல்ல முடியாத நிலை உள்ளது, இதுவும் நகை கடைகளில் தங்கம் வாங்க முடியாமல் போனதற்கு முக்கியமான காரணமாகும். இந்த சூழ்நிலையில் ஆன்லைன் மூலம் வாங்குவது அதிகரித்துள்ளது.
தங்க நகை விற்பனை சந்தையில் முன்னிலை இருக்கும் தனிஷ்க் நிறுவனம், ₹50,000 முதல் ₹1 லட்சம் வரையிலான விலையில் கிடைக்கும் லேசான நகைகள் அதாவது லைட்வெயிட் நகைகளை அதிகளவில் நாடு முழுவதும் அதன் கடைகளில் அறிமுகம் செய்துள்ளது.
அட்சய திருதியை நாளில் விற்பனை செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு 20 சதவீதம் வரை வளர்ச்சியை எதிர்பார்க்கிறது. இதேபோல கல்யாண், தங்கமயில், ஜாய் அலுக்காஸ், சென்கோ கோல்ட் & டைமண்ட்ஸ், மலபார் கோல்ட் & டைமண்ட்ஸ் போன்ற பிற முன்னணி நகை விற்பனை நிறுவனங்களும் இதே போன்ற போக்கை எதிர்கொண்டு உள்ளன.
ஆன்லைன் விற்பனை: இந்த தேர்தல் மற்றும் மோசமான வெயில் காரணமாக மக்கள் பிளிங்கிட், ஜெப்டோ மற்றும் ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் போன்ற குவிக் காமர்ஸ் தளங்களும் இந்த வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டன. இந்த தளத்தில் தங்கத்தை வாங்க முடிவது மட்டும் அல்லாமல் ஆர்டர் செய்யப்பட்ட தங்க நாணயம் மற்றும் வெள்ளி நாணயம் 10 நிமிடங்களுக்குள் வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே டெலிவரி செய்தன.
கூட்டணி: பல ஆன்லைன் வர்த்தக தளங்கள் அட்சய திருதியை விற்பனையை அதிகரிப்பதற்காக நகைக்கடை உரிமையாளர்களுடன் இணைந்து செயல்பட்டன. ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் நிறுவனம், மலபார் கோல்ட் அண்ட் டைமெண்ட்ஸ் மற்றும் முத்தூட் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து வாடிக்கையாளர்கள் வீட்டிலிருந்தே தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களை வாங்கும் வசதியை வழங்கியது.
More From GoodReturns

ஈரான் போர் குறித்த டிரம்பின் ஒற்றை அறிவிப்பு..!! தாறுமாறாக சரிந்த தங்கம் விலை..!!

தங்கம் விலையில் நடந்த திடீர் டிவிஸ்ட்!! 6 மணி நேரத்தில் நடந்த அதிரடி மாற்றம்!!

எல்லாம் காலியாக போகுது.. தங்கம், பிட்காயின் தான் இனி ராஜா! ராபர்ட் கியோசாகியின் பகீர் எச்சரிக்கை!

தங்கம், வெள்ளி விலை கிடுகிடு உயர்வு: முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

தங்கம், வெள்ளி விலை லைவ் அப்டேட்ஸ்: இனி வரும் நாட்களில் விலை ஏறுமா? இறங்குமா?

கோவையில் இன்று தங்கம் விலை அதிரடி சரிவு; இந்த நிலை அப்படியே நீடிக்குமா?

மதுரை மக்களே இன்று தங்க நகை வாங்கலாமா? உங்க ஊரில் ஒரு சவரன் விலை என்ன?

கோவையில் இன்று தங்கம் விலை அதிரடி உயர்வு: சாமானிய மக்கள் அதிர்ச்சி!!

சர்ரென சரிந்த தங்கம் விலை: முதலீட்டாளர்கள் இப்போது என்ன செய்யலாம்?

மதுரை மக்களே தங்கம் வாங்குற பிளான் இருக்கா? உங்களுக்கு தான் இந்த செய்தி

Gold விலை ஏறினாலும் தணியாத மோகம்! இந்தியர்களின் அதிரடி வேட்டை! கவலையில் நிதியமைச்சகம்?



Click it and Unblock the Notifications