முகேஷ் அம்பானியும், பாலிவுட் பிரபலங்களும் எப்போதும் நெருங்கிய தொடர்புடன் இருப்பது வழக்கம். அமிதாப் பச்சன் - முகேஷ் அம்பானி உடனான நட்பு முதல் இந்த தலைமுறை ஆலியா பட், பிரியாங்கா சோப்ரா - ஈஷா அம்பானி உடனான நட்பு, ரன்பீர் சிங் உடன் ஆகாஷ் அம்பானி உடனான நட்பு என சொல்லிக்கொண்டே போகலாம்.
எப்போதும் பெரும் புள்ளிகள் நட்பு பல வகையில் பலருக்கு உதவும், அந்த வகையில் ஈஷா அம்பானி உடனான ஆலியா பட்-ன் நட்பு மூலம் தற்போது பெரிய பிஸ்னஸ் டீல் நடந்துள்ளது. இந்த டீல் தான் தற்போது ஒட்டுமொத்த பாலிவுட் உலகத்தையே வியக்க வைத்து பொறாமையில் பொங்க செய்துள்ளது.

பாலிவுட் மட்டும் அல்லாமல் திரையுலக பிரபலங்கள் மத்தியில் எப்போதும் போட்டி, பொறாமை இருக்கும், இல்லையென்றாலும் அவர்களை சுற்றியுள்ள பிரபலங்கள் உருவாக்கிவிடுவார்கள். இந்த போட்டியால் நடிகர் நடிகைகள் பெரிய படங்களில் இணைவது மட்டும் அல்லாமல் வர்த்தக துறையிலும் இன்று அதிகப்படியான முதலீடு செய்து தங்களுடைய சொத்துக்களை உயர்த்தி வருகின்றனர்.
இப்படி பாலிவுட்-ன் முன்னணி நடிகையாக இருக்கும் ஆலியா பட் சமீபத்தில் Ed-a-Mamma என்ற குழந்தை ஆடை நிறுவனத்தை உருவாக்கினார். இந்த பிராண்ட் நிறுவனத்திற்கு அவரே பிராண்ட் அம்பாசிட்டராக இருந்த நிலையில் Ed-a-Mamma பிராண்ட் குறுகிய காலத்தில் குழந்தை ஆடை விற்பனை சந்தையில் பிரபலமானது மட்டும் அல்லாமல் குறிப்பிடத்தக்க அளவிலான வர்த்தகத்தை பெற்று இருந்தது.
இந்த நிலையில் ஆலியா பட் தனது திரைப்படங்கள், குடும்ப வாழ்க்கைக்கு மத்தியில் Ed-a-Mamma பிராண்ட்-ஐ சரிவர நிர்வாகம் செய்ய முடியாத காரணத்தால் ஈஷா அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் ரீடைல்-ன் கிளை நிறுவனமான ரிலையன்ஸ் பிராண்ட்ஸ் நிறுவனம் Ed-a-Mamma பிராண்டை மொத்தமாக வாங்க முடிவு செய்துள்ளது.

Ed-a-Mamma நிறுவனம் சுமார் 150 கோடி ரூபாய் மதிப்புடைய பிராண்டாக இருக்கும் வேளையில், இந்நிறுவனம் ஆன்லைன் வாயிலாக மட்டுமே விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில் ரிலையன்ஸ் ரீடைல் தனது குழந்தைகள் ஆடை பிரிவை விரிவாக்கும் திட்டத்துடன் ஆலியா பட்-ன் Ed-a-Mamma பிராண்ட்-ஐ 300 முதல் 350 கோடி ரூபாய் அளவிலான தொகைக்கு வாங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரிலையன்ஸ் பிராண்ட்ஸ் மற்றும் Ed-a-Mamma நிறுவனம் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை. ஆனால் தற்போது வெளியாகியுள்ள தரவுகள் படி அடுத்த 7 முதல் 10 நாட்களில் இதற்கான ஒப்பந்தம் முடிந்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது முழுக்க முழுக்க ஆலியா பட், ஈஷா அம்பானி உடனான நட்பின் வாயிலாக மட்டுமே நடந்துள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications