ரிலையன்ஸ் - பியூச்சர் குரூப் வழக்கில் அமேசான் வெற்றி.. முகேஷ் அம்பானி-க்கு பின்னடைவு..!

இந்திய ரீடைல் சந்தையில் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தமாகப் பார்க்கப்பட்ட ரிலையன்ஸ் ரீடைல் - பியூச்சர் குரூப் இணைப்பு ஒப்பந்தத்தைத் தடை செய்யவும் வேண்டும் என்று அமெரிக்காவின் முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனமான அமேசான், இந்திய நீதிமன்றத்தில் மட்டும் அல்லாமல் சிங்கப்பூரில் இருக்கும் சர்வதேச நடுவர் அமைப்பிலும் வழக்குத் தொடுத்தது.

இதில் அமேசான் நிறுவனத்திற்குச் சிங்கப்பூர் சர்வதேச நடுவர் அமைப்புச் சாதகமாகத் தீர்ப்பு கொடுத்த நிலையில், இந்தியாவில் இந்தத் தீர்ப்பு செல்லாது, அதை அமல்படுத்தக் கூடாது எனப் பியூச்சர் குரூப் டெல்லி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது.

 அமேசான் வெற்றி

அமேசான் வெற்றி


இந்த வழக்கின் இன்றைய விசாரணையில் சிங்கப்பூர் சர்வதேச நடுவர் அமைப்பின் தீர்ப்பை ஏற்கவும், அமல்படுத்தவும் இந்திய சட்டத்தில் அனுமதி அளிக்கப்படுகிறது என உச்ச நீதிமன்ற தீர்ப்பு அளித்துள்ளது.

இந்தத் தீர்ப்பு அமேசான் நிறுவனத்திற்கு மிகப்பெரிய வெற்றியாகப் பார்க்கப்படுகிறது, இதேவேளையில் முகேஷ் அம்பானியின் மிகப்பெரிய ரீடைல் கனவிற்குப் பெரிய முட்டுக்கட்டையாக அமைந்துள்ளது.

 

 முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானியின் மிகப்பெரிய ரீடைல் வர்த்தகக் கனவை அடைய பியூச்சர் குரூப்-ன் வர்த்தகம் மற்றும் கடைகளும் மிகவும் முக்கியமான இருக்கும் காரணத்தால் அமேசான் இந்நிறுவனத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் உடன் முதலீடு செய்துள்ளது தெரிந்தும், இந்நிறுவனப் பங்குகளையும், வர்த்தகத்தையும் சுமார் 24,731 கோடி ரூபாய்க்கு கைப்பற்ற ஒப்பந்தம் செய்தது.

 ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் - அமேசான்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் - அமேசான்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் போலவே இந்திய ரீடைல் சந்தையில் ஆதிக்கம் செலுத்த வேண்டும் எனத் திட்டமிட்டு வரும் அமேசான் ரிலையன்ஸ் ரீடைல் - பியூச்சர் குரூப் மத்தியில் செய்யப்பட்ட ஒப்பந்தம் தடை செய்யப்பட வேண்டும் என வழக்குத் தொடுத்து, அதில் வெற்றிபெற்றுள்ளது. இந்நிலையில் அமேசான் - பியூச்சர் குரூப் - ரிலையன்ஸ் ரீடைல் மத்தியில் என்ன நடக்கப்போகிறது என்பது தான் மொத்த ரீடைல் சந்தையும் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டு இருக்கிறது.

 டெல்லி உயர் நீதிமன்றம்

டெல்லி உயர் நீதிமன்றம்

டெல்லி உயர் நீதிமன்றத்தில் பியூச்சர் குரூப் மற்றும் அமேசான் தொடுத்த வழக்கை விசாரித்த நீதிபதி நரிமன் மற்றும் கவாய் தலைமையிலான பென்ச், பியூச்சர் குரூப் சார்பாக ஹரிஷ் சால்வே, அமேசான் சார்பாகக் கோபால் சுப்பிரமணியம் ஆகியோரின் வாதங்களைக் கேட்ட பின்பு, இந்திய சட்ட திட்டத்தின் படி சிங்கப்பூர் சர்வதேச நடுவர் அமைப்பின் தீர்ப்பை ஏற்கவும், அமல்படுத்தவும் அனுமதி அளிக்கப்படுகிறது என்று தீர்ப்பு வழங்கினார்கள்..

 சர்வதேச நடுவர் அமைப்பின் தீர்ப்பு

சர்வதேச நடுவர் அமைப்பின் தீர்ப்பு

பல மாதங்களாக நடந்து வரும் இந்தப் பிரச்சனை தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இதில் முக்கியமான பிரச்சனையாகப் பார்க்கப்பட்டது சிங்கப்பூர் சர்வதேச நடுவர் அமைப்பின் தீர்ப்பை ஏற்று ரிலையன்ஸ் ரீடைல் - பியூச்சர் குரூப் தடை செய்வதாக இல்லை அனுமதிப்பதா என்பது தான். அமேசான் மற்றும் பியூச்சர் குரூப் தொடர்ந்து மேல்முறையீடு செய்யும் காரணத்தால் பல மாதங்களாக வழக்கு நடைபெற்று வருகிறது.

 பியூச்சர் குரூப் திட்டம் என்ன..?

பியூச்சர் குரூப் திட்டம் என்ன..?

தற்போது இதற்குத் தீர்வு காணப்பட்டு உள்ள நிலையில் பியூச்சர் குரூப் சிங்கப்பூர் சர்வதேச நடுவர் அமைப்பில் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு இருக்கும் காரணத்தால் விரைவில் பியூச்சர் குரூப் நிறுவனத்திற்குத் தீர்வு காண வாய்ப்பு இல்லை என எதிர்பார்க்கப்படுகிறது.

அமேசான் - பியூச்சர் குரூப்

அமேசான் - பியூச்சர் குரூப்

அமேசான் நிறுவனம் பியூச்சர் குரூப் கடன் சுமையில் சிக்கியிருந்த போது பியூச்சர் கூப்பன்ஸ் நிறுவனத்தில் சுமார் 49 கோடி ரூபாய் முதலீடு செய்து சுமார் 9.82 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டைச் செய்தது. இந்த முதலீட்டில் அடுத்த 5 முதல் 10 வருடத்திற்கு நிறுவனத்தின் பெரும் பகுதி பங்குகளையும், வர்த்தகத்தையும் கைப்பற்ற உள்ளதாகவும், இதற்குச் சில கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது அமேசான்.

 சக போட்டி நிறுவனம்

சக போட்டி நிறுவனம்

இதை அனைத்தையும் மீறி பியூச்சர் குரூப் தற்போது தனது வர்த்தகம் மற்றும் பங்குகளையும் அமேசானின் சக போட்டி நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்படும் காரணத்தால், அமேசான் வழக்கு கொடுத்துத் தற்போது வெற்றிபெற்று உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+