வாஷிங்டன்: இந்திய நிறுவனங்களான எம்டிஎச் மற்றும் எவரெஸ்ட் ஆகியவை தயாரித்த மசாலாக்களில் கேன்சர் பாதிப்பை ஏற்படுத்தும் கெமிக்கல் இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகள் பற்றி, அமெரிக்க உணவு கட்டுப்பாடு அமைப்பு, தகவல்களை திரட்டி வருகிறது.
அமெரிக்க உணவு கட்டுப்பாடு அமைப்பு இந்திய மசாலாக்களில் கேன்சர் பாதிப்பை ஏற்படுத்தும் கெமிக்கல் இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகள் பற்றிய தகவல்களை திரட்டி வருகிறது.

அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பான எஃப்டிஏ இந்திய மசாலா தயாரிப்பு நிறுவனங்களான எம்டிஎச், எவரெஸ்ட் ஆகியவற்றின் சில தயாரிப்புகளில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய சில பொருட்கள் கலந்திருப்பதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து தகவல்களைத் திரட்டி வருகிறது.
எஃப்டிஏ (FDA) இந்த புகார்கள் பற்றி நிலவரத்தை அறிந்துள்ளது. அதுபற்றிய கூடுதல் விவரங்களை திரட்டி வருகிறது என்று எஃப்டிஏவின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
எம்டிஎச்சின் சில தயாரிப்புகளையும் எவரெஸ்ட்டின் மீன் மசாலாவையும் மூன்று மாதங்களுக்கு முன்பாக ஹாங்காங் அரசு விற்பனை செய்ய இடைக்கால தடைசெய்தது. எவரெஸ்ட் மசாலாக்களை தடை செய்து சிங்கப்பூரும் உத்தரவிட்டது.
இந்த மசாலாக்களில் அளவுக்கதிகமாக எத்திலின் ஆக்ஸைடு நிறைந்திருப்பதாக சிங்கப்பூர் குற்றஞ்சாட்டியுள்ளது.
இதை மனிதர்கள் சாப்பிட்டால் புற்றுநோய் ஏற்படும் எனத் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் அமெரிக்காவிலும் இந்த இந்திய மசாலாக்கள் மீது புகார்கள் எழுந்துள்ளன. இதை எஃப்டிஏ விசாரித்து வருகிறது. இதுகுறித்து உடனடியாக எம்டிஎச்சும் எவரெஸ்ட்டும் விளக்கம் எதுவும் தரவில்லை.
முன்னதாக எவரெஸ்ட் தனது மசாலாக்கள் சாப்பிடுவதற்கு பாதுகாப்பானவை என்று கூறியது. ஆனால் எம்டிஎச் இதுபற்றி இதுவரை எந்த பதிலையும் சொல்லவில்லை. இந்தியாவில் எம்டிஎச்சும் எவரெஸ்ட்டும் மிகவும் பிரபலமான மசாலா தயாரிப்பு நிறுவனங்களாக இருக்கின்றன.
ஐரோப்பா, ஆசியா, வடஅமெரிக்கா உள்பட பல நாடுகளில் இந்த மசாலாக்கள் அதிகமாக விற்கின்றன. இந்தியாவின் உணவு கட்டுப்பாடு நிறுவனமான ஃபுட் சேப்டி அண்டு ஸ்டாண்டர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியாவான ஃஎப்எஸ்எஸ்ஏஏ இந்த இரு நிறுவனங்களின் மசாலாக்களின் தரத்தைப் பற்றி ஆய்வு செய்து வருகிறது.
சிங்கப்பூர், ஹாங்காங் தடைகளைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இந்திய மசாலாக்கள் வாரியம்தான் இந்திய மசாலா ஏற்றுமதியின் கட்டுப்பாட்டாளர் ஆகும்.
இதுபற்றி வாரியம் கூறுகையில் எம்டிஎச், எவரெஸ்ட் மீதான புகார்கள் பற்றி ஹாங்காங், சிங்கப்பூர் நிர்வாகத்திடம் விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன. இந்தப் பிரச்னையின் தொடக்கம் பற்றி ஆய்வு செய்யப்படுகிறது. இரு நிறுவனங்களின் ஆலைகளிலும் விசாரணை நடைபெறுகிறது என்று தெரிவித்தது.
2019 ஆம் ஆண்டில் எம்டிஎச்சின் தயாரிப்புகளில் சில பேட்ச்களில் சால்மொனெல்லா கலந்திருந்ததால் அவை திரும்ப அனுப்பப்பட்டன.
Story written by: I.Jayachandran


Click it and Unblock the Notifications