அட்சய திருதியை பண்டிகை பெரும் கொண்டாட்டத்துடன் முடிவடைந்துள்ளது, நேற்று ஒரு நாள் வர்த்தகத்தில் மட்டும் இந்தியாவில் சுமார் 14000 கோடி ரூபாய் அளவிலான தங்கம் விற்கப்பட்டதாகக் கூறப்படும் வேளையில், இதற்குப் பல மறைக்கப்பட்ட உண்மைகளும், வர்த்தக சோகங்களும் அடங்கியுள்ளது.
தங்கம் விலை: தினமும் ரீடைல் சந்தை விற்பனைக்காக 2 முறை தங்கம் விலை மாற்றப்படும் வேளையில் அட்சய திருதியை பண்டிகைக்காகக் காலை 7 மணிக்கு ஒரு முறை அப்டேட் செய்யப்பட்டது கவனிக்கத்தக்க விஷயமாகும். நேற்று 10 கிராம் தங்கம் விலை 72,633 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

மக்கள் கொண்டாட்டம்: இந்த அட்சய திருதியை பண்டிகைக்கு ஆன்லைன், ஆப்லைன் ஆகிய இரு பிரிவிலும் அதிகப்படியான தங்கம் விற்கப்பட்டு உள்ளது, மக்களும் ஆர்வமாக வாங்கியுள்ளனர். தங்கத்தின் விலை உயர்வு இருந்தபோதிலும், அட்சய திருதியை திருநாளில் நகை விற்பனை அதிகரித்துள்ளது. அதேவேளையில் பல நகை கடைகளில் கூட்டம் காணப்படவில்லை, இதற்கு காரணம் ஆன்லைனில் தங்கம் வாங்குவது அதிகரித்துள்ளது தான்.
Pre-Booking: மேலும் சென்னை நகைக்கடை மற்றும் வைர வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ஜெயந்திலால் சலானி கூறுகையில், சுமார் 75% முதல் 80% வரையிலான வாடிக்கையாளர்கள், விலை உயர்வு பாதிப்பைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காக முன்பதிவு செய்து தங்கம் வாங்கியுள்ளதாகக் கூறினார்.
அமெரிக்க டாலர் ஆதிக்கம்: சுவாரஸ்யமாக, இந்த மாதத்தில் அமெரிக்க டாலர் மதிப்பு குறைந்த காரணத்தால் தங்கத்தின் விலை கிராமுக்கு வெறும் ரூ.155 மட்டுமே உயர்ந்தது, டாலர் வலிமையான இருந்திருந்தால் தங்கம் விலை தடாலடியாக உயர்ந்திருக்கும் என்று சலானி தெரிவித்துள்ளார்.
முக்கிய மாற்றம்: இந்த அட்சய திருதியை பண்டிகை தினத்தில், தங்கத்தின் விலை கடந்த ஆண்டை விட சுமார் 20 சதவீதம் அதிகரித்திருந்த போதிலும், அட்சய திருதியைவில் நகை விற்பனை சிறப்பாக இருந்தது. ஆனால் எப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு லேசான நகைகள் அதாவது லைட்வெயிட் நகைகள் மற்றும் தங்க நாணயங்களுக்கே அதிகமாக விற்பனை செய்யப்பட்டு உள்ளது என தொழில் துறை நிபுணர்கள் உறுதிப்படுத்துகின்றனர்.
மக்களின் சென்டிமென்ட்: அட்சய திருதியை பண்டிகை நாளில் ஒரு குண்டுமணி தங்கமாவது வாங்க வேண்டும் என்ற மக்களின் சென்டிமென்ட் தான் லைட்வெயிட் நகைகள் மற்றும் தங்க நாணயங்கள் விற்பனை செய்வதற்கான முக்கிய காரணமாகும்.
சோகக் கதை: இந்த ஆண்டு அட்சய திருதியை நாளில் நகை கடைகள் விற்பனை செய்யும் தங்கத்தின் அளவில் கடந்த ஆண்டை காட்டிலும் 15-18 சதவீதம் குறைந்துள்ளது. இதேவேளையில் தங்கம் விற்பனை செய்யப்பட்ட மதிப்பு 10-30 சதவீதம் அதிகரித்துக் காணப்படுகிறது என கள நிலவரம் கூறுகிறது. இதேபோல் ஆன்லைன் விற்பனை மூலம் 1 கிராம், 10 கிராம் தங்கம், வெள்ளி நாணயம் அதிகளவில் விற்கப்பட்டு உள்ளது.
More From GoodReturns

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!

ஈரான் போர் குறித்த டிரம்பின் ஒற்றை அறிவிப்பு..!! தாறுமாறாக சரிந்த தங்கம் விலை..!!

தங்கம் விலை: 11 நாட்களில் 5 நாட்கள் விலை ஏறி இருக்கு!! அப்போ அடுத்த வாரம் என்ன ஆகும்?

Akshaya Tritiya 2026:குறைந்த விலையில் தங்கம் வாங்க இப்பவே பிரைஸ் லாக் செய்யலாம்! கவலையே வேண்டாம்?

டிரம்ப் கவுன்ட்டவுன் ஸ்டார்ட்ஸ்! ஈரானுக்கு 48 மணிநேர கெடு- நாளைக்கு தங்கம் பங்குச்சந்தை என்னவாகுமோ?

மதுரையில் தங்கம் விலை அதிரடி சரிவு: சாமானிய மக்கள் மகிழ்ச்சி!!

எல்லாம் காலியாக போகுது.. தங்கம், பிட்காயின் தான் இனி ராஜா! ராபர்ட் கியோசாகியின் பகீர் எச்சரிக்கை!

தங்கம் விலையில் அதிரடி திருப்பம்! டிரம்ப் கொடுத்த போர் நிறுத்த ட்விஸ்ட்! அடுத்து என்ன நடக்கும்?

Gold விலை ஏறினாலும் தணியாத மோகம்! இந்தியர்களின் அதிரடி வேட்டை! கவலையில் நிதியமைச்சகம்?

மதுரை மக்களே தங்கம் வாங்குற பிளான் இருக்கா? உங்களுக்கு தான் இந்த செய்தி

தங்கம், வெள்ளி விலை கிடுகிடு உயர்வு: முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?



Click it and Unblock the Notifications