இந்தியாவில் இந்து மற்றும் ஜெயின் மதத்தை பின்பற்றுபவர்கள் ஒவ்வொரு வருடமும் அட்சய திருதியை பண்டிகை மிகப்பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. சிலர் வீட்டில் பூஜை செய்யும் வழக்கத்தை செய்யும் வழக்கத்தையும் கொண்டு உள்ளனர், ஆனால் பெரும்பாலானோர் இந்த நாளில் கோவிலுக்கு சென்றுவிட்டு தங்கம், வெள்ளி, வைரம் போன்றவற்றை வாங்குவது வழக்கமாக கொண்டு உள்ளனர்.
சித்திரை மாத அமாவாசைக்கு பின் வரும் வளர்பிறை காலத்தின் 3வது நாள் 'அட்சய திருதியை' பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதாவது ஏப்ரல் 22 ஆம் தேதி அட்சய திருதியை பண்டிகை. இந்த நாளில் முதலீடு செய்யவும், புதிய விஷயங்களை துவங்கவும், புதிய பொருட்களை வாங்கவும் உகந்த நாளாக பார்க்கப்படுகிறது.

அட்சய திருதியை நாளில் இந்தியா முழுவதும் உள்ள நகை கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதும் என்பதால் பிடித்த நகையை வாங்குவது என்பது மிகவும் கடினம். இப்படி முட்டி மோதி தங்கத்தை வாங்க வேண்டாம் என நினைப்பவர்கள் உட்கார்ந்த இடத்தில் இருந்த தங்கத்தை வாங்குவதற்கு வழி உள்ளது.
ஒவ்வொரு வருடமும் தீபாவளி, அட்சய திருதியை பண்டிகை நாளில் ஆன்லைனில் தங்கம் விற்பனைக்கு அதிகப்படியான விளம்பரம் செய்யப்படும் நிலையில் இந்த வருடமும் பல டிஜிட்டல் தளத்தில் தங்கத்தை விற்பனை செய்யும் சேவை விளம்பரப்படுத்தப்பட்டு உள்ளது. வருடம் முழுக்க டிஜிட்டல் தளத்தில் தங்கம் விற்பனை செய்யப்பட்டாலும் அட்சய திருதியை போன்ற முக்கிய நாளில் டிஜிட்டல் தளத்தில் தங்கம் வாங்குவது பெரிய அளவில் பலன் அளிக்கிறது.
டிஜிட்டல் தளத்தில் தங்கம் வாங்குவது என்பது நம்முடைய கைகளுக்கு கிடைக்காது, ஆனால் ஜியோ மார்ட் தளத்தில் தங்கத்தை ஹோம் டெலிவரி செய்யும் சேவையும் உள்ளது. பேடிஎம், கூகுள்பே போன்ற தளத்தில் வாங்கப்படும் தங்கம் டிஜிட்டல் வேலெட்-ல் சேக்கப்படும், இப்படி சேர்க்கப்படும் தங்கத்தை எப்போது வேண்டுமானாலும் விற்கலாம்.
அட்சய திருதியை தனத்தில் Paytm மூலம் டிஜிட்டல் தங்கத்தை வாங்குவது எப்படி:
படி 1: உங்கள் மொபைலில் Paytm செயலியை திறக்கவும்
படி 2: சர்ச் பார்-க்கு சென்று Gold என டைப் செய்தாலே PayTM Gold என்ற சேவை வரும்.
படி 3: தங்கத்தின் மீது கிளிக் செய்யவும். முதல் முறையாக செய்தால் சில அடிப்படை விஷயங்களை கேட்கும், அதை நிரப்பிய உடன் தங்கத்தை வாங்கலாம்.
படி 4: MMTC-PAMP அமைப்பின் விலையின் அடிப்படையில் தங்கத்தை வாங்க முடியும். பேடிஎம் தங்கத்தை கிராம் கணக்காவும் விற்கிறது, ரூபாய் மதிப்பீடிலும் விற்கிறது. 10 ரூபாய்க்கு கூட தங்கத்தை வாங்க முடியும்.
படி 5: நீங்கள் வாங்க விரும்பும் தொகை அல்லது கிராம் அளவீட்டை உள்ளிட்டு, விலையை தொர்ந்து கொண்டு தொடரவும் என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
படி 6: டிஜிட்டல் தங்கத்தை வாங்க Paytm Wallet, UPI, நெட் பேங்கிங், டெபிட் அல்லது கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தலாம்.
படி 7: வாங்கிய தங்கம் PayTM Gold சேவையின் லாக்கரில் இருக்கும்.

அட்சய திருதியை தனத்தில் Google pay மூலம் டிஜிட்டல் தங்கத்தை வாங்குவது எப்படி:
படி 1: Google Pay செயலியை திறக்கவும்.
படி 2: தேடல் பட்டியில், "கோல்ட் லாக்கர்" என்பதை உள்ளிட்டு தேடவும்.
படி 3: கோல்ட் லாக்கரைத் தட்டவும்.
படி 4: தங்கத்தை வாங்க (BUY) என்பதைத் தட்டவும். தங்கத்தின் தற்போதைய சந்தை வாங்கும் விலை (3 சதவீத ஜிஎஸ்டி வரி உட்பட) தோன்றும். அக்குறிப்பிட்ட தொகையை செலுத்தி தங்கத்தை டிஜிட்டல் லாக்கரில் சேமிக்க முடியும்.
அட்சய திருதியை தனத்தில் ஜியோ மார்ட் மூலம் டிஜிட்டல் தங்கத்தை வாங்குவது எப்படி:
படி 1: ஜியோ மார்ட் செயலியை திறக்கவும்.
படி 2: முதல் தளத்தில் உள்ள விற்பனை பிரிவுகளில் கடைசியாக இருக்கும் அட்சய திருதியை என்பதை கிளிக் செய்வும்
படி 3: இங்க தங்கம் மற்றும் வெள்ளி நாணயம் மட்டும் அல்லாமல் நகைகளும் உள்ளது
படி 4: பிடித்ததை தேர்வு செய்து ஆர்டர் செய்துவிட்டால் கொடுத்துள்ள முகவரிக்கு ஹோம் டெலிவரி செய்யும் சேவை கொண்டு உள்ளது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications