இந்தியா ஈகாமர்ஸ் சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வரும் அமெரிக்காவின் மிகப்பெரிய ஈகாமர்ஸ் நிறுவனமான அமேசான், இந்திய வர்த்தகத்தை மேம்படுத்தக் கடந்த சில வருடத்தில் பல முயற்சிகளைச் செய்துள்ளது.
இதில் மிகவும் முக்கியமான ஒன்று இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை உலக நாடுகளுக்குக் கொண்டு செல்வதும், இந்திய வர்த்தகர்களைச் சர்வதேச சந்தைக்குக் கொண்டு செல்வதும் இந்நிறுவனத்தின் முக்கிய இலக்காக வைத்துள்ளது. இதற்காகப் பல மில்லியன் டாலர் அளவிலான தொகையைக் கடந்த சில ஆண்டுகளாகச் செலவு செய்து வருகிறது.
இதன் படி 2020ல் அமேசான் மிகப்பெரிய வளர்ச்சியைத் தனது இலக்கில் அடைந்துள்ளது.
ஆன்லைன் வர்த்தகம் ஆதிக்கம்
கொரோனா பாதிப்பு நிறைந்த 2020ல் வர்த்தகச் சந்தை அதிகளவில் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் ஈகாமர்ஸ் மற்றும் ஆன்லைன் வர்த்தகத் தளங்கள் பலருக்கும் வாய்ப்புகளை அள்ளிக்கொடுத்தது. இதன் படி அமேசானின் வெளிநாட்டு வர்த்தகத் திட்டத்தில் இந்திய வர்த்தகங்கள் அதிகளவிலான நன்மை அடைந்துள்ளது என்றால் மிகையில்லை.
இந்திய தயாரிப்புகள் ஏற்றுமதி
2020ல் இந்தியாவில் இருந்து சுமார் 1 பில்லியன் டாலர் மதிப்பிலான இந்தியத் தயாரிப்புகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது. இதுமட்டும் அல்லாமல் இப்பிரிவு வர்த்தகத்தின் மூலம் சுமார் 3 லட்சம் வேலைவாய்ப்புகளையும் இந்தியாவில் உருவாக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளது அமேசான்.
அமேசான் முக்கிய இலக்கு
2025ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் இருந்து உலக நாடுகளுக்குச் சுமார் 10 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களையும், இதன் மூலம் 10 லட்சம் வேலைவாய்ப்புகளையும் உருவாக்க இலக்கு நிர்ணயம் செய்துள்ளதாக அமேசான் தலைவர் ஜெப் பைசோஸ் ஜனவரி 2020ல் தெரிவித்தார்.
அமேசான் இந்தியா
2020 காலகட்டத்தில் சுமார் 3 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்கள் ஏற்றுமதிக்காகத் தகுதி பெற்றாலும் 1 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்கள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது என அமேசான் இந்தியா தெரிவித்துள்ளது.
சிறு வியாபாரிகளுக்கு டிஜிட்டல் பவர்
இதேபோல் சுமார் 2.5 மில்லியன் சிறு வியாபாரிகளை டிஜிட்டல் திறன் கொண்ட வியாபாரிகளாக மாற்றி அமேசான் ஈகாமர்ஸ் தளத்தில் சேர்த்துள்ளோம் என அமேசான் இந்தியாவின் தலைவர் அமித் அகர்வால் தெரிவித்துள்ளார். இதேபோல் 2025க்குள் இதன் எண்ணிக்கை 1 கோடி வரையில் உயரும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
முகேஷ் அம்பானியின் புதிய வர்த்தகம் 'ஜியோபிஸ்னஸ்'.. 5 கோடி MSME நிறுவனங்கள் டார்கெட்..!
https://tamil.goodreturns.in/news/reliance-industries-launches-jiobusiness-mukesh-ambani-aims-to-take-50-million-msmes-online-022816.html


Click it and Unblock the Notifications