நம் நாட்டின் பிரதான தொழில் விவசாயம். பல்வேறு கால நிலை சவால்களுக்கு மத்தியில் விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். விவசாயம் கஷ்டம் என்று தெரிந்தும் படித்த, நல்ல சம்பளத்தில் வேலை பார்க்கும் பல இளைஞர்கள் வேலையை விட்டு விவசாயம் செய்து சாதித்து காட்டி வருகின்றனர். கர்நாடகாவை சேர்ந்த சசி குமாரும் அவரது நண்பர்களும் ஐ.டி.வேலையை துறந்து விட்டு ஆர்கானிக் விவசாயத்தில் சாதித்து வருகின்றனர்.
கர்நாடக மாநிலம் திப்தூரில் விவசாய குடும்பத்தில் பிறந்தவர் சசி குமார். இவர் சொந்த ஊரில் பள்ளிப்படிப்பை முடித்தார். இதனையடுத்து பெங்களூரு பல்கலைக்கழகத்தில் படித்தார் பின்பு ஐ.ஐ.டி. சிகாவோவில் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொடர்பு குறித்து படித்தார். அதன் பிறகு தகவல் தொழில்நுட்ப துறையில் 17 ஆண்டுகள் பணிபுரிந்தார்.

அதில் விப்ரோவில் மட்டும் 13 ஆண்டுகள் கழிந்தது. அந்த நிறுவனத்தில் பணியாற்றிய போது, விவசாயத்தில் பெரும் பிரச்சினைகள் நிலவுவதையம், தன் அப்பாவை போன்ற விவசாயிகள் மிகவும் கஷ்டப்படுவதையும் பார்த்தார். இது, விவசாயிகளின் நலனுக்காக நாம் ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை அவரிடம் ஏற்படுத்தியது.
விப்ரோவில் உள்ள தனது நண்பர்களிடம் தனது ஐடியாக்களை தெரிவித்தார், அவர்களுக்கும் உற்சாகம் தொற்றிக் கொண்டது. சசி குமாரின் அற்புதமான பயணத்தில் இணைய 23 பேர் முடிவு செய்தனர். 2010ல் அவரும் அவரது நண்பர்களும் வேலையை விட்டு விட்டு அக்ஷயகல்பா ஆர்கானிக் நிறுவனத்தை தொடங்கினார்கள்.
சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் அதிக வருமானம் ஈட்ட விவசாயத்தை சிறப்பாக செய்ய விரும்பினர். விவசாயிகள் தங்கள் தயாரிப்புகளை விற்று பணம் சம்பாதிப்பதற்கு ஒரு வழி தேவை. அதை செய்ய, அவர்கள் ஒரு பொருளுடன் சந்தையுடன் இணைக்கப்பட வேண்டும் என்பதை புரிந்து கொண்டனர்.
இதனையடுத்து விவசாயிகள் மற்றம் அதை வாங்க விரும்பும் மக்களை இணைக்க அவர்கள் பாலை பயன்படுத்தினர். அவர்கள் சிறிய அளவில் தொடங்கி, பச்சைப் பால் உற்பத்தி செய்யும் மூன்று விவசாயிகளுடன் இணைந்து வேலை செய்தனர். ஆண்டுகள் செல்லச் செல்ல, அக்ஷயகல்பா ஆர்கானிக் செய்வதை அதிகமான மக்கள் விரும்பினர்.
இதனால் பால் வர்த்தகம் விரிவடைந்தது. இப்போது 600 பண்ணைகளில் 10,000க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ளனர். மேலும் 10 வருடங்கள் ஒன்றாக பணியாற்றிய 400 திறமைசாலிகளை கொண்ட குழுவும் உள்ளது.
அதேசமயம் அக்ஷயகல்பா ஆர்கானிக் பாலுடன் நிற்கவில்லை. அவர்கள் ஆரோக்கியமான உணவில் அக்கறை காட்டுவதன் மூலம், ஆர்கானிக் காய்கறிகள் மற்றும் பழங்களை சாகுபடி செய்ய தொடங்கினர். பெங்களூரு, சென்னை போன்ற நாட்டின் பெரிய நகரங்களில் உள்ள மக்களும் ஆர்கானிக் தயாரிப்புகளை விரும்பினர்.
வளர்ச்சியை நோக்கி செல்லும் போதும், சசி குமார் தனது பணியை மறக்கவில்லை, அவர் விவசாயத்தில் ஒரு பெரிய சிக்கலை கண்டார். விவசாயிகளுக்கு போதிய கல்வி இல்லை. எனவே அவர் விவசாயிகளுக்கு அவர்களின் வேலையில் சிறந்து விளங்கவும், பெருமைப்படவும் கற்பிக்கத் தொடங்கினார்.
சசி குமாரும் அவரது நண்பர்களும் தங்களது பயணத்தில் பிரச்சினைகளை சந்தித்தாலும் அவர்கள் மனம் தளரவில்லை. அவர்கள் அதிக பணம் சம்பாதிக்காத போதும் கடினமாக உழைத்தார்கள். ரூ.10 கோடியில் புதிய பால் ஆலையை திறந்தது அவர்களுக்கு ஒரு பெரிய திருப்பு முனையாக அமைந்தது.
நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் லிட்டர்கள் பதப்படுத்தும் திறனுடன், 2023-24ம் நிதியாண்டுக்குள் லாப நஷ்டம் இல்லாத நிலையை அடைவதை இந்த அமைப்பு இலக்காக கொண்டுள்ளது. கடந்த 2022-23ம் நிதியாண்டில் அக்ஷயகல்பா ஆர்கானிக் ஸ்டார்ட்அப் ரூ.205 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.
இந்த நிதியாண்டில் அக்ஷயகல்பா ஆர்க்கானிக்கின் வருவாய் 25 சதவீதம் வளர்ச்சி காணும் என்று சசி குமார் நம்பிக்கை தெரிவித்தார். அக்ஷயகல்பா ஆர்கானிக் சிறியதாக தொடங்கினாலும மிகப்பெரிய வெற்றியை பெற்றது. மக்கள் ஒன்றிணைந்து சுற்றுச்சூழலை பற்றி அக்கறை கொண்டால் அவர்களால் விஷயங்களை மாற்ற முடியும் என்பதை இது காட்டுகிறது.
சசி குமார் கூறுகையில், மக்கள் ஒரு இலக்கை பகிர்ந்து கொள்ளும்போது, அவர்களால் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதை எங்கள் பயணம் நிருபிக்கிறது என்று தெரிவித்தார். தற்போது 5,000 கிராமங்கள் மற்றும் 5,000 விவசாயிகளுக்கு உதவுவதே இலக்காக கொண்டு அவர்கள் செயல்பட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications