உலக நாடுகளுடனான சீனாவின் நட்புறவு தொடர்ந்து வலுவிழந்து நிலையில், பொருளாதாரம் மற்றும் வர்த்தக வளர்ச்சியின் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. இது மட்டும் அல்லாமல் உற்பத்தி மற்றும் சேவைத் துறையில் பணிகளை எப்போதும் இல்லாத வகையில் துரிதப்படுத்தியுள்ளது. இதன் வாயிலாகத் தான் கொரோனா பாதிப்புக்குப் பின் பொருளாதாரத்தில் வளர்ச்சி கண்டுள்ள முதல் நாடாகச் சீனா விளங்குகிறது.
அமெரிக்கா - சீனா இடையே தொடர்ந்து வர்த்தகம் மற்றும் நட்புறவு பிரச்சனை இருந்து வரும் காரணத்தால் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவு எப்போதும் இல்லாத வகையில் மோசமான நிலையை எட்டியுள்ளது. இதுமட்டும் அல்லாமல் அமெரிக்கா தற்போது, சீனாவைக் கிடைக்கும் வழிகள் அனைத்திலும் வர்த்தகத் தடையை விதிக்கத் திட்டமிட்டு வருகிறது.
இந்நிலையில் சீனாவின் மிகப்பெரிய பேமெண்ட் நிறுவனமான Ant Group பங்குச்சந்தையில் சுமார் 200 பில்லியன் டாலர் அளவிலான மதிப்பீட்டில் இறங்கத் திட்டமிட்டுள்ளது.
Ant Group
சீனாவின் பெரும் பணக்காரராக இருக்கும் ஜாக் மா, உருவாக்கிய அலிபாபா நிறுவனத்தின் நிதியியல் வர்த்தகப் பிரிவு தான் Ant Group. ஆன்ட் குரூப் நிறுவனத்தின் அலிபே தான் சீனாவில் 80 சதவீத மக்கள் பணப் பரிமாற்றத்திற்கும், டிஜிட்டல் பேமெண்ட் சேவைகளுக்கும் பயன்படுத்தி வரும் முக்கியச் செயலியாகும்.
இதன் மூலம் அலிபே உலகிலேயே அதிக விலைமதிப்புமிக்க ஒரு ஸ்டார்ட்அப் யூனிகார்ன் ஆக விளங்குகிறது.
டபுள் ஜாக்பாட்
அலிபாபா நிர்வாகத்தில் இருந்து ஜாக்மா முழுமையாக வெளியேறிய நிலையில், தற்போது அலிபாபா நிர்வாகம் Ant Group நிறுவனத்தைச் சீனா மற்றும் ஹாங்காங் பங்குச்சந்தையில் ஓரே சமயத்தில் பட்டியலிட முடிவு செய்துள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்போது ஹாங்காங் சீனா அரசின் கட்டுப்பாட்டிற்குள் முழுமையாக வந்த நிலையில் இதை வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்துள்ளது அலிபாபா நிர்வாகம்.
மதிப்பீடு
தற்போது Ant Group சுமார் 150 பில்லியன் டாலர் அளவிலான மதிப்பீட்டைப் பெறும் எனத் தகவல் கிடைத்துள்ள நிலையில், இரு நாட்டுச் சந்தையிலும் Ant Group பட்டியலிடப்போவதால் சுமார் 200 பில்லியன் டாலர் அளவிலான மதிப்பீட்டைப் பெறும் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் மற்றும் ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.
அமெரிக்கக் கனவு
முதலில் Ant Group அமெரிக்காவின் நியூயார்க் பங்குச்சந்தையில் தான் பட்டியலிடத் திட்டமிட்டு இருந்தது, ஆனால் இரு நாடுகளுக்கும் இருக்கும் வர்த்தகப் பிரச்சனையின் காரணமாகத் தனது முடிவை மாற்றியுள்ளது அலிபாபா நிர்வாகம்.
சமீபத்தில் சீனா அரசு ஹாங்காங் நாட்டில் அமல்படுத்திய புதிய பாதுகாப்பு சட்டத்தின் வாயிலாகப் பல்வேறு வர்த்தகத் தடைகள் சீனா மீது அமெரிக்கா விதித்தது. இதுமட்டும் அல்லாமல் அமெரிக்கப் பங்குச்சந்தையில் இருக்கும் சீன நிறுவனங்களை வெளியேற்றவும் நடவடிக்கை எடுத்து வருகிறது அமெரிக்க அரசு.
அலிபாபா
ஜாக் மார உருவாக்கிய அலிபாபா நிறுவனம், Ant Group நிறுவனத்தில் சுமார் 33 சதவீத பங்குகளை வைத்துள்ளது. அலிபாபா பங்குச்சந்தையில் இறங்கும்போது இதன் மதிப்பு 25 பில்லியன் டாலர், ஆனால் இன்று சுமார் 660 பில்லியன் டாலர் அளவிலான மதிப்பீட்டிற்கு உயர்ந்துள்ளது.
வரலாற்று நிகழ்வு
Ant Group நிறுவனம் கணிப்பின் படி 200 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் பட்டியலிடப்பட்டால் அது ஒரு வரலாற்று நிகழ்வாகக் கருதப்படும், இதுவரை உலகில் எந்தொரு நிறுவனமும் 200 பில்லியன் டாலர் மதிப்பீட்டிற்குப் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஜாக் மா திடீர் முடிவு.. 8.2 பில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகள் விற்பனை..!
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications