அலகாபாத்: அசிம் பிரேம்ஜி இந்தியாவின் பெரும் பணக்காரர்களுள் ஒருவர், விப்ரோ நிறுவனத்தின் தலைவர் மற்றும் தன்னுடைய நன்கொடை பணிகளுக்காக பரவலாக அறியப்படக்கூடிய ஒரு நபர்.
கடந்த 2023 ஆம் ஆண்டில் அசிம் பிரேம்ஜியின் குடும்பம் 1,774 கோடி ரூபாயை தானமாக வழங்கிய செய்தி கூட அண்மையில் வெளியானது. இப்படி பல்வேறு நல்ல விஷயங்களுக்காக அறியப்படக்கூடிய அசிம் பிரேம்ஜி மீது நீண்ட காலமாக ஒரு கிரிமினல் வழக்கு நிலுவையில் இருந்துள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு தொழிலாளர் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் அசிம் பிரேம்ஜி மீது தொழிலாளர் அமலாக்க அதிகாரி சிஜேஎம் நீதிமன்றத்தில் புகார் அளித்திருந்தார்.
அதில் அசிம் பிரேம்ஜியின் நிறுவனமான விப்ரோ, G for G Secure Solutions India பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் மனிதவள விநியோக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் விதிமுறைகளை மீறியதாக அசிம் பிரேம் மீது மீது புகார் பதிவு செய்யப்பட்டது.
மேலும் இவர்களுக்கு எதிராக 1976 சம ஊதிய சட்டத்தின் கீழ் புகார் அளிக்கப்பட்டது. இந்த வழக்கை கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 3ஆம் தேதி விசாரித்த சிஜேஎம் நீதிமன்றம் அசிம் பிரேம்ஜியை ஆஜராக வேண்டுமென சம்மன் அனுப்பியது. இதனை அடுத்து 2017 ஆம் ஆண்டு அசாம் பிரேம்ஜிக்கு எதிராக ஜாமினில் வெளிவரக்கூடிய வாரண்ட்டை பிறப்பித்தது.
இதனிடையே தன் மீதான வழக்கிற்கு எதிராக அசிம் பிரேம்ஜி அலகாபாத் உயர்நீதிமன்றத்தை நாடினார். இத்தனை ஆண்டுகளாக இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 13ஆம் தேதி அனைத்து வாதங்களும் முடிவடைந்து, தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் வழக்கின் தீர்ப்பினை அலகாபாத் உயர்நீதிமன்றம் வெளியிட்டுள்ளது. அசிம் பிரேம்ஜியை வழக்கில் இருந்து விடுவித்துள்ள நீதிமன்றம் அவர் மீதான வழக்கையே தள்ளுபடி செய்துள்ளது.
சிஜேஎம் நீதிமன்றம் இந்த வழக்கில் அசிம் பிரேம்ஜி சார்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணங்களையும் ஆதாரங்களையும் முறையாக ஆய்வு செய்யவில்லை என நீதிபதி ஷமிம் அகமது கூறியுள்ளார். அப்போது குறிப்பிட்டு பேசிய நீதிபதி இந்த வழக்கினை பொறுத்தவரை இதில் சம்பந்தப்பட்டுள்ள தனிநபரின் வாழ்க்கை மற்றும் சமூகத்தில் அவரது பணி மற்றும் பங்களிப்பு ஆகியவற்றை கவனத்தில் கொள்வது அவசியம் என தெரிவித்தார்.
அவரது பன்முகத்தன்மையை இந்த நீதிமன்றம் அங்கீகரிக்கிறது. தொழிலதிபராகவும் ஒரு சமூக அக்கறை கொண்டவராகவும் அவர் மேற்கொள்ளும் முயற்சிகள் சமூகத்தில் ஒரு சிறந்த அடையாளத்தை ஏற்படுத்தி உள்ளன என நீதிபதி பாராட்டு தெரிவித்தார்.
Story Written by: Devika
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications