வாழ்க்கையில் முன்னேற சொந்தமாக தொழில் செய்வதுதான் சிறந்தது என்று பல இளைஞர்கள் நிரூபித்து வருகின்றனர். உத்தர பிரதேசத்தில் பிறந்து ஆஸ்திரேலியாவில் சாப்ட்வேர் துறையில் கொடி கட்டி பறக்கும் அமீர் குதுப்பும் அவர்களில் ஒருவர்தான்.
உத்தரபிரதேசத்தின் அலிகாரில் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர் அமீர் குதுப். இவர் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் டிகிரி முடித்தார். என்ஜினீயரிங் முடித்த கையோடு நொய்டாவில் உள்ள ஹோண்டா கார்ஸ் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார்.

சிறிது காலத்திலேயே அவருக்கு அந்த வேலை சலிப்பு தட்டியது. ஒரு கட்டத்தில் வேலையை விட்டு விட்டார். பின்பு ஆஸ்திரேலியாவில் எம்.பி.ஏ. படித்தால் தனது வணிகத்தையும் அறிவாற்றலையும் மேம்படுத்தலாம் என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டது.
இதனையடுத்து அமீர் ஆஸ்திரேலியாவுக்கு இடம் பெயர்ந்தார். அங்கு படிக்கும்போது, மற்றவர்களை போலவே, தனது வாழ்வாதாரத்துக்கு ஒரு நிலையான வருமான ஆதாரத்தை விரும்பினார். வேலைக்காக 300 இடங்களில் விண்ணப்பித்தார். ஆனால் ஒன்றும் வேலைக்கு ஆகவில்லை.
இறுதியில் அங்கு விமான நிலையத்தில் துப்புரவு பணியாளராக பகுதி நேர பணியாளராக பணியாற்றினார். மேலும் மற்றும் இரவு நேரங்களில் செய்தித்தாள்களை விற்பனை செய்தார். தொழில்நுட்பத்தின் மீதான ஆர்வம் மற்றும் தொழில் முனைவோர் மனப்பான்மை ஆகியவை அவரை நம்பிக்கையின் பாய்ச்சலுக்கு இட்டு சென்றது.
எலான் மஸ்க் மற்றும் ஸ்டீவ் ஜாப்ஸ் ஆகியோரால் உத்வேகம் பெற்றார். சிறிய மற்றும் பெரிய நிறுவனங்களுக்கு ஏராளமான தொழில்நுட்ப சேவை வழங்குனர்கள் இருந்தபோதிலும், நடுத்தர முதல் பெரிய நிறுவனங்களி்ன் தேவைகள் கவனிக்கப்படாமல் இருந்ததை அவர் உணர்ந்தார்.
இதுதான் என்டர்பிரைசஸ் மங்கி (Enterprise Monkey) உருவாகுவதற்கு உந்துதலாக அமைந்தது. 2014ல் அமீர் ஒரு கேரேஜில் இந்த நிறுவனத்தை தொடங்கினார். ஆஸ்திரேலியாவில் ஒரு ரயில் பயணத்தின்போது அவருக்கு முதல் வாடிக்கையாளர் கிடைத்தார். அந்த வாடிக்கையாளர் பணம் கொடுக்கவில்லை என்றாலும், அவரது நிறுவனத்துக்கான தங்கமான வாய்மொழி பரிந்துரைகளின் தொடக்கமாக நிரூபிக்கப்பட்டது.
என்டர்பிரைசஸ் மங்கி நிறுவனம் தொழில் தரநிலைகளை மறுவரையறை செய்யும் அதிநவீன சாப்ட்வேர், செயற்கை நுண்ணறிவு பயன்பாடுகள், வெப் மற்றும் மொபைல் ஆப்ஸ்களை வடிவமைப்பதில் நிபுணத்துவம் பெற்றது.
இந்நிறுவனத்தின் படைப்புகள் வெறும் தயாரிப்புகள் அல்ல, ஒட்டுமொத்த வணிகங்களையும் மேம்படுத்தும் தீர்வுகள். என்டர்பிரைசஸ் மங்கி நிறுவனத்தின் தலைமையகம் ஜீலாங்கில் உள்ளது. ஆனால் நான்கு நாடுகளில் அலுவலகங்களை கொண்டுள்ளது. உலகம் முழுவதும் இந்நிறுவனத்துக்கு வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
கடந்த 2022-23ம் நிதியாண்டில் இந்நிறுவனம் சுமார் ரூ.9.5 கோடி வருமானம் ஈட்டியுள்ளது. சர்வதேச தொழில்நுட்ப உலகில் முன்னணி நிறுவனமாக என்டர்பிரைசஸ் மங்கி மாறியுள்ளது. அமீர் குதுப் அடுத்த தலைமுறை முன்னோடிகளை வளர்ப்பதில் தனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையில் 8 தொழில்நுட்ப ஸ்டார்ட்அப்களில் முதலீடு செய்துள்ளார். அரசாங்க அமைப்புகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு ஏற்ற வகையில் அதிநவீன ஏ.ஐ. தயாரிப்புகளை உருவாக்குவது உள்ளிட்ட உயர்நிலை செயல்திட்டங்களிலும் இந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது.


Click it and Unblock the Notifications