Amazon: இந்தியாவில் மட்டும் 1000 வீட்டுக்கு அனுப்ப முடிவு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகின் மிகப்பெரிய ஈ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் மந்தமான பொருளாதாரத்தைக் காரணமாகக் கூறி உலகம் முழுவதும் மிகப்பெரிய ஆட்குறைப்பு நடவடிக்கையை எடுத்து வரும் நிலையில், இந்தியாவில் சுமார் 1,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அமேசான் தனது சர்வதேச வர்த்தகத்தில் உள்ள ஊழியர்களில் சுமார் 18,000 பேரை பணிநீக்கம் செய்வதற்காக முடிவை அமேசான் சிஇஓ எடுத்த நிலையில் இந்தியாவில் அமேசான் அலுவலகத்தில் மட்டும் சுமார் 1,000 பணியாளர்களைப் பணியில் இருந்து நீக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Layoff: விடாது கருப்பு.. 2023ல் தொடரும் பணிநீக்கம்.. அச்சத்தில் மக்கள்..! Layoff: விடாது கருப்பு.. 2023ல் தொடரும் பணிநீக்கம்.. அச்சத்தில் மக்கள்..!

 அமேசான்

அமேசான்

உலகின் முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனமான அமேசான் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆண்டி ஜாஸ்ஸி ஜனவரி 18 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் பணியாற்றி வரும் தனது ஊழியர்கள் மத்தியில் சுமார் 18,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யப்போவதாக ஜனவரி 5ஆம் தேதி ஊழியர்களுக்கு அனுப்பிய ஈமெயிலில் அறிவித்தார்.

சிஇஓ ஆண்டி ஜாஸ்ஸி

சிஇஓ ஆண்டி ஜாஸ்ஸி

அமேசான் நிறுவனத்தின் சிஇஓ ஆண்டி ஜாஸ்ஸி ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில், "நிச்சயமற்ற ்" மற்றும் "விரைவான பணியமர்த்தல்" மூலம் வர்த்தகம் மற்றும் நிர்வாகம் பாதிப்பு அடைந்து வருவதாக ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

10000 ஊழியர்கள் பணிநீக்கம்

10000 ஊழியர்கள் பணிநீக்கம்

அமேசான் நவம்பர் மாதத்தில் 10000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதாக அறிவித்து, அந்தப் பணிகளை முழுமையாக முடித்த வேளையில் தற்போது 2023 ஆம் ஆண்டு உருவாகியுள்ள பொருளாதார மந்தநிலை காரணமாக முன்கூட்டியே 18,000 க்கும் மேற்பட்ட ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.

15 லட்சம் ஊழியர்கள்

15 லட்சம் ஊழியர்கள்

அமேசான் நிறுவனம் உலகளவில் சுமார் 15 லட்சம் ஊழியர்களைக் கொண்டு உள்ளது, இதில் 7 சதவீத ஊழியர்களை இந்தியாவில் கொண்டு உள்ளது. இதன் மூலம் இந்தியாவில் மட்டும் சுமார் 1 லட்சம் ஊழியர்களை இருப்பார்கள். இந்த நிலையில் 18000 ஊழியர்கள் பணிநீக்கத்தில் குறைந்தது 1000 பேர் இந்தியாவில் இருந்து நீக்கப்படலாம்.

ஈகாமர்ஸ் டூ ப்ரைம்

ஈகாமர்ஸ் டூ ப்ரைம்

அமேசான் இந்தியாவில் ஈகாமர்ஸ் மட்டும் அல்லாமல் அமேசான் வெப் சர்வீசஸ்-க்காக டேட்டா சென்டர், ப்ரைம் வீடியோ பிரிவுகளிலும் அதிகப்படியான ஊழியர்களை வைத்துள்ளது. அமேசான் கடந்த முறை 10000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யும் போது கார்பரேட், டெக்னாலஜி பிரிவில் பணிநீக்கம் செய்யப்பட்டது.

அமேசான் ஸ்டோர்ஸ்

அமேசான் ஸ்டோர்ஸ்

ஜனவரி 18 ஆம் தேதி முதல் துவங்க உள்ள பணிநீக்க நடவடிக்கையில் அதிகப்படியான ஊழியர்கள் அமேசான் ஸ்டோர்ஸ் மற்றும் PXT பிரிவுகளில் இருந்து தான் இருக்கும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.

இந்தியா ரவுண்டு ஓன்

இந்தியா ரவுண்டு ஓன்

மேலும் அமேசான் இந்தியா நிர்வாகம் நவம்பர் மாதம் செய்த பணிநீக்கத்தில் 300 முதல் 600 ஊழியர்கள் வெளியேற்றப்பட்ட நிலையில், அமேசான் ஊழியர்களை வெறுமென 3 - 4 மாத சம்பளத்துடன் பணிநீக்கம் செய்யாமல் Voluntary Separation Program (VSP) என்ற திட்டத்தைக் கொடுத்தது.

ராஜினாமா

ராஜினாமா

இத்திட்டத்திழன் கீழ் ஊழியர்கள் தானாக முன்வந்து இத்திட்டத்தை ஏற்றுப் பணியை ராஜினாமா செய்யும் வாய்ப்பை கொடுத்துள்ளது. இத்திட்டத்தை ஏற்றவர்களுக்குப் பல சலுகை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்தியா ரவுண்டு டூ

இந்தியா ரவுண்டு டூ

ஒரு ஊழியர் நிறுவனத்தால் பணிநீக்கம் செய்யப்பட்டால், அந்தப் பணிநீக்கத்தைச் சட்டப்பூர்வமாக எதிர்கொள்ள முடியும். ஆனால் ஒரு ஊழியர் தானாக முன்வந்து ராஜினாமா செய்யும்போது இதுபோன்ற பிரச்சனை இருக்காது. இதனால் இந்த முறையும் இதேபோன்ற திட்டத்தை அளிக்க அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது.

 நஷ்டம் 2 மடங்கு உயர்வு.. பணிநீக்கம் உறுதி..? அச்சத்தில் ஊழியர்கள்..! நஷ்டம் 2 மடங்கு உயர்வு.. பணிநீக்கம் உறுதி..? அச்சத்தில் ஊழியர்கள்..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Amazon May layoff 1000 employees in India from 18000 mega layoff plan worldwide

Amazon May layoff 1000 employees in India from 18000 mega layoff plan worldwide
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X