அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால் தங்கம் பல மடங்கு அதிகரிக்கும் என நம்பப்படும் காரணத்தால், இந்நாளில் தங்கம் வாங்க மிகவும் உவந்த நாளாகக் கருதப்படுகிறது.
இது உண்மை என நம்புவோரும் சரி, உண்மையில்லை எனக் கூறுவோரும் சரி இன்று (மே 14) தங்கம் வங்கினால் சுமார் 8 சதவீதம் அளவிலான லாபம் கிடைக்கும் எனச் சந்தை வவ்லுனர்கள் கணித்துள்ளனர்.
சர்வதேச பொருளாதாரம்
உலகளவில் பொருளாதாரம் சரிவு பாதையில் இருந்து மீண்டு வருவதற்காக அனைத்து நாடுகளும் அதிகளவிலான பொருளாதாரம், வர்த்தகம், நாணய புழக்கத்தில் தளர்வு அளித்திருக்கும் நிலையில் உலக நாடுகளில் பணவீக்கம் அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளது.
புதிய உச்சத்தைத் தொடும்
இதைச் சமாளிக்கும் வகையில் இந்தியாவில் மட்டும் அல்லாமல் உலகளவில் தங்கம் மீது முதலீடு செய்யத் துவங்கும் போதும் தங்கம் விலையில் அடுத்த சில மாதங்களில் புதிய உச்சத்தைத் தொடும் எனப் பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
பத்திர முதலீட்டில் லாபம் குறையும்
மேலும் பொருளாதார வளர்ச்சி அடையும் போது பத்திர முதலீட்டில் லாப அளவீடுகள் குறையும், இதனால் பெருமளவிலான முதலீடுகள் தங்க முதலீட்டி சந்தையில் குவிய வாய்ப்பு உள்ளது. இதனால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரலாற்று உச்சத்தை எட்டியது போலும் மீண்டும் உச்சத்தை அடையும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது
தங்கம் விலையில் மாற்றம்
சர்வதேசச் சந்தையில் தற்போது ஒரு அவுன்ஸ் தங்கம் 1800 டாலர் அளவீட்டில் வர்த்தகம் செய்யப்படும் நிலையில், அடுத்த சில மாதத்தில் 2,050 முதல் 2,200 டாலர் வரையில் உயரும் என முதலீட்டுச் சந்தை வல்லுனர்கள் கூறுகிறார்கள்.
இந்திய சந்தை விலை
இதேபோல் இந்தியாவில் அடுத்தச் சில மாதத்தில் 10 கிராம் 24 கேரட் தங்கம் 50,000 ரூபாயையும், 12 முதல் 15 மாதத்தில் 56,500 ரூபாயைத் தாண்டும் என்று கூறப்படுகிறது.
8 முதல் 18 சதவீத லாபம்
இதனால் தற்போது செய்யப்படும் தங்கம் மீதான முதலீட்டுக்கு 8 முதல் 18 சதவீதம் வரையிலான லாபம் கிடைக்கும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது. இதனால் நீண்ட கால முதலீட்டாளர்களுக்கும், குறுகிய கால முதலீட்டாளர்களுக்கும் தங்கம் வாங்க இது சரியான நாள் இந்த அட்சய திருதியை விளங்குகிறது.


Click it and Unblock the Notifications