இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டும் எதை தொட்டாலும் பொன்னாக மாறிவிடும். இந்தியாவில் பெரிய பணக்காரர்களின் பட்டியலை எடுத்துப் பார்த்தால் அவர்களில் பெரும்பாலானவர்கள் பனியா சமூகத்தை சார்ந்தவர்களாக தான் இருப்பார்கள்.
முகேஷ் அம்பானி ,லட்சுமி மிடல் , கௌதம் அதானி , குமாரமங்கலம் பிர்லா என இந்திய பணக்காரர்கள் பட்டியலில் இருப்பவர்கள் பெரும்பாலானவர்கள் பனியா சமூகத்தை சேர்ந்தவர்கள் தான். நாட்டின் மக்கள் தொகையில் வெறும் ஒரு சதவீதம் தான் இவர்கள் இருக்கிறார்கள். ஆனால் இவர்களிடம் தான் பெரும்பாலான இந்திய பணமும் இருக்கிறது. பனியா சமூக மக்கள் மட்டும் எந்த துறையில் கால் பதித்தாலும் பணம் சம்பாதிக்க முடிகிறது அது எப்படி என்பது தான் தற்போது நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

வருமானம் மூலதனம்: பொதுவாக நமக்கு வரும் சம்பளத்தை சார்ந்து தான் நம்முடைய வாழ்க்கை முறையை அமைத்துக் கொண்டிருப்போம். ஆனால் பனியா சமூக மக்கள் அப்படி கிடையாது அவர்களுக்கு கிடைக்க கூடிய ஒவ்வொரு ரூபாய் பணமும் அவர்கள் முதலீடாகவும் மூலதனமாகவும் தான் பார்ப்பார்கள். வரும் வருமானத்தை எந்த தொழிலில் முதலீடு செய்யலாம் என்பதில் தான் அவர்களின் கவனம் இருக்கும். எனவே பணம் அவர்களுக்கு வளர்ச்சி அடையக்கூடிய ஒரு சொத்து .
சிறுவயதிலேயே தொழில் ஞானம்: பிள்ளைகளை சிறுவயதில் இருந்தே தாங்கள் செல்லும் தொழில்களுக்கெல்லாம் உடன் அழைத்துச் சென்று விடுவார்கள் .அதனால் சிறு வயது முதலே ஒரு தொழிலை எப்படி நடத்த வேண்டும், தொழில் சம்பந்தப்பட்ட பேச்சு வார்த்தைகளை எப்படி வெற்றி பெற வேண்டும் ,ஒரு பொருளுக்கு அல்லது ஒரு சேவைக்கு எப்படி விலை நிர்ணயம் செய்வது , நமக்கு பணம் எப்படி வருகிறது அதனை எப்படி பெருக்க வேண்டும் என ஒரு எம்பிஏ பட்டதாரி என்னென்ன கற்றுக் கொள்வாரோ அவை அனைத்தையும் பனியா சமூகத்தினர் சிறு வயதிலேயே தங்களின் பிள்ளைகளுக்கு கற்றுத் தந்து விடுவார்கள்.
சொத்தினை பெருக்குவது: தலைமுறை தலைமுறையாக பனியா சமூகத்தினர் தங்களுடைய செல்வத்தை பாதுகாப்பதிலும் அதனை மேற்கொண்டு வளர்ப்பதிலும் திறன் பெற்றவர்கள். சிறுவயதில் இருந்தே அவர்களுக்கு வழங்கப்படும் மிக சார்ந்த கல்வி அவர்களை வரி சேமிப்பு , செல்வத்தை பெருக்குவது , நிதி ரீதியாக ஒழுங்காக இருப்பது போன்றவற்றை தந்துவிடுகிறது.
பெண்களுக்கு முக்கியத்துவம்: பாரம்பரியமாகவே தங்கள் குடும்ப பெண்களுக்கு பெரிய அளவில் அதிகாரம் அளித்திருந்தார்கள். குடும்பத்தை கவனிக்கும் பொறுப்பு முழுவதும் பெண்களிடம் தான் இருந்தது. தங்க நகைகளை சேர்ப்பதில் பெண்கள் முக்கிய பங்கு ஆற்றினார்கள் என்று சொல்லலாம் . சமகாலத்தில் பனியா சமூகத்தினர் தங்களின் பெண்களுக்கு தங்கள் நிறுவனங்களில் முக்கிய தலைமை பொறுப்புகளையும் மேலாண்மை பொறுப்புகளையும் வழங்குகிறார்கள். இது தவிர குடும்ப தொழில்களுக்கான நன்கொடை சார்ந்த நிறுவனங்களை பெரும்பாலும் பெண்கள் தான் வழி நடத்துகிறார்கள்.
காலத்திற்கு ஏற்ப மாற்றம்: காலத்திற்கு ஏற்ப பனியா சமூகத்தினர் தங்களை தகவமைத்துக் கொள்வார்கள். சிறு சிறு கடைகள் மூலம் வணிகம் செய்து வந்தவர்கள் தான் தற்போது பங்குச்சந்தை , ஸ்டார்ட் ஆப்புகள் என அனைத்து துறைகளிலும் கால் பதித்து விட்டார்கள் அவர்களை பொறுத்தவரை ஒவ்வொரு ரூபாயும் மூலதனம் அந்த ஒவ்வொரு மூலதனமும் வளர்ச்சி அடையும் சொத்து.


Click it and Unblock the Notifications