முகேஷ் அம்பானியின் புதிய வர்த்தகம் 'ஜியோபிஸ்னஸ்'.. 5 கோடி MSME நிறுவனங்கள் டார்கெட்..!

இந்திய வர்த்தகத் துறையில் கடந்த ஒரு வருடமாக ஹாட் டாப்பிக் ஆக விளங்குவது MSME நிறுவனங்கள் தான், இதற்கு முக்கியக் காரணம் கொரோனா காலத்தில் அதிகளவில் பாதிக்கப்பட்ட நிறுவனங்களும் இவை தான், லாக்டவுன் தளர்வுகள் குறைத்த பின்பு நாட்டின் வர்த்தகம் மற்றும் உற்பத்தியை அதிகரிக்க முக்கிய ஊந்து சக்தியாக விளங்கியதும் MSME நிறுவனங்கள் தான்.

இதற்காகவே மத்திய அரசு MSME நிறுவனங்களுக்கெனப் பல சிறப்புச் சலுகைகள், நிதியுதவிகள், கடன் சலுகைகள் எனப் பலவற்றை வாரி வழங்கியது. இந்நிலையில் இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் உலகில் MSME நிறுவனங்களின் பங்கு மிகவும் அவசியம்.

இந்த மிகப்பெரிய வாய்ப்பை விட்டு வைப்பாரா முகேஷ் அம்பானி, இதோ வந்துவிட்டது ஜியோபிஸ்னஸ்.

முகேஷ் அம்பானி ஜியோபிஸ்னஸ்

முகேஷ் அம்பானி ஜியோபிஸ்னஸ்

இந்தியாவில் மளிகைக் கடைகள், விற்பனையாளர்கள், உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் ஆகியவற்றை ஆன்லைன் விற்பனை தளத்திற்குக் கொண்டு வர உதவி செய்யும் நிறுவனங்களுக்குத் துக்கான்டெக் என்ற ஒரு சொல் உள்ளது.

இந்தப் பிரிவில் தான் தற்போது முகேஷ் அம்பானி ஜியோபிஸ்னஸ் என்ற புதிய வர்த்தகப் பிரிவைத் துவங்கியுள்ளார்.

ஜியோபிஸ்னஸ் அறிமுகம்

ஜியோபிஸ்னஸ் அறிமுகம்

ஆன்லைன் விற்பனை தளத்திற்கு வர வேண்டும் என விரும்பும் நிறுவனங்களுக்கு ஜியோபிஸ்னஸ் நிறுவனத்தின் வாயிலாக மேம்பட்ட பைபர் கிரேட் இணைப்பு, டிஜிட்டல் சேவைகள், டிஜிட்டல் சேவைகளை இயக்க கருவிகள் என அனைத்தையும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஜியோபிஸ்னஸ் வாயிலாக ஓரே இடத்தில் அளிக்கிறது

ஆகாஷ் அம்பானி - ஜியோபிஸ்னஸ்

ஆகாஷ் அம்பானி - ஜியோபிஸ்னஸ்

இதுகுறித்து ரிலையன்ஸ் ஜியோவின் தலைவர் ஆகாஷ் அம்பானி கூறுகையில், MSME நிறுவனங்கள் தான் இந்தியப் பொருளாதாரத்தின் அடித்தளமாக விளங்குகிறது. இன்றளவில் டிஜிட்டல் சேவை இல்லாமல் பல வர்த்தகங்கள் சந்தையில் இருக்கும் வர்த்தக வாய்ப்புகளை முழுமையாகப் பெற முடிவது இல்லை. இந்த இடைவேளையைப் பூர்த்தி செய்யவே ஜியோபிஸ்னஸ் வந்துள்ளது என ஜியோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஜியோபிஸ்னஸ் சேவை கட்டணம்

ஜியோபிஸ்னஸ் சேவை கட்டணம்

இந்நிலையில் ஜியோ MSME நிறுவனங்களுக்கு இந்தியாவில் வேறு எந்த நிறுவனங்களும் அளிக்காத மிகவும் மலிவான விலையில் சேவைகளை அளிக்கிறது. இதன் படி கனெக்ட்விட்டி திட்டங்கள் வெறும் 901 ரூபாய்க்கும், 3 சேவைகளும் அடங்கிய திட்டங்களுக்கு மாதம் வெறும் 5,500 ரூபாயில் டிஜிட்டல் சேவைகளை அளிக்கிறது.

வெறும் 5,500 ரூபாய்க்குச் சேவைகள்

வெறும் 5,500 ரூபாய்க்குச் சேவைகள்

தற்போது சந்தையில் MSME நிறுவனங்கள் இணைப்பு, ஆட்டோமேஷன் கருவிகள், டிஜிட்டல் சேவைகளுக்காக மாதம் 15,000 ரூபாய் முதல் 20,000 ரூபாய் வரையில் சேவை அளிக்கிறது. இந்தச் சேவைகள் அனைத்தும் ஓரே இடத்தில் அதுவும் மேம்படுத்தப்பட்ட பைபர் இண்டர்நெட் சேவை உடன் வெறும் 5,500 ரூபாய்க்கு ஜியோபிஸ்னஸ் அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

NowFloats நிறுவனம்

NowFloats நிறுவனம்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 2019ல் கைப்பற்றிய ஹைதராபாத்-ன் SAAS சேவைகளை அளிக்கும் NowFloats நிறுவனத்தின் 85 சதவீத பங்குகளை 141.63 கோடி ரூபாய்க்குக் கைப்பற்றியது. இந்த நிறுவனத்தின் வாயிலாகவே தற்போது ஜியோபிஸ்னஸ் சேவையை அறிமுகம் செய்து சேவை அளிக்க உள்ளது.

ஜியோமார்ட்-க்கு பெரிய லாபம்

ஜியோமார்ட்-க்கு பெரிய லாபம்

இந்தச் சேவை மூலம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தனது ஜியோமார்ட் சேவையை மிகப்பெரிய அளவில் மேம்படுத்த முடியும். குறிப்பாக ஆன்லைன் விற்பனை தளமாக விளங்கும் ஜியோமார்ட் தளத்தின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு விரைவாகச் சேவை அளிக்க வேண்டும் என்பதற்காக மளிகைக் கடைகள், சிறு வர்த்தகங்களுடன் இணைக்கத் திட்டமிட்டு வருகிறது. இந்தத் திட்டத்திற்கு ஜியோபிஸ்னஸ் பெரிய அளவில் பயன்படும்.

5 கோடி இலக்கு

5 கோடி இலக்கு

ஜியோபிஸ்னஸ் கீழ் அடுத்த சில வருடத்திற்குள்ளேயே சுமார் 5 கோடி MSME நிறுவனங்கள் மற்றும் வர்த்தகங்களை இணைக்க வேண்டும் என முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+