சென்னை: இந்த ஆண்டு அட்சய திருதியை மே மாதம் 10ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அட்சய திருதியை வந்துவிட்டால் போதும் வீட்டில் உள்ள அனைத்து பெண்களும் நகை கடைகளில் தான் இருப்பார்கள். ஆனால் நகை வாங்க முடியாத சாமானியர்கள் வேறு சில பொருட்களைக் கூட வாங்கலாம். அவை என்ன என்பது குறித்து பார்ப்போம்.
அட்சய திருதியை தங்கம் மற்றும் வெள்ளி வாங்குவதற்கு உகந்த நாளாக மக்களால் கருதப்படுகிறது. 'அட்சயா' என்ற சொல்லுக்கு 'எப்பொழுதும் குறைவில்லாதது' என்பது பொருள். எனவே, இந்த நாளில் வாங்கும் பொருள் அல்லது இந்த நாளில் தொடங்கும் தொழில் மென்மேலும் வளரும் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது.

சிலர் அட்சய திருதியை அன்று, ஒரு கிராம் தங்க நகைகளையாவது வாங்கி விடுவார்கள். ஆனால் பலருக்கு நிதி நெருக்கடி காரணமாக, அவை முடியாமல் போகலாம். அவ்வாறு தங்கம் வாங்க முடியாத நபர்கள், வேறு சில விலை குறைந்த பொருட்களைக் கூட வாங்க முடியும்.
மண் பானை: அட்சய திருதியை அன்று எளிதாக வாங்கக்கூடிய மண்பானைகளை வாங்கலாம். மண் பானை லட்சுமி தேவியை மகிழ்விக்கும் ஒரு பொருளாக மக்களால் கருதப்படுகிறது. நீங்கள் சில காலண்டர் அட்டைகளில் பார்த்தால் மண்பானை கொண்ட லட்சுமி தேவியின் படம் இருக்கும். எனவே, மண்பானை வாங்குவது செல்வ செழிப்பை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
தானியங்கள்: வெண்கடுகு என்று சொல்லப்படுகிற கடுகை நாட்டு மருந்து கடைகளில் வாங்கலாம். இது சில வீடுகளில் திருஷ்டியைக் கழிக்க உதவும் பொருளாக உள்ளது. சிலர் லட்சுமி தேவியை வழிபடவும் வெண்கடுகைப் பயன்படுத்தியுள்ளனர். எனவே, இது போன்ற பொருட்களை அன்றைய தினம் வாங்குவது நல்லது என்ற நம்பிக்கை நிலவுகிறது. வெண்கடுகு மட்டும் அல்லாமல் அரிசி,பருப்பு வகைகள், காய்கறிகள், நெய், பால் போன்ற பொருட்களையும் வாங்கலாம்.
ஸ்ரீ சக்கரம்: அட்சய திருதியை அன்று ஸ்ரீ சக்கரத்தை வாங்கி பூஜையறையில் வைத்து வழிபடலாம். இதன் மூலம் லட்சுமி தேவியின் பூரண அருள் கிடைக்கும் என்பது ஐதீகம்.
சோழி: சிலர் இதனை தாயக்கட்டை விளையாடுவதற்கு பயன்படுத்துவார்கள். சோழி லட்சுமி தேவியை ஈர்க்கும் பொருளாகக் கருதப்படுகிறது. அட்சய திருதியை அன்று சோழியை வாங்கி சாமி கும்பிட்டு, பிறகு ஒரு துணியில் அதனை முடிந்து வைத்தால், செல்வம் பெருகும் என்ற நம்பிக்கை உள்ளது.
சங்கு: சங்கு உலகின் பணக்கார தெய்வமான வெங்கடாஜலபதி கையில் இருக்கும். இதனை வாங்குவதன் மூலம் தெய்வங்கள் மகிழ்ச்சி அடையும். மேலும் வீட்டிலும் மகிழ்ச்சி நிலவும் என்றும் கூறப்படுகிறது.
More From GoodReturns

சட்டென சரிந்த தங்கம் விலை!! வெள்ளி விலையும் குறைந்தது!! டிரம்புக்கு தான் நன்றி சொல்லனும்!!

சென்னையில் தங்கம் விலை திடீர் சரிவு.. ஆனா சர்வதேச சந்தையில் 3வது நாளாக உயர்வு.. என்ன நடக்குது..?!

தங்கம், வெள்ளி விலை சரிந்தது: இப்போதே முதலீடு செய்யலாமா? இன்னும் விலை குறையுமா?

வங்கி லாக்கரில் உள்ள உங்க நகை சேஃபா? லாக்கர் ரகசியமும் அபராதமும்?

மதுரையில் தங்கம் விலை திடீர் உயர்வு..!! இன்று தங்கம் வாங்கலாமா? காத்திருக்கலாமா?

கோயம்புத்தூர் மக்களே உங்க ஊரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன?

மதுரை தங்கம் விலையில் இன்று அதிரடி சரிவு..! தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்?

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் இன்றும் அதிசயம்.. வாங்க நல்ல வாய்ப்பு.. ஆனா ஒரு விஷயம்..!!

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு.. வாரத்தின் முதல் நாளே சர்ப்ரைஸ்.. நல்ல சான்ஸ்..!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

Silver Crash: தங்கத்தை விடுங்க.. வெள்ளியோட ஆட்டத்தை பாருங்க! முதலீடு செய்ய இது சரியான நேரமா?



Click it and Unblock the Notifications