இந்திய சினிமா உலகின் பான் இந்தியா திரைப்படங்களுக்கு அதிகப்படியான வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், தென்னிந்தியாவில் RRR திரைப்படத்தின் மூலம் ஆலியா பட் இந்திய அளவில் பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றுள்ளார். ஒரு படத்திற்கு தற்போது 20 கோடி ரூபாய் சம்பளம் பெற்று வரும் வேளையில் இவருடைய மொத்த சொத்து மதிப்பு தற்போது 500 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.
2012 ஆம் ஆண்டு Student of the Year திரைப்படத்தில் அறிமுகமாகி, குறுகிய காலக்கட்டத்திலேயே மாபெரும் வளர்ச்சியை அடைந்த ஆலியா பட் கொரோனா லாக்டவுன் காலத்தில் போரடிக்கிறது என்று துவங்கிய ஒரு சைட் பிஸ்னஸ் இன்று 350 கோடி ரூபாய்க்கு விற்பனையாக உள்ளது.

ஆலியா பட் 2020ல் கொரோனா லாக்டவுன் காலத்தில் குழந்தைகளுக்கான பிரத்யேக ஆடைகளை விற்கும் எட்-ஏ-மம்மா ( Ed-a-Mamma ) எனும் நிறுவனத்தை தொடங்கினார். இந்த பிராண்ட்டை அறிமுகம் செய்யும் போது பெரிய அளவிலான வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும், பல ஆன்லைன் தளங்கள், ரீடைல் விற்பனை கூட்டணிகள் மூலம் முதல் வருடத்தில் ஒரு கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளது.
அடுத்த 12 மாதத்தில் சுமார் 10 மடங்கு லாபத்தை அடைந்தது, ஆனாலும் திரைப்படங்களுக்கு மத்தியில் மந்தமான நிலையில் ரன்பீர் கபூர் உடனான திருமணத்திற்கு பின்பு ஆலியா பட் கர்ப்பமான போது வீட்டில் ரெஸ்ட் எடுக்காமல் தனது எட்-ஏ-மம்மா ( Ed-a-Mamma ) வர்த்தகத்தை வீட்டில் இருந்துக்கொண்டே விரிவாக்கம் செய்தார்.

ஆன்லைன் தளங்கள், ரீடைல் விற்பனை கூட்டணிகள் மூலம் பெரிய அளவில் பலன் அளித்த நிலையில் 2022ல் சுமார் ரூ.150 கோடி லாபத்தை ஈட்டியுள்ளார். Ed-a-Mamma நிறுவனம் 2 முதல் 14 வயதுள்ள குழந்தைகளுக்கான ஆடைகளை விற்பனை செய்து வருகிறது, குழந்தைகள் சார்ந்த பிஸ்னஸ்-க்கு எப்போதும் பெரிய வாய்ப்பு இந்திய சந்தையில் உள்ளது.
இந்த நிலையில் ஆலியா பட் தனது திரைப்படங்கள், குடும்ப வாழ்க்கைக்கு மத்தியில் Ed-a-Mamma பிராண்ட்-ஐ சரிவர நிர்வாகம் செய்ய முடியாத காரணத்தால் சுமார் 300 -350 கோடி ரூபாய்க்கு ஈஷா அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் ரீடைல்-ன் ரிலையன்ஸ் பிராண்ட்ஸ் நிறுவனத்திற்கு மொத்தமாக விற்பனை செய்ய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications