இந்திய வர்த்தக வரலாற்றில் பல இடத்தில் டாடா-வும் அம்பானியும் நேருக்கு நேர் போட்டிப்போட்டு தருணங்கள் மிகவும் குறைவு என்றாலும், ஒவ்வொன்றும் முக்கியமானது. அந்த வகையில் கடந்த 5 வருடத்தில் இரு சாம்ராஜ்ஜியங்களும் ரீடைல் சந்தையை கைப்பற்றும் திட்டத்துடன் களத்தில் இறங்கியுள்ளது.
ரிலையன்ஸ் ரீடைல் தனது புதிய பிராண்ட் 'யூஸ்டா’ (Yousta) மூலம் இந்தியாவில் புதிதாக உருவாகியுள்ள வேல்யூ பேஷன் பிரிவில் நுழைந்துள்ளது. ஸ்டைலான மற்றும் மலிவு விலையில் ஆடைகளை வழங்குவது தான் இந்த வேல்யூ பேஷன் பிரிவு, இதில் தற்போது டாடா குழுமத்தின் பிரபலமான பிராண்டாக மாறியிருக்கும் ஜூடியோ பிராண்டின் வெற்றியில் பங்குப்போட ரிலையன்ஸ் Yousta பிராண்ட் மிகப்பெரிய அளவில் விரிவாக்கம் செய்து வருகிறது.

2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்ட யூஸ்டா, அதன் முதல் ஆண்டிலேயே 50 கடைகளைத் திறந்து குறிப்பிடத்தக்க சாதனையை அடைந்துள்ளது. இங்கு பெரும்பாலான பொருட்கள் ரூ.499 க்கும் குறைவாக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது, அனைத்து பொருட்களுக்கும் 999 ரூபாய்க்கு உள்ளேயே விலை நிர்ணய செய்யப்பட்டு அதிகப்படியான வாடிக்கையாளர்களை ஈர்க்கும் இலக்குடன், ஜூடியோவின் மாடலை பின்பற்றி நடக்கிறது.
ரிலையன்ஸ் ரீடைல், Yousta பிராண்டின் மூலம் ஒவ்வொரு வாரமும் புது புது கலெக்ஷன்-ஐ அறிமுகம் செய்யவும், தினமும் பயன்படுத்தும் யுனிசெக்ஸ் ஆடைகளையும், character merchandise ஆகிய பொருட்கள் வழங்க திட்டமிட்டு உள்ளது. ஜூடியோ-வின் வெற்றியைப் பின்பற்ற விரும்பும் Yousta பிராண்டின் அப்படியே காப்பி அடிக்க துவங்கியுள்ளது.
இதேபோல் Yousta பிராண்டின் ஜூடியோ போலவே பிரான்சைஸ் மாதிரியுடன் இணைந்து, செலவுகளைக் குறைத்து வரைவாக விரிவாக்கத்தை துரிதப்படுத்த முடிவு செய்துள்ளது.
இதற்காக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கடந்த நிதியாண்டில் ரிலையன்ஸ் ரீடைல்-க்கு ரூ.14,839 கோடி ரூபாயை கடனாக கொடுத்துள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் பெறப்பட்ட மிகப்பெரிய முதலீடாக இது உள்ளது. இது ரீடைல் துறையில் மலிவுவிலை பேஷனுக்கு அதிகரித்து வரும் தேவையைப் பயன்படுத்திக் கொள்ளும் நோக்கத்தில் முதலீடு செய்யப்பட்டு உள்ளது.
இந்தியாவில் வேல்யூ பேஷன் பிரிவு விரைவாக விரிவடைந்து வருவதால், ரிலையன்ஸ் ரீடைலின் யூஸ்டா மற்றும் டாடா குழுமத்தின் ஜூடியோ இடையேயான போட்டி தீவிரமடைய உள்ளது. சமீபத்தில் டாடா ஜூடியோ அழகு சாதன பொருட்களுக்காக தனிப்பட்ட கடையை திறந்தது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications