இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரராக இருக்கும் முகேஷ் அம்பானி-யின் மூத்த மகனும், ஜியோ இன்போகாம் நிறுவனத்தின் தலைவருமான ஆகாஷ் அம்பானிக்கு சில நாட்களுக்கு முன்பு அழகான பெண் குழந்தை பிறந்தது அனைவருக்கும் தெரியும். இந்த விஷயத்தை ஒட்டுமொத்த வர்த்தக உலகமும் கொண்டாடிய நிலையில் தற்போது அம்பானி குடும்பம் குழந்தையின் பெயரை அறிவித்துள்ளனர்.
ஆகாஷ் அம்பானி மற்றும் ஷ்லோகா மேத்தா ஆகியோர் தங்களுடைய பெண் குழந்தையின் பெயரை வெள்ளிக்கிழமை வெளியிட்டனர். ஆசியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகனும் மருமகளும் தங்கள் மகளுக்கு வேதா என்று பெயரிட்டுள்ளதாக இன்ஸ்டாகிராம் பதிவு மூலம் உலகிற்கு அறிவித்தார்.

மகளின் பெயர் குறித்து ஆகாஷ் அம்பானி மற்றும் ஷ்லோகா மேத்தா செய்த சமுக வலைத்தள பதிவில் கிருஷ்ணரின் அருளுடனும், திருபாய் & கோகிலாபென் அம்பானியின் ஆசீர்வாதத்துடனும், பிருத்வி தனது சகோதரிக்கு 'வேதா ஆகாஷ் அம்பானி' (Veda) என பெயரிடப்பட்டு உள்ளதை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறார்" என்று ட்வீட் செய்துள்ளனர்.
ஆகாஷ் அம்பானி மற்றும் ஷ்லோகா மேத்தா ஒரு வாரத்திற்கு முன்பு தங்களின் இரண்டாவது குழந்தையை பெற்றெடுத்தனர். டிசம்பர் 2020 இல், இந்த ஜோடி தங்களுடைய முதல் குழந்தை ஆண் பிள்ளைக்கு பிருத்வி என்று பெயரிட்டனர்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முகேஷ் அம்பானியின் ஓரே மகளான ஈஷா அம்பானி மற்றும் அவரது கணவர் ஆனந்த் பிராமல் ஆகியோருக்கு கிருஷ்ணா மற்றும் ஆதியா என்ற இரட்டை குழந்தைகள் பிறந்தனர். இப்படி அம்பானி வீட்டில் அடுத்தடுத்து குவா குவா சத்தம் கேட்கும் நிலையில், விரைவில் கெட்டிமேளம் சத்தம் கேட்கபோகிறது.

முகேஷ் அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்சண்ட் ஆகியோரின் ரோகா விழா டிசம்பர் மாதம் ராஜஸ்தான் மாநிலம் நாத்துவாராவில் உள்ள ஸ்ரீநாத்ஜி கோவிலில் இரு குடும்பத்தின் முன்னிலையில் நடந்தது.
இதை தொடர்ந்து ஜனவரி மாதம் மும்பையில் முகேஷ் அம்பானியின் அண்டிலியா வீட்டில் பிரம்மாண்டமாக அதிகாரப்பூர்வ நிச்சயதார்த்த விழா நடந்தது. விரைவில் அம்பானி குடும்பம் இவர்களின் திருமண தேதியை அறிவிக்க உள்ளனர்.


Click it and Unblock the Notifications