கொரோனா பாதிப்பால் ஆன்லைன் வர்த்தகம் மந்தமாக இருந்து வரும் இந்தச் சூழ்நிலையில் சீனாவின் முன்னணி ஆன்லைன் வர்த்தகச் சாம்ராஜியமான அலிபாபா நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் முன்னாள் தலைவர் ஜாக் மா சுமார் 8.2 பில்லியன் டாலர் அளவிலான பங்குகளை விற்பனை செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார்.
ஜாக் மா-வின் இந்த முதலீடு இந்நிறுவன முதலீட்டாளர்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. ஆனாலும் பொதுச் சந்தை முதலீட்டாளர்கள் ஜாக் மா-வின் இந்த முடிவைப் பெரிய அளவில் வரவேற்றுள்ளனர்.
கொரோனா வைரஸ் கடந்த 100 ஆண்டுகளில் உலகின் மிக மோசமான சுகாதார & பொருளாதார பிரச்சனை! ஆர்பிஐ ஆளுநர்!

பங்கு விற்பனை
சீனாவின் மிகப்பெரிய பணக்காரர் ஆக இருக்கும் ஜாக் மா தொடர்ந்து முகேஷ் அம்பானியுடன் பணக்காரர்கள் பட்டியலில் போட்டி போட்டு வரும் நிலையில் அலிபாபா குரூப் ஹோல்டிங் நிறுவனத்தில் ஜாக் மா கையில் இருந்த 6.2 சதவீத பங்குகள் இருப்பை 4.8 சதவீதமாகக் குறைக்க முடிவு செய்துள்ளதாகவும்.
இந்தப் பங்குகளைத் தற்போதைய சந்தை விற்பனை விலைக்கு விற்க உள்ளார் ஜாக் மா, இந்த விற்பனை மூலம் ஜாக் மா கிட்டதட்ட 8.2 பில்லியன் டாலர் அளவிலான நிதியைப் பெற உள்ளார் என்று இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அலிபாபா வளர்ச்சி
சீனாவின் மிகப்பெரிய ஈகாமர்ஸ் நிறுவனமாக விளங்கும் அலிபாபாவின் வளர்ச்சி உலகின் பல நிறுவனங்களுக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது. மிகவும் குறைந்த காலகட்டத்தில் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது அலிபாபா. சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் அலிபாபாவின் வளர்ச்சி ஈகாமர்ஸ் துறையில் ஒரு holistic வளர்ச்சியாகப் பார்க்கப்படுகிறது.
சீனா முழுவதும் விற்பனையாளர்கள், அதிக வேகமான சிறப்பான விநியோக முறை, ஒரு நாள் டெலிவரி, விற்பனையாளர்களுக்கு அதிக லாபம், சிறு மற்றும் குறு விற்பனையாளர்களுக்கு அதிக முக்கியத்துவம் எனப் பல வகையில் அலிபாபா சிறந்து விளங்குகிறது.

40 சதவீத வளர்ச்சி
இந்த மாபெரும் நிறுவனத்தின் நிர்வாகப் பொறுப்பில் இருந்து ஜாக் மா கடந்த செப்டம்பர் மாதம் விலகிய நிலையில், நேரடி நிர்வாகப் பணிகளில் இருந்து முழுமையாக விடைபெற்றார். இவரது வெளியேறிய பின்பும் அலிபாபா நிறுவனத்தின் பங்கு மதிப்பு சுமார் 40 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.

ஜோச்ப் டிசாய்
ஜாக் மா-வை போலவே அலிபாபா நிறுவனத்தின் நிர்வாகத் துணை தலைவர் ஜோச்ப் டிசாய் அவர்களும் தனது 2.2 சதவீத பங்குகளை 1.6 சதவீதமாகக் குறைக்க முடிவு செய்துள்ளார். இதன் மூலம் சுமார் 3.3 பில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்யப்படுகிறது.

புதிய தலைவர்
ஜாக் மா தனது பொறுப்புகள் அனைத்தையும் டேனியல் ஜாங்க் கையில் கொடுத்துள்ள நிலையில் அலிபாபா குழுமத்தின் தலைவராக 2019ஆம் ஆண்டுச் செப்டம்பர் மாதம் பதவியேற்றார்.
இவருடைய தலைமையில் தான் அலிபாபா பங்குகள் கடந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் இருந்து 40 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.

என்ன காரணம்
சுமார் 8.2 பில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்ய என்ன காரணம்..? என்பது தான் தற்போது அனைத்து சீன மக்களின் கேள்வியாக உள்ளது.
ஜாக் மா அலிபாபா நிறுவன பொறுப்பில் இருந்து விலகிய உடன் மக்களுக்குச் சேவை செய்ய நன்கொடையாளராக மாறிவிட்டார். தற்போது விற்பனை செய்யப்படும் பங்குகள் மூலம் கிடைக்கும் பணத்தில் பெரும் பகுதி நன்கொடைக்காகப் பயன்படுத்த உள்ளார் ஜாக்மா.
சமீபத்தில் இவர் ஜப்பான் சாப்ட்பேங்க விஷன் பண்ட் திட்டத்தின் துணை தலைவர் பதவியில் இருந்தும் விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.