இந்திய ரீடைல் சந்தையில் மிகவும் முக்கியமான வர்த்தக ஒப்பந்தமாகப் பார்க்கப்படும் பியூச்சர் - ரிலையன்ஸ் ரீடைல் வர்த்தகக் கைப்பற்றல் அமேசான் தொடுத்த வழக்கின் காரணமாக முடங்கியுள்ளது.
இந்த நிலையில் அடுத்த சில நாட்களில் சிங்கப்பூர் நடுவர் நீதிமன்றம் முக்கியத் தீர்ப்பை வெளியிட உள்ள நிலையில் பியூச்சர் குரூப் - அமேசான் முக்கியமான முடிவை எடுத்துள்ளது.
இந்த முடிவின் மூலம் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்திற்கு ஒரு விடிவு காலம் கிடைக்கும்.
ரிலையன்ஸ் ரீடைல் - பியூச்சர் குரூப் - அமேசான்
ரிலையன்ஸ் ரீடைல் - பியூச்சர் குரூப் - அமேசான் மத்தியில் கடந்த ஒரு வருடமாக நடந்து வரும் வர்த்தகப் பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வரும் விதமாகப் பியூச்சர் குரூப் - அமேசான் பிரச்சனை பேசி தீர்த்துக்கொள்ள முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது
சர்வதேச நடுவர் அமைப்பு
இந்த மாத இறுதியில் சிங்கப்பூரில் இருக்கும் சர்வதேச நடுவர் அமைப்பு பியூச்சர் குரூப் - ரிலையன்ஸ் ரீடைல் ஒப்பந்தத்திற்கு எதிராக அமேசான்.காம் தொடுத்த வழக்கின் இறுதி தீர்ப்பை அளிக்க உள்ளது. இந்தத் தீர்ப்பின் அடிப்படையில் நீதிமன்றத்திற்கு வெளியே பிரச்சனையைத் தீர்த்துக்கொள்ளப் பியூச்சர் குரூப் - அமேசான் மத்தியில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
தடை உத்தரவு
இதோடு சிங்கப்பூர் சர்வதேச நடுவர் அமைப்பிடம் பியூச்சர் குரூப் அக்டோபர் 2020ல் விதிக்கப்பட்ட தடை உத்தரவை நீக்கக் கோரியும் மனு கொடுத்துள்ளது. இந்தத் தடை உத்தரவு தான் பியூச்சர் குரூப் தனது வர்த்தகம் மற்றும் கடைகளை ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்திற்கு விற்க விடாமல் தடுக்கிறது.
பேச்சுவார்த்தை
அமேசான்.காம் சிங்கப்பூர் சர்வதேச நடுவர் அமைப்பின் தடை உத்தரவை வைத்தே இந்திய நீதிமன்றத்தில் தடை உத்தரவைப் பெற்று உள்ளது. இந்த நிலையில் இந்த மாத இறுதித் தீர்ப்பில் தடை நீக்கினால் பியூச்சர் குரூப்-க்கு லாபம், இதேவேளையில் அமேசான் நிறுவனத்திற்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்கப்பட்டால் தனிப்பட்ட முறையில் பியூச்சர் குரூப் - அமேசான் பேச்சுவார்த்தை நடத்தி தீர்க்க திட்டமிடப்பட்டு உள்ளது.
பியூச்சர் குரூப் - அமேசான் டீலிங்
பியூச்சர் குரூப் - அமேசான் மத்தியிலான பேச்சுவார்த்தையில் பியூச்சர் குரூப் நிறுவனத்தில் இருக்கும் சிறிய அளவிலான பங்குகளுக்கு எவ்வளவு பணம் அளிக்கப்பட வேண்டும் என்பதை ஆலோசனை செய்து பிரச்சனையை முடிக்க உள்ளது.
ரிலையன்ஸ் ரீடைல்
இதன் மூலம் ஏற்கனவே திட்டமிட்ட படி பியூச்சர் குரூப் மொத்தமும் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்திற்குத் தான், பியூச்சர் குரூப் முதலீட்டாளர்களும் ரிலையன்ஸ்-க்கு விற்பனை செய்யவே ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் அமேசான் இதை எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பது தான் தற்போதைய பிரச்சனை.


Click it and Unblock the Notifications