பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளான இன்று, அவரை பற்றி பலருக்கும் தெரியாத விஷயத்தை தான் இன்று நாம் பார்க்கப்போகிறோம்.
பாபாசாகேப் அம்பேத்கர், பி ஆர் அம்பேத்கர் என பல பெயர்களால் அழைக்கப்படும் இவருக்கு இன்றைய இளம் தலைமுறையினர் மத்தியில் அதிகம் விரும்பப்படும், போற்றப்படும் தலைவராக உள்ளார். அம்பேத்கர்-ஐ அனைவருக்கும் ஒரு சட்ட நிபுணர், சமூக சீர்திருத்தவாதியாக தான் அனைவருக்கும் தெரியும். ஆனால் இவருக்கு மற்றொரு முகம் உள்ளது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய குழுவின் தலைவராக இருந்ததால், அவர் இந்திய அரசியலமைப்பின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். ஆனால் அம்பேத்கர் பற்றி அதிகம் அறியப்படாதது பொருளாதாரத்தில் அவரது நிபுணத்துவம் தான்.
அம்பேத்கர் அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகம் மற்றும் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் ஆகியவற்றில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். அவர் மும்பையில் உள்ள சிடன்ஹாம் வணிகம் மற்றும் பொருளாதாரக் கல்லூரியில் அரசியல் பொருளாதாரப் பேராசிரியராகவும் இருந்தவர்.
ஒரு பொருளாதார நிபுணராக, அம்பேத்கர் ஒரு குறிப்பிட்ட சிந்தனையை பின்பற்றுவர் அல்ல, அனைவருக்கும் சம உரிமை, சமமான வாய்ப்புகள் உருவாக்குவதில் முக்கிய கவனம் செலுத்திய காரணத்தால் அதை அடிப்படையில் இதுகொண்டு வர வேண்டும் என்பதை உணர்ந்து அரசியலமைப்பின் வாயிலாக மாற்றத்தை கொண்டு வந்தார்.

பணவியல் கொள்கை : லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் அம்பேத்கர் The problem of the rupee: Its origin and its solution என்ற ஆய்வறிக்கையை சமர்ப்பித்தார். அம்பேத்கர், அக்காலத்தின் புகழ்பெற்ற பொருளாதார நிபுணர் ஜான் மேனார்ட் கெய்ன்ஸ் உடன் இந்தியாவிக்கு gold standard தேவை குறித்து வாதிட்டார். மேலும் அரசிடம் இருக்கும் தங்கத்தை நாணயங்களை மாற்றி புழக்கத்திற்கு விடும் போது ரூபாய் மதிப்பின் தடுமாற்றங்களை குறைக்க முடியும் என்ற யோசனையை முன் வைத்தார்.
பொது நிதி (Public Finance) : கொலம்பியா பல்கலைக்கழகத்தில் The Evolution of Provincial Finance in British India என்ற தலைப்பில் அம்பேத்கர் காலனித்துவ நிதி அமைப்பு மற்றும் மத்திய-மாநில நிதி உறவுகளை ஆய்வு செய்தார். அரசாங்கத்தின் நிதி மற்றும் பயனற்ற செலவினங்களில் உள்ள சிக்கல்களை இந்த ஆய்வறிக்கை மூலம் விளக்கினார.

விவாசய துறை : அம்பேத்கர் இந்தியாவில் விவசாய துறையின் குறைந்த உற்பத்தித் திறனுக்கு சிறிய அளவிலான நிலப்பரப்பு மட்டுமே காரணமாக உள்ளது. சிறிய தொகுதி நிலங்களை ஒருங்கிணைத்து பெரிய அளவில் இடத்தில் விவாசாயம் செய்யும் போது உற்பத்தி அதிகரிக்கும், செலவுகளும் குறையும். மேலும் இணைக்கப்பட்ட நிலத்தை அரசு அல்லது விவசாயிகள் கூட்டுறவு மூலம் நிர்வாகம் செய்வது வாயிலா விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம், பொருளாதார வளர்ச்சியை அடைய முடியும் எனவும் கூறியுள்ளார்.
More From GoodReturns

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

கோயம்புத்தூர் மக்களே தங்கம் விலை உயர்ந்தது.. இனி ஒவ்வொரு ஸ்டெப்பும் கவனம் வைக்கனும்..!

சென்னை அசோக் நகர்.. ஒரே காரில்.. ரூ.77 கோடி தங்கம் - வெள்ளி.. பறக்கும் படை 'கப்'பென பிடித்தது..!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

ஈரான் போருக்கு மத்தியில் தங்க சந்தையில் புயலை கிளப்பிய புதின்!! வெளிவந்தது ரஷ்யாவின் தங்க புதையல்!!

தங்கம் விலை அதிரடி சரிவால் கோயம்புத்தூர் மக்கள் செம குஷி.. நகை வாங்குவோருக்கு பொன்னான வாய்ப்பு..!

மதுரை, திண்டுக்கல், தேனி மக்களே தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. நகை வாங்கும் முன் இதை படிங்க..!!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

தங்கம் விலை இனி எகிற போகுது: சிக்னல் தந்த உலக சந்தை..! ஈரான் போரில் நடந்த திடீர் திருப்பமே காரணம்?



Click it and Unblock the Notifications